இஸ்லாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (தமிழ்நாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர் , கல்வி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இசுலாமியர்களின் மேம்பாட்டிற்காக, கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் தமிழ்நாடு அரசு அரசாணை எண். 85. பிற்படுத்தப்பட்டவகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள் 29.7.2008 இன் படி பிற்படுத்தோர் வகுப்பினர்க்கான 30% இட ஒதுக்கீட்டில் இசுலாமிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு 3.5% உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[1][2]

பிற்படுத்தப்பட்ட இசுலாமிய வகுப்பினர்கள்[தொகு]

  1. அன்சார்
  2. தக்கானி முஸ்லீம்
  3. துதிகுலா
  4. லப்பை, இராவுத்தர் மற்றும் மரைக்காயர் உட்பட (அவர்கள் பேசும் மொழி தமிழ் அல்லது உருதுவாக இருப்பினும்)
  5. மாப்பிள்ளா
  6. ஷேக்
  7. சையத்

மேற்கோள்கள்[தொகு]

  1. "பிற்சேர்க்கை (ஈ) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியல் (இஸ்லாமியர்)". Archived from the original on 2015-10-22. பார்க்கப்பட்ட நாள் 2015-08-19.
  2. "Backward Class Mulsilm Communities (BCM List)". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2015-08-19.