வங்காள மறுமலர்ச்சி
வங்காள மறுமலர்ச்சி (Bengal renaissance), (Bengali: বাংলার নবজাগরণ; Bāṅlār nabajāgaraṇ; பா³ங்லார் நப³ஜாக³ரண்) பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில், 19-ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு முடிய, வங்காள அறிஞர்கள், வங்காளப் பண்பாடு, சமூக, கல்வி, கலைத்துறைகளை மறுமலர்ச்சி அடையச் செய்தனர்.
19-ஆம் நூற்றாண்டில் இராசாராம் மோகன் ராய் (1772–1833), வங்காளச் சமூகத்தில் உடன்கட்டை ஏறல், விதவைத் திருமணம் போன்ற சமூகத் சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததன் மூலம், வங்காளத்தில் மறுமலர்ச்சி இயக்கத்தை துவக்கி வைத்தார். 20-ஆம் நூற்றாண்டில் இதனை இரவீந்திரநாத் தாகூர் (1861–1941) முடித்து வைத்தார்.
சத்யஜித் ராய் (1921-1992) போன்றவர்கள் திரைப்படத்துறையில் புதுமையைப் புகுத்தினார்கள். [1] 19-ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சமய, சமூக சீர்திருத்தவாதிகள், பல்துறை அறிஞர்கள், இலக்கிய அறிவாளர்கள், இதழாளர்கள், நாட்டுப் பற்று பேச்சாளர்கள் மற்றும் அறிவியலாளர்கள் இணைந்து வங்காள மறுமலர்ச்சியை துவக்கி வைத்தனர். [2]
பின்னணி
[தொகு]பிரித்தானிய இந்தியாவின் குடிமைப்பட்ட வங்காளத்தின் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் பெண்கள், திருமணம், வரதட்சணை, உடன்கட்டை ஏறல், சாதிய அமைப்பு மற்றும் சமயம் தொடர்பாக ஆத்திகர்களிடம் பல கேள்விகள் எழுப்பினர். 18-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஹென்றி லூயிஸ் விவியன் [3] எனும் பிரித்தானிய இளைஞர் தலைமையில், பகுத்தறிவு மற்றும் நாத்திக எண்ணம் படைத்த வங்காள இளைஞர்கள் இளய வங்காளம் (Young Bengal) எனும் சமூக சீர்திருத்த இயக்கத்தை நிறுவினர்.

வங்காளத்தில் சமூக - சமயச் சீர்த்திருத்திற்காக இராசாராம் மோகன் ராய்யால் துவக்கப்பட்ட பிரம்ம சமாஜம் அமைப்பு, வங்காளச் சமூக, கல்வி, சமய மறுமலர்ச்சிக்கு அடித்தளமிட்டது.[4] பின்னாளில் பிரம்ம சமாஜ உறுப்பினர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
1857 சிப்பாய்க் கிளர்ச்சிக்குப் பின்னர் வங்காள இலக்கியம் பெருமளவில் வளர்ச்சியுற்றது. கல்விக்கு அடித்தளமிட்ட இராசாராம் மோகன் ராய் மற்றும் ஈஸ்வர சந்திர வித்யாசாகர் ஆகியோரை அடுத்து வந்த பங்கிம் சந்திர சட்டர்ஜி, சரத்சந்திர சட்டோபாத்யாயா, இரவீந்திரநாத் தாகூர் போன்றவர்கள் வங்காள இலக்கியத்தை விரிவுப்படுத்தினர்.[5]

இரவீந்திரநாத் தாகூர் நிறுவிய சாந்திநிகேதன் எனும் கல்வி நிறுவனம் கல்வித் துறையை சீரமைத்தது.[6]
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
[தொகு]சத்தியேந்திர நாத் போசு, அனில் குமார் கெயின் [7] பிரசந்தா சந்திரா மகாலனோபிசு, ஜகதீஷ் சந்திர போஸ், மேகநாத சாஃகா போன்ற அறிவியலாளர்கள் வங்காள மறுமலர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றனர்.
-
முகமது பைசல் ரப்பி
கலை மற்றும் இலக்கியம்
[தொகு]வங்காள வரலாற்று அறிஞரான ரமேஷ் சந்திர தத் கூறுகிறார்:[8]
வங்காளத்தை ஆங்கிலேயர்கள் கைப்பற்றியதால் ஏற்பட்ட அரசியல் எழுச்சியுடன், சமயம் மற்றும் சமூக எண்ணங்கள் மற்றும் கருத்துக்களில் அதிக புரட்சியை தூண்டியது ... கடவுளர்கள் மற்றும் தேவதைகள், அரசர்கள் மற்றும் ராணிகள் மற்றும் இளவரசர்கள் கதைகளிலிருந்து, வாழ்க்கையின் எளிய நடத்தை முறைகளைக கற்றுக் கொள்ளவேண்டும். மேலும் குடிமக்கள் மற்றும் விவசாயிகளின் நலனில் அக்கறை கொள்ள வேண்டும்... ஒவ்வொரு புரட்சியிலும் மக்கள் வீரியத்துடன் கலந்து கொள்வது என்பது தற்போதைய ஆங்கிலேயர் ஆட்சி விதிவிலக்கு அல்ல. கடந்த ஒரு நூற்றாண்டில் வங்காள இலக்கிய இலக்கியத்தை வளர்த்தெடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்களின் வரிசையில இராசாராம் மோகன் ராய், அட்சய குமார் தத், ஈஸ்வர சந்திர வித்யாசாகர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, இரவீந்திரநாத் தாகூர், தோரு தத், மைக்கேல் மதுசூதன் தத், ஹேம சந்திரா பானர்ஜி, ரமேஷ் சந்திர மஜும்தார், சத்யஜித் ராய் மற்றும் தீன பந்து மித்ரா உள்ளனர். தற்போதைய 20ம் நூற்றாண்டில், 1975 வரையிலான கால கட்டத்தில் வங்காள இலக்கியத்தில் முதல் முறையாக உரைநடை, வெற்று உரை, வரலாற்று புனைவுகள் மற்றும் நாடகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன ...
-
மைக்கேல் மதுசூதன் தத்
-
சுகுமார் ராய்
சமயம் மற்றும் ஆன்மீகம்
[தொகு]வங்காள மறுமலர்ச்சி காலத்தில் இந்து சமயத்திற்கும், ஆன்மீகத்திற்கும் தொண்டாற்றியவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள்; சைதன்யர், ராம்பிரசாத் சென், இராமகிருஷ்ணர், பரமஹம்ச யோகானந்தர், பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, விவேகானந்தர், சுவாமி அபேதானந்தர், சகோதரி நிவேதிதை, அரவிந்தர், பக்தி சித்தாந்த சரஸ்வதி, கேசவ சந்திர சென் ஆனந்தமாயி மா மற்றும் பலர் ஆவார்.
அரசியல் எழுச்சி
[தொகு]இந்திய விடுதலை இயக்கத்திற்கு புத்துயிர்யூட்டி, விடுதலைப் போராட்டத்தை எழுச்சியூட்டியர்களில் குறிப்ப்பிட்டத்தக்கவர்கள்; உமேஷ் சந்திர பானர்ஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, பிபின் சந்திர பால், சரத் சந்திர போசு, சித்தரஞ்சன் தாஸ், அரவிந்தர், ராஷ் பிஹாரி போஸ், கமலாதேவி சட்டோபாத்யாய், சுபாஷ் சந்திர போஸ், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் ஜத்தீந்திர நாத் தாஸ் மற்றும் குதிராம் போஸ்.
வங்காள மறுமலர்ச்சிக்கு பங்களித்த நிறுவனங்கள்
[தொகு]- ஆசியச் சங்கம் (1784)
- வில்லியம் கோட்டை கல்லூரி, (1800)
- செரம்பூர் கல்லூரி (1817)
- கொல்கத்தா பள்ளி நூல் கழகம் (1817)
- இந்து பள்ளிக்கூடம் (1817)
- ஹரே பள்ளிக்கூடம் (1818)
- சமஸ்கிருதக் கல்லூரி (1824)
- ஸ்காட்டிஸ் சர்ச் கல்லூரி (1830)
- கொல்கத்தா மருத்துவக் கல்லூரி (1835)
- மூட்டி லல் சீல்ஸ் பள்ளி & கல்லூரி (1842)
- இராஜதானி கல்லூரி, கொல்கத்தா (1817)
- இந்தியப் அறிவியல் பொறியியல் & தொழில்நுட்பக் கல்லூரி, சிப்பூர் (1856)
- கொல்கத்தா பல்கலைக்கழகம் (1857)
- வித்தியசாகர் கல்லூரி (1872)
- இந்து மகளிர் கல்லூரி (1873)
- வங்காள மகளிர் கல்லூரி (1876)
- பயிடுதல் அறிவியலுக்கான இந்தியச் சங்கம் (1876)
- பிதுனே கல்லூரி (1879)
- ரிப்பன் கல்லூரி (1884) (தற்போது சுரேந்திரநாத் கல்லூரி)
- கல்விக்கான தேசியக் கழகம், வங்காளம் (1906) (தற்போது ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்)
- விசுவ பாரதி பல்கலைக்கழகம் (1921)
- தாக்கா பல்கலைக்கழகம் (1921)
- மகாராஜா மனிந்திர சந்திர கல்லூரி (1941)
- சேத் அனந்தராம் ஜெய்புரியா கல்லூரி (1945)
-
விஸ்வபாரதி பல்கலைக்கழகம்
-
கொல்கத்தா ராஜதானிக் கல்லூரி
-
ஜாதவ்பூர் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ History of the Bengali-speaking People by Nitish Sengupta, p 211, UBS Publishers' Distributors Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7476-355-4.
- ↑ Sumit Sarkar, "Calcutta and the Bengal Renaissance", in Calcutta, the Living City ed. Sukanta Chaudhuri, Vol I, p. 95.
- ↑ Henry Louis Vivian Derozio
- ↑ "Reform and Education: Young Bengal & Derozio", Bengalinet.com
- ↑ History of Bengali-speaking People by Nitish Sengupta, p 253.
- ↑ Kathleen M. O'Connell, "Rabindranath Tagore on Education", infed.org
- ↑ Anil Kumar Gain
- ↑ Cultural Heritage of Bengal by R. C. Dutt, quoted by Nitish Sengupta, pp 211-212.
மேலும் படிக்க
[தொகு]- Chatterjee, Pranab (2010). A Story of Ambivalent Modernization in Bangladesh and West Bengal: The Rise and Fall of Bengali Elitism in South Asia. Peter Lang. ISBN 9781433108204.
- Dasgupta, Subrata (2005). Twilight of the Bengal renaissance: R.K. Dasgupta & his quest for a world mind. the University of California: Dey's Publishing.
- Dasgupta, Subrata (2009). The Bengal Renaissance. Permanent Black. ISBN 978-8178242798.
- Dasgupta, Subrata (2011). Awakening: The Story of the Bengal Renaissance. Random House India. ISBN 978-8184001839.
- Dhar, Niranjan (1977). Vedanta and the Bengal Renaissance. the University of Michigan: Minerva Associates. ISBN 9780883868379.
- Fraser, Bashabi edited Special Issue on Rabindranath Tagore, Literary Compass, Wiley Publications. Volume 12, Issue 5, May 2015. See Fraser's Introduction pp. 161-72.
பன்னாட்டுத் தர தொடர் எண் 1741-4113.
- Kabir, Abulfazal M. Fazle (2011). The Libraries of Bengal, 1700-1947: The Story of Bengali Renaissance. Promilla & Co. Publishers. ISBN 978-8185002071.
- Kopf, David (1969). British Orientalism and the Bengal Renaissance. University of California Press. ISBN 978-0520006652.
- Kumar, Raj (2003). Essays on Indian Renaissance. Discovery Publishing House. ISBN 978-81-7141-689-9.
- Marshall, P. J. (2006). Bengal: The British Bridgehead: Eastern India 1740-1828 (The New Cambridge History of India). கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 978-0521028226.
- Mittra, Sitansu Sekhar (2001). Bengal's Renaissance. Academic Publishers. ISBN 9788187504184.
- Pal, Bipin Chandra; Cakrabartī, Jagannātha (1977). Studies in the Bengal renaissance. the University of California: National Council of Education, Bengal.
- Sastri, Sivanath. A History of the Renaissance in Bengal: Ramtanu Lahiri, Brahman and Reformer, London: Swan, Sonnenschein (1903); Kolkata: Renaissance (2002).
- Sastri, Sibnath (2008). Ramtanu Lahiri, Brahman and Reformer: A History of the Renaissance in Bengal. BiblioLife. ISBN 978-0559841064.
- Sen, Amit (2011). Notes on the Bengal Renaissance. Nabu Press. ISBN 978-1179501390.
- Travers, Robert (2007). Ideology and Empire in Eighteenth-Century India: The British in Bengal. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். ISBN 978-0521059688.
வெளி இணைப்புகள்
[தொகு]- "The Tagores and Society", Rabindra Bharati Museum Kolkata பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம்
- Copf, David (2012). "Bengal Renaissance". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.