உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் தட்பவெப்ப நிலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை (Climate of India) (இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை) பலதரப்பட்டதாக உள்ளது. அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண் முறை, உணவு, உறைவிடம், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனித இனம் இன்றும் பூமியில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை. காற்று[1], நீர், மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள். தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான வெப்பநிலை, காற்று அழுத்தம், காற்று வீச்சு, ஈரப்பதம் மற்றும் மழையானது (இது நீராகவோ, உறைந்த தூவிப்பனி வீழ்வாகவோ இருக்கலாம்) இப்பூமியில் இடத்துக்கு இடம் மாறுபட்டுள்ளது. தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறை (vegetation) அமைகிறது.[2][3][4]

காரணிகள்

[தொகு]

இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைப்பு அதாவது அதன் நிலப்பரப்பின் அமைப்பு வேறுபாடுகளாலும், வடக்கில், காஷ்மீரின் காலநிலைக்கும் தெற்கே கன்னியாகுமரியின் காலநிலைக்கும் இடையே பெரும் வேறுபாடுகள் உண்டு. வடக்கு - வடகிழக்காகப் பரவியுள்ள இமயமலை நடு ஆசியாவிலிருந்து கடுங்குளிருடன் வீசும் பனிமுனைக் காற்றினை தடுத்து நிறுத்துகின்றது. வடமேற்கேயுள்ள தார் பாலைவனத்தில் ஏற்பாடும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தெற்கிலிருந்து அதிக ஈரப்பதத்துடன் வீசும் காற்றினை இந்திய மூவலந்தீவை ( தீபகற்பத்தை) முக்கோண அமைப்பானதும் மற்றும் அதனுள் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை, ஷில்லாங் பீடபூமி திசையை மாற்றி இந்தியாவின் தெற்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் மலைவிளைவு மழை (Orographic Rainfall) பொழியச்செய்கிறது. மேலும் வடக்கே நோக்கி செல்லும் இக்காற்றினை இமயமலை தடுத்து நிறுத்துகிறது. இந்தியத் தீபகற்பத்தை சுற்றியுள்ள அரபிக் கடல், இந்தியப் பெருங்கடலும், வங்காள விரிகுடாவும் கடலோரப்பகுதிகளில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கிறது; மேலும் மழைக்காலங்களில் குளிரின் தாக்கத்தை குறைத்து இந்தியாவின் காலநிலையில் வலுவான செல்வாக்குச் செலுத்துகின்றன. இந்தியாவில் பலதரப்பட்ட கலநிலைகள் மற்றும் சிற்றிடத் தட்பவெப்பம் (Micro Climate) உள்ளதால் இங்குள்ள காலநிலைகளின் ஆய்வு என்பது ஒரு சிக்கலான தலைப்பே.

மண்டலங்கள்

[தொகு]
இந்தியாவின் காலநிலை பிரிவுகள், (கொப்பேன் காலநிலை வகைப்பாட்டை சார்ந்தது)
E (ETh)
C (Cfa)
A (Aw)
A (Am)
B (BSh)
B (BWh)

கடக ரேகை (Tropic of Cancer) இந்தியாவை இரண்டு காலநிலைப் பகுதிகளாக அதாவது வெப்பமண்டலம் (Tropical) மற்றும் கீழ்வெப்பமண்டலம் (Sub-Tropical) என்று பிரித்தாளும், இமய மலையின் தாக்கத்தால் இந்தியாவை ஒரு வெப்பமண்டலம் (Tropical) பகுதியாக கருத வேண்டும். மேலும் இந்தியா முழுவதும் பருவ மழைக்கு ஏற்ப தட்பவெப்பநிலை உள்ளது. ஆனால் வானிலையிலுள்ள மூலகங்களின் பிணைப்புகளால் இந்தியாவின் காலநிலையில் பல பிராந்திய வேறுபாடுகள் உள்ளன. இவ்வேறுபாடுகள் பருவ கால தட்பவெப்பநிலையின் உப மாதிரிகளாக பிரதிநிதிகிக்கின்றது. இதை அடிப்படையாகக்கொண்டே காலநிலை மண்டலங்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்படுகிறது.

காலநிலைகளை வகைப்படுத்துவது ஒரு சிக்கலான காரியம். ஆனாலும் பல காலநிலை வள்ளுனர்களால் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுரைகளை நமக்கு தந்துள்ளனர் அதிலொன்று கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறை. கோப்பென் காலநிலை வகைப்பாடு படி மாதந்திர தட்பவெப்பம் மற்றும் மழையளவை அடிப்படையாக கொண்டு காலநிலை மண்டலங்களை வகைப்படுத்தியுள்ளது கொப்பெனின் காலநிலை வகைப்படுத்தும் திட்டமுறைப்படி இந்தியாவில் ஐந்து முக்கிய காலநிலை மண்டலங்கள் உள்ளன. அவை,

  1. வெப்பமண்டல காலநிலை (Tropical Climate)
  2. வறண்ட காலநிலை (Dry Climate)
  3. குறை மித வெப்பமண்டல காலநிலை (Warm Temperate Climate)
  4. குளிர்ந்த மித வெப்பமண்டல காலநிலை (Cool Temperate Climate)
  5. துருவ காலநிலை (Ice/Polar Climate)

பருவங்களின் தாளலயம்

[தொகு]

ஒரு வருடத்திற்கு இந்தியாவில் நான்கு காலநிலைப் பருவங்களை வளி மண்டல ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுகொள்ளபட்டுள்ளது. அவை:

  1. குளிர் காலம்
  2. கோடைக்காலம்
  3. தென்மேற்கு பருவப்பெயற்சிக் காற்று மழைக் காலம்
  4. வடகிழக்குப் பருவப்பெயற்சிக் காற்று மழைக் காலம்

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. தமிழில் காற்றை, வளி, கால் என்றும் அழைப்பதுண்டு
  2. Rowley DB (1996). "Age of initiaotion of collision between India and Asia: A review of stratigraphic data". Earth and Planetary Science Letters 145 (1): 1–13. doi:10.1016/s0012-821x(96)00201-4. Bibcode: 1996E&PSL.145....1R. http://www.gps.caltech.edu/~avouac/GE277/Rowley96.pdf. பார்த்த நாள்: 2007-03-31. 
  3. Water Resources of India: Physiographic Conditions, Ministry of Water Resources, Government of India
  4. Peel, M. C.; Finlayson B. L.; McMahon, T. A. (2007). "Updated world map of the Köppen–Geiger climate classification". Hydrol. Earth Syst. Sci. 11 (5): 1633–1644. doi:10.5194/hess-11-1633-2007. பன்னாட்டுத் தர தொடர் எண்:1027-5606. Bibcode: 2007HESS...11.1633P. http://www.hydrol-earth-syst-sci.net/11/1633/2007/hess-11-1633-2007.html.  (direct: Final Revised Paper)

வெளி இணைப்புகள்

[தொகு]

General overview

Maps, imagery, and statistics

Forecasts

மேற்கோள்கள்

[தொகு]