இராவுத்தர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இராவுத்தர் அல்லது ராவுத்தர்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு, கேரளம் சிங்கப்பூர், மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா
மொழி(கள்)
தமிழ்
சமயங்கள்
சன்னி இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தமிழ் முஸ்லிம்

இராவுத்தர் அல்லது ராவுத்தர் (Rowther or Ravuthar) என்பவர்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய தமிழ் முஸ்லிம் மக்களில் ஒரு பிரிவினர் ஆவர்.இவர்கள் துருக்கிய மற்றும் ராஜபுத்திர வம்சாவளியாவர்.தமிழ் முஸ்லிம் பிரிவை சேர்ந்த இவர்கள், ஹனபி வழிமுறையை பின்பற்றுகின்றனர்.மேலும் இவர்கள் தென் இந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய முழுவதும் பரவியுள்ளனர்.

பெயர் காரணம்

'இராவுத்தர்' என்பதற்கு 'இராசபுத்திரன்' என்ற வடமொழிச் சிதைவு என்பது தமிழ் பேரகராதிக் குறிப்பு[1][2] 'குதிரை வீரன்' என்று பொருள்.[3] குதிரை வணிகம் செய்ய வந்த வீரர்கள் 'இராவுத்தர்' என்று அழைக்கப்பட்டனர்[4]. மரைக்காயர் (மரக்கலம்+ஆயர்) என்றால் கப்பல் மூலம் வணிகம் செய்து வந்தவர்கள் என்று சொல்கிறார்கள். அரபி மொழியில் 'ராபித்து' என்றால் 'எதிரியை எதிர்க்க சித்தமாக இருப்பவன்' அதாவது போருக்கு சித்தமாக இருப்பவர் என்று பொருள்[5]. சில வடமொழி அறிஞர்கள் ராஜபுத்திரர் (அரசகுமாரன்) என்பதன் சிதைவாக இருத்தல் கூடுமென்று எண்ணுகின்றனர்[6][1][2][7][8].

பெரும்பற்றப்புலியூர் நம்பியென்னும் புலவர் பெருமான் இயற்றிய திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்தில் இச்சொல் மூன்று இடங்களில் வந்துள்ளது.[9]

" ஐயமில் லாமன் முன்னின் றாவணி மூல நன்னாள் துய்யபே ருலகுக் கெல்லாந் துளங்கிரா வுத்த ராயன் மெய்யைமெய் யுடைய மெய்யன் மெய்யடி யானை வேண்டிப் பொய்யிலா மன்னன் காணப் பொய்ப்பரி மாற்றஞ் செய்தான் "[10]

என்று ஆசிரியர் கூறுகிறார். இதில், 'துய்ய பேருலகுக் கெல்லாந் துளங் கிரா வுத்த ராயன்' என்று குதிரைச் சேவகராக வந்தவரைச் சிறப்பிக்கின்றார். இராவுத்தராயன் என்பது இராவுத்தர்களுக்குத் தலைவனென்று பொருள்படும். பல குதிரைகளோடு வந்தாரென்பது வரலாறாதலின், அக்குதிரைகளை நடத்தும் இராவுத்தர்களுக்கு அவர் தனித்தலைவரானார். [11]

குதிரையைச் செலுத்தும் பேராற்றலையுடையவரென்று அரசர் முதலியோர் சிறப்பிக்கப்படுதல் தொன்று தொட்ட வழக்கம். அவ்வீரத்தாற் பெறப்படும் இராவுத்தரென்னும் சிறப்புப் பெயரைப் பிற்காலத்தில் அரசர்களும் அவர்களுடைய அதிகாரிகளும் உடையவர்களாயினர்.[12][13]

மூலமும் வரலாறும்

கி.பி 1212 ஆம் ஆண்டு சோழ மன்னர்களின் உதவியுடன் ஒட்டாமன் பேரரசை சேர்ந்த துருக்கிய வியாபாரிகள் கூட்டம் ஒன்று தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்தது. அவர்களுடன் வந்த இஸ்லாமிய போதனை குழுக்கள் தமிழ்நாட்டின் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களில் தங்கி இஸ்லாம் மதத்தை பரப்பினர். பின்னர் தஞ்சாவூர் வந்த இவர்கள், இஸ்லாமிய பிரச்சாரம் செய்யும் பொருட்டு அங்கேயே தங்கிவிட்டனர்.

அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியன் காலத்தில் அடுத்து பட்டத்துக்கு வருவது யார் என்ற குழப்பம் ஏற்பட்டது. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் புதல்வர்களான ஜதவர்மன் சுந்தர பாண்டியன் மற்றும் ஜதவர்மன் வீர பாண்டியன் ஆகிய இருவரும் அடுத்த பட்டத்துக்காக சண்டையிட்டனர். இவர்களில் சுந்தர பாண்டியன் தன் தந்தை மாறவர்மன் குலசேகர பாண்டியனை கி.பி 1310-ல் கொன்று விட்டான். பின்பு ஆட்சியை பிடிக்க தனக்கு உதவுமாறு டெல்லியை ஆண்ட தில்லி சுல்தான், அலாவுதீன் கில்ஜியை வேண்டினார். அவரது வேண்டுகோளை ஏற்ற அலாவுதீன் கில்ஜி, தனது தளபதி மாலிக் கபூர் என்பவரை தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைத்தார். மாலிக் கபூரும் அவ்வாறே சுந்தர பாண்டியனுக்கு உதவி செய்து அவரை கி.பி 1311இல் அரியணையில் ஏற்றினார்.

அதன் பிறகு சுந்தர பாண்டியனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தளபதி மாலிக் கபூர், சுந்தர பாண்டியனை முறியடித்து விட்டு மதுரை ஆட்சியை கைப்பற்றினார். அதன் பிறகு இன்னும் வேகமாக இஸ்லாம் மதத்தை அவர் தமிழ்நாட்டில் பரப்பினார். பொதுவாக அலாவுதீன் கில்ஜியும் சரி, மாலிக் கபூரும் சரி தமிழ்நாட்டை டெல்லி மொகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க விரும்பவில்லை. அவர்கள் இருவரின் விருப்பமும் தமிழ்நாட்டில் இஸ்லாம் மதத்தை பரப்புவது மட்டுமே. அந்த ஆசை நிறைவேறிவிட்டதாலும், மேலும் சில சிக்கல்களாலும் மாலிக் கபூர் சில ஆண்டுகளுக்குப் பிறகு மதுரையை விட்டு வெளியேறினார். ஆனால் அதன் பிறகும் அலாவுதீன் மட்டுமின்றி, குத்புதீன், நசிருதீன், அதில்ஷா போன்றவர்களின் ஆட்சி மதுரையில் இருந்தது. இவர்கள் தம் பெயர்களினால் நாணயங்கள் வெளியிட்டனர். இவர்களைப் பற்றிய தகவல்கள் புதுக்கோட்டையில் உள்ள இரு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது[4].

இவ்வாறு துருக்கியர்கள் தரங்கம்பாடி, நாகப்பட்டினம், காரைக்கால், முத்துப்பேட்டை, கூத்தாநல்லூர் மற்றும் பொதக்குடி ஆகிய ஊர்களிலும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் இஸ்லாத்தை பரப்பினர். இவ்வாறு வந்த இரு துருக்கிய வம்சாவளிகளின் வழித்தோன்றல்களே இராவுத்தர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். துருக்கியர்கள் வீரம் பொருந்திய குதிரைகளை நடத்துகிற வீரர்கள் என்பது பற்றியே இவர்களை தமிழர்கள் 'இராவுத்தர்' என்று அழைத்தனர் .[14]

மேலும் சில தகவல்கள்

 • இராவுத்தர்கள் தமிழ் மொழியை மட்டுமே பேசுகின்றனர், உருது பேசுவதில்லை.
 • இவர்களின் பெரும்பாலான பழக்கவழக்கங்கள், குறிப்பாக திருமணம் மற்றும் சுபவிழாக்கள் இந்து மதத்தினரின் சாயலை பெரும்பாலும் கொண்டுள்ளது.
 • முற்காலத்தில் பெரும்பாலும் இவர்களில் சிலர் அரசாட்சியும் பலர் சொந்தமாக குதிரைப்படைகளையும், வீரர்களையும் வைத்திருந்தனர்.[15] தற்போதும் இவர்கள் பெரும்பாலும் வணிகங்களிலேயே ஈடுபடுகின்றனர்.
 • இவர்கள் பேசும் தமிழில் ஓரிரு வார்த்தைகள் சிறிது வேறுபட்டுள்ளன. எடுத்துக்காட்டாக:- அப்பா - அத்தா, குழம்பு - ஆணம்.
 • இவர்கள் மற்ற தமிழ் முஸ்லிம் பிரிவுகளை போல் அல்லாமல் பெரும்பாலும் வெளிர் நிறத்திலேயே உள்ளனர். ஏனெனில் இவர்களே மற்ற இஸ்லாமிய பிரிவினரை விட அதிகம் துருக்கியர்களுடன் நெருக்கம் உடையவர்கள்.
 • இவர்களின் பெரும்பாலான சமய வழிபாட்டு முறைகள் துருக்கியர் மற்றும் இராக்கியர் பாணியிலேயே அமைத்துள்ளன.
 • பொதுவாக தமிழ்நாட்டில் 'துலுக்கர்' என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. இது 'துருக்கியர்' என்ற வார்த்தை மருவியதாலே வந்தது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

 1. 1.0 1.1 Corcuvai : Essays on some Tamil lexical words Front Cover M. Arunachalam p.no.27
 2. 2.0 2.1 Cor̲cuvai, Volume 1 Front Cover Mu Aruṇācalam Kānti Vittiyālayam, 1978 - Tamil language p.no.3,26,27
 3. கி. வா. ஜகந்நாதன் (2003). கந்தர் அலங்காரச் சொற்பொழிவுகள், பாகம் 3. அல்லயன்ஸ். பக். 94. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-3.pdf/104. பார்த்த நாள்: 2020-08-15. 
 4. 4.0 4.1 சுகுமாரன் கே.(2014).பொது அறிவுக்களஞ்சியம், சென்னை: நர்மதா பதிப்பகம். ப.162
 5. "பக்கம்:முஸ்லீம்களும் தமிழகமும்.pdf/54 - விக்கிமூலம்".
 6. Paruvatarājakula mīn̲avarin̲ ar̲iyappaṭāta marapukaḷum, kāṇikaḷum Front Cover Aruṇakiri Paramaciv p.no.151am
 7. Patiṉmūṉṟām nūṟṟāṇṭu Front Cover M. Arunachalam Ti Pārkkar, 2005 - Tamil literature p.no.193
 8. "nalluraikkOvai -2 of u. vE. cAminAta aiyar (in tamil script, unicode format)".
 9. "nalluraikkOvai -2 of u. vE. cAminAta aiyar (in tamil script, unicode format)".
 10. "nalluraikkOvai -2 of u. vE. cAminAta aiyar (in tamil script, unicode format)".
 11. "nalluraikkOvai -2 of u. vE. cAminAta aiyar (in tamil script, unicode format)".
 12. Nalluraikkovai - Vol 2 book of u.ve caminatha iyar https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html 8.இராவுத்தர்
 13. "nalluraikkOvai -2 of u. vE. cAminAta aiyar (in tamil script, unicode format)".
 14. Volume 5 of [Śrī Vaḷḷimalai Svāmi Saccitānanta Tirup Pukal̲ Sapai] Svāmikaḷin̲ Nūrāvatu Jayanti Vil̲ā veḷiyīṭṭu malar Author Ramaswamy Ayyar Kalyanasundaram Edition 2 Publisher ்ீஸர ்விளளைமல் ாஸிவம ்ஸிசாசத்நாநதி ுத்ருபப்கழ ைஸப, 1970 Page.130
 15. Nalluraikkovai - 2 book of u.ve caminatha iyar https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0461.html 8.இராவுத்தர்
 • J. P. Mulliner. Rise of Islam in India. University of Leeds chpt. 9. Page 215
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராவுத்தர்&oldid=3090271" இருந்து மீள்விக்கப்பட்டது