இந்திய மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்தியா ஒரு பன்மொழிச் சமூகம். உலகில் அதிக மொழிகள் வழங்கு நிலப்பரப்புகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் 1652-க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன. 2001 கணிப்பின் படி இந்தியாவில் 29 மொழிகள் பத்து லட்சத்துக்‌கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. 122 மொழிகள் 10 000 மேற்பட்ட மக்களால் பேசப்படுகின்றன. இந்திய மொழிகள் என்ற இக் கட்டுரை இந்தியாவில் வழங்கும் மொழிகளைப் பற்றியதாகும்.

பெரும்பாலான மக்கள் (70%) இந்திய-ஐரோப்பிய மொழிகளைப் பேசுகின்றனர். இரண்டாவதாக 22% மக்கள் தமிழ் உட்பட்ட திராவிட மொழிகளைப் பேசுகின்றனர். இங்கு சீன-திபெத்திய மொழிகள், ஆஸ்திர-ஆசிய மொழிகள் மற்றும் வேறு சில மொழிகளும் பேசப்படுகின்றன.இந்தி, மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி போன்ற மொழிகள் வட இந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகள் தென்னிந்தியாவில் பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.

இந்தியாவின் அலுவல் மொழி இந்தி ஆகும். இந்தியாவின் இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகும். இந்தியாவின் அலுவல் மொழிகளாக 22 மொழிகள் அங்கரிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:

 1. அசாமி -
 2. வங்களம் -
 3. குசராத்தி -
 4. இந்தி -
 5. கன்னடம் -
 6. காஷ்மீரி மொழி -
 7. கொங்கணி மொழி -
 8. மலையாளம் -
 9. மணிப்புரி -
 10. மராத்தி -
 11. நேபாளி -
 12. ஒரியா மொழி -
 13. பஞ்சாபி -
 14. சமசுகிருதம் -
 15. சிந்தி -
 16. தமிழ் -
 17. தெலுங்கு -
 18. உருது -
 19. மைதிலி மொழி -
 20. போடோ மொழி -
 21. சந்தாளி மொழி -
 22. தோக்ரி மொழி -

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_மொழிகள்&oldid=2940819" இருந்து மீள்விக்கப்பட்டது