அருந்ததியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அருந்ததியர் அல்லது சக்கிலியர் இலங்கையிலும் தமிழ் நாட்டிலும் வசித்து வரும் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்கள் குழுவாவார்கள். இவர்கள் தலித்து என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் ஆந்திராவிலிருந்து தெலுங்கு மொழி பேசும் மக்களுடன் விஜயநகர ஆட்சியின் போது விஜயநகர மன்னர்களால் தமிழ் நாட்டிற்கு குடியமர்த்தப்பட்டதாக கருதப்படுகிறது. [1]

பெயர்க் காரணம்[தொகு]

சக்கிலியர் என்பது ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல் மாறி சக்கிலி என்று அழைக்கப்படுகிறது. ஸ்சட்குழி என்ற சமற்கிருத சொல்லுக்கு “செத்த மாட்டை உண்பவன்” அல்லது “அதிக இறைச்சி உண்பவன்” என்று பொருள். சக்கிலியர் என்ற பெயரை சக்கு + கிலி என்று பிரிக்கலாம். சக்கு என்றால் அடி. கிலி என்றால் பயம். சக்கிலியர் என்றால் பயந்தவர் என்பது பொருளாகும்.[2]

விஸ்வநாத நாயக்கர் (1529-1564 ஆட்சியாண்டு) காலகட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தெலுங்கர்கள் மதுரைப் பகுதியில் வந்து குடியேறினர். இவர்களுடன் அருந்ததியர்களும் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.[3][4]

இவர்களின் முக்கியத் தொழிலான கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து தாழ்வாக நிைலக்கு தள்ளப்பட்ாா்கள் வரலாற்றின் ஒரு காலப்பகுதியில், இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு மக்கள் குழுவினர் பலவந்தமாகவும், சமயக் கட்டுப்பாடுகள் மூலமாகவும் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனடிப்படையில் இந்தியா முழுவதும் அருந்ததியருக்கு (சக்கிலியர்) இணையான சாதிகளைக் காணலாம். வட இந்தியாவின் சண்டாலா, பாங்கி போன்றவை உதாரணங்களாகும்.

இவர்களின் முக்கிய தொழில் துப்புரவுப்பணியாளர்கள், கழிவு அகற்றல் என்றபடியால் கிராமப்புறங்களில் மற்ற தலித் பிரிவினராலேயே இவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். [5]இவர்கள் துப்புரவுப்பணி தொழிலுக்கு மேலதிகமாக மேற்கு மற்றும் வட தமிழ்நாட்டில் ஒரு சிலர் விவசாயத் தொழிலாளிகளாகவும் ஈடுபடலாம்.

அருந்ததியர் மக்களின் தொழில் அன்று கிணற்றுப் பாசனத்தைக் கொண்டிருந்த விவசாயத்திற்குத் தேவையான பரியை மூட்டித் தருவது, போர்முனைகளுக்குத் தேவையான தோல்கருவிகளைத் தயாரிப்பது, விவசாயப் பணிகளில் ஈடுபடுவது, செருப்பு தைப்பது என பெரும்பாலும் தோல்பணியாளர்களாகவே அறியப்பட்ட இம்மக்கள், மின்சாரம்- பம்புசெட்- பிளாஸ்டிக்- ரப்பர்- என்று உருவான மாற்றங்களால் தங்களது பாரம்பரியத் தோல் தொழிலை இழந்து துப்புரவுப் பணியாளர்களாக சீரழிக்கப்பட்டுள்ளார்கள்.

உள் ஒதுக்கீடு[தொகு]

மற்ற தலித் சமுதாயத்தவரை விட இவர்களின் கல்வியறிவு அன்னளவாக 50% குறைவு ஆகும். பல கட்ட போராட்டங்களின் விளைவாக [6], 2009 ஆம் ஆண்டு முதல் தமிழக அரசு இவர்களுக்கு 18% இட ஒதுக்கீட்டில் 3 சதவிகித உள்ஒதுக்கீட்டை வழங்கியது.[7]

உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்குகள்[தொகு]

உள்ஒதுக்கீட்டை ரத்து செய்திட வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இராஜசேகர் சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அப்போதைய மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோர் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வழக்கறிஞர் உ. நிர்மலாராணி மூலமாக உயர்நீதிமன்றத்தில் இடைமனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள பஞ்சாப் மாநில உள்ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு வரும் வரை இவ்வழக்கை ஒத்தி வைப்பதாகவும், அது வரை உள்ஒதுக்கீடு தொடரும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து, உள்ஒதுக்கீட்டிற்கு தடைகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி வழக்கு தொடர்ந்தார்.[8]சென்னை உயர் நீதிமன்றத்திலும் உள்ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் பி.சம்பத் ஆகியோர் இடைமனு தாக்கல் செய்தனர்[9].

அரசியல் பங்களிப்புகள்[தொகு]

 • வி.பி.துரைச்சாமி - தமிழ்நாடு சட்டப் பேரவைத் துணைத் தலைவர்.
 • அருந்தமிழர் முன்னேற்றக் கழகம்
 • தமிழ்நாடு சாக்கிய அருந்ததியர் சங்கம்
 • அருந்ததியர் சங்கம்,
 • அருந்ததியர் மகஜனசபை,
 • ஆதித்தமிழர் பேரவை
 • தமிழ்நாடு அருந்ததியர் ஊழியர் சங்கம்,
 • சமத்துவ சமாஜம்,
 • டாக்டர் அம்பேத்கர் அருந்ததியர் சங்கம்,
 • தமிழ்நாடு அனைத்து அருந்ததியர் சங்கக் கூட்டமைப்பு,
 • மும்பை அருந்ததியர் சங்கம்,
 • அருந்ததியர் கலை இலக்கியக் கழகம்,
 • அருந்தமிழர் விடுதலை இயக்கம்.
 • ஆதித்தமிழர் விடுதலை முண்ணனி
 • புரட்சி புலிகள்
 • அருந்ததியர் மக்கள் இயக்கம்.
 • தழிழ் புலிகள் கட்சி.

உசாத்துணை[தொகு]

தமிழகத்தில் தலித்துகளின் நிலை - அருந்ததியரின் அவலம்

மேற்கோள்கள்[தொகு]

 1. அருந்ததியரின் அவலம்
 2. நெல்லை. சு. தாமரைப் பாண்டியன் எழுதிய “நாட்டார் வழக்காறுகளில் மக்கள் இடம் பெயர்வும் வரலாறும் நூல், பக்கம்: 71.
 3. http://books.google.co.in/books?id=Xcpa_T-7oVQC&pg=PA125&dq=chakkiliyan+from+andhra&hl=en&sa=X&ei=NkHzU5WPDdOfugTq74LIBg&ved=0CBoQ6AEwAA#v=onepage&q=chakkiliyan%20from%20andhra&f=false
 4. http://books.google.co.in/books?id=H4q0DHGMcjEC&pg=PA41&dq=chakkiliyan+from+andhra&hl=en&sa=X&ei=NkHzU5WPDdOfugTq74LIBg&ved=0CCQQ6AEwAg#v=onepage&q=chakkiliyan%20from%20andhra&f=false
 5. "தமிழகத்தில் தலித்துகளின் நிலை" (தமிழ் மொழி). பிபிசி (மார்ச் 16, 2006). பார்த்த நாள் சனவரி 1, 2015.
 6. ச .விஸ்வநாதன் (Volume 26 - Issue 01 :: Jan. 03-16, 2009). "Separate slice". Frontline. பார்த்த நாள் 19 ஆகத்து 2014.
 7. http://www.hindu.com/thehindu/thscrip/print.pl?file=20090116260110500.htm&date=fl2601/&prd=fline&
 8. "Plea questions sub-quota for Arunthathiyars" (17 ஆகத்து 2012). பார்த்த நாள் 19 ஆகத்து 2014.
 9. "அருந்ததியர் உள் ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில் மனு :: ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத் தாக்கல் செய்தனர்". தீக்கதிர் தமிழ் நாளிதழ் (20 நவம்பர் 2013). பார்த்த நாள் 19 ஆகத்து 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருந்ததியர்&oldid=2126373" இருந்து மீள்விக்கப்பட்டது