உள்ளடக்கத்துக்குச் செல்

லப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லப்பை
மொத்த மக்கள்தொகை
சுமார் 1 மில்லியன்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளா, கருநாடகம், ஆந்திரப் பிரதேசம், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழி(கள்)
தமிழ், மலையாளம், உருது
சமயங்கள்
இசுலாம்

லப்பை (Labbay) எனப்படுவோர் தென்னிந்தியாவில் உள்ள ஒரு இசுலாமிய மக்களின் ஒரு பிரிவினர் ஆவர். இவர்கள் தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கருநாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் வசிக்கின்றனர். இவர்கள் உலகின் பிற பகுதிகளிலும் காணப்படுகிறார்கள். அங்கு இவர்கள் குடியேறிய இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வரலாறு[தொகு]

பாரசீக வளைகுடா மற்றும் அராபியத் தீபகற்பம் ஆகிய இடங்களில் தோன்றிய இவர்கள், வர்த்தகம் செய்வதற்காக, இந்தியாவிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மக்களுடன் கலந்து தொழில் செய்து வந்தனர்.[1] அத்துடன் இந்தியாவின், தென்மாநிலங்களிலிருந்து பலர் இசுலாம் மதத்திற்கு மாறினர். 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, தோல், புகையிலை, தானியங்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் வர்த்தகம் மற்றும் உற்பத்தியில் இவர்கள் பெருமளவில் பங்கு வகித்தனர்.

தற்போது இவர்கள் பெங்களூர், சென்னை, கடையநல்லூர், கீழக்கரை, கூத்தாநல்லூர், காயல்பட்டினம், அதிராம்பட்டினம், பழவேற்காடு, தொண்டி, தோப்புத்துறை, நாகூர், ஏர்வாடி மற்றும் வேலூர் மாவட்டத்தில் உருது மொழி பேசும் மக்கள் உள்ளனர்.

தமிழ்நாட்டில், வேலூர் மாவட்டத்தில் லப்பை சமூகத்தினர், பெருமளவில் வசிக்கின்றனர். இது பெரும்பாலும் வர்த்தகர்கள் மற்றும் தோல் உற்பத்தியாளர்களால் ஆனது. வேலூர், மேல்விசாரம், அம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், பேர்ணாம்பட்டு மற்றும் உமராபாத் ஆகிய இடங்களில் இந்த சமூகம் மக்கள் கணிசமான மக்கள் தொகையைக் கொண்டுள்ளனர். இந்த மக்கள் ஒரு தனித்துவமான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளனர், தமிழ் அல்லது மலையாளத்திற்குப் பதிலாக உருது மொழியை தங்கள் தாய்மொழியாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த சமூக மக்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டிச்சேரி, கடலூர், திருநெல்வேலி மற்றும் பிற கடலோர மாவட்டங்களிலிருந்து, குடிபெயர்ந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இதனையும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Thurston, Edgar; Rangachari, K. (1909). Castes and Tribes of Southern India. Vol. 6. Madras: Government Press. p. 151.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லப்பை&oldid=3490892" இலிருந்து மீள்விக்கப்பட்டது