இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலி, முதுமலை, நீலகிரி பல்லுயிர் வலயம், மார்ச் '21

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள் (Biosphere reserves of India)என்பவை இந்தியாவின் இயற்கை மூலாதாரங்களை பேணிக்காக்கவும் அதன் நிலையான பயன்பாட்டைப் பெறவும் அறிவிக்கப்பட்ட தனிச்சிறப்பு வாய்ந்த காப்பகப் பகுதிஆகும்.[1]1971 ஆம் ஆண்டு யுனெஸ்கோவால் மனிதனும் உயிர்க்கோளமும் (Man and the Biosphere Programme) என்ற திட்டத்தின் கீழ் துவக்கப்பட்டதே உயிர்க்கோளக் காப்பகமாகும்.[2]உயிர்க்கோளத்தைப் பாதுகாப்பதற்காக உலகளாவிய ஒத்துழைப்பைப் பெறுவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.[3]

உயிர்க்கோள மண்டலங்கள்[தொகு]

இவ்வமைப்பின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் பல்லுயிர்ப்பெருக்கத்தைக் காப்பதற்காக உயிர்க்கோளக் காப்பகம் குறித்து விவாதிக்கப்பட்டது. நில அமைப்பு மற்றும் இயற்கை சூழலமைப்பில் பல்லுயிரி வளத்தைப் பாதுகாத்தல், உயிர்க்கோளக் காப்பகத்தைச் சார்ந்து வாழும் மக்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல், நீண்ட கால சுற்றுச்சூழல் பயிற்சி மற்றும் ஆய்வுக்கு உகந்த இடமாக அவற்றை இருக்க வைத்தல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் உயிர்க்கோளக் காப்பகங்கள் மூன்று மண்டலங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:

  1. மைய மண்டலம்
  2. தாங்கல் மண்டலம்
  3. நிலைமாறு மண்டலம்

மைய மண்டலம்[தொகு]

மைய மண்டலம் என்பது தீவிர பாதுகாப்பிற்கு உட்பட்ட மண்டலமாகும். இம்மண்டலத்திலுள்ள சூழலமைப்பை கண்காணித்தல், ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், சூழல் சார்ந்த சுற்றுலா மற்றும் கல்விக்காக பயன்படுத்துதல் ஆகியன இதன் செயல்பாடுகளாகும்.

தாங்கல் மண்டலம்[தொகு]

பொதுவாக இம்மண்டலம் மைய மண்டலத்தை சுற்றி காணப்படும் மண்டலமாகும். இங்கு சுற்றுச்சூழல் கல்வி, ஆராய்ச்சி மற்றும் இயற்கை சுற்றுலா போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த செயல்பாடுகள் நடைபெறும்

நிலைமாறு மண்டலம்[தொகு]

இப்பகுதியின் மூலாதாரங்களின் நிலையான மேம்பாட்டிற்கு உண்டான செயல்பாடுகளை மேற்கொள்ளும் மண்டலமாகும். இம்மண்டலத்தில் பலதரப்பட்ட விவசாய நடவடிக்கை, குடியிருப்பு மற்றும் இன்னும் பிற பயன்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இப்பகுதியில் வாழும் மக்கள், நிர்வாக துறையினர், விஞ்ஞானிகள், அரசு சாராநிறுவனங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் இணைந்து இப்பகுதியின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகளை மேற்கொள்வர்.

யுனெஸ்கோவின் பரிந்துரைகள்[தொகு]

மேற்கண்ட மண்டலங்களில் இந்நோக்கங்களை நிறைவு செய்வதற்கு இக்காப்பகங்களில் வாழும் மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். இதற்காக யுனெஸ்கோ அமைப்பு 10 முக்கிய கருத்துக்களை 1994ல் பரிந்துரைத்துள்ளது.

  1. நீடித்த பாதுகாப்பிற்கும் நிலையான பயன்பாட்டிற்கும் அப்பகுதி மக்களின் ஒத்துழைப்பின் அவசியத்தை உணர்ந்து கொள்ளல்.
  2. பாதுகாப்புத் திட்டத்தை வடிவமைத்து நிர்வகிப்பதில் அப்பகுதி மக்களின் பங்கேற்பை உறுதி செய்தல்.
  3. அவர்களது சமூக பொருளாதார தேவைகளை அவர்களே கண்டறிய விட்டுவிடுதல்.
  4. பாதுகாப்பு திட்டங்களால் ஏற்படும் இலாப நஷ்டங்களை அம்மக்களே ஏற்றுக்கொள்வதை உறுதிசெய்தல்.
  5. பல்லுயிர்ப்பெருக்கத்தின் நிலையான பயன்பாட்டிற்கு உரிய வழிமுறைகளை கண்டறிவதைக் குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுதல்
  6. முடிந்தவரை அப்பகுதிக்கே உரித்தான பாரம்பரிய வழிமுறைகளால் பாதுகாத்தல்.
  7. உயிர்க்கோளக் காப்பகத்தின் வளங்களை அப்பகுதி மக்களே நிர்வகிக்க முன்னுரிமை வழங்குதல்
  8. கிராம மக்களை அபிவிருத்தி திட்டங்களை பராமரிப்பதில் பங்குதாரர்களாக்கிக் கொள்ளுதல் மற்றும் வருவாய் ஈட்டும் வழிமுறைகளை விளக்கி கூறுதல்.
  9. பாதுகாப்பு நடவடிக்கை மூலம் உள்ளூர் மக்களுக்கு தேவையான திறமைகளையும் வளங்களையும் அளித்து அவர்களுடைய வாழ்க்கை முறையை மாற்றியமைத்தல்.
  10. உள்ளூர் மக்களுக்கு இயற்கை பாதுகாப்பு முறையையும் அதனால் விளையும் நன்மைகளைப் பற்றியும் கல்வி புகட்டுதல்.

உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு[தொகு]

முதலாவது உயிர்க்கோளக் காப்பகம் குறித்த மாநாடு மின்ஸ்க் நகரில் 1983ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் 62 நாடுகளில் உள்ள 226 உயிர்க்கோளக் காப்பகங்கள் அறிவிக்கப்பட்டன. இரண்டாவது கூட்டம் 1995ஆம் ஆண்டு செவிலி என்ற இடத்தில் நடைபெற்றது. இதில் 82 நாடுகளைச் சார்ந்த 324 உயிர்க்கோளக் காப்பகங்கள் தெரிவிக்கப்பட்டன. தற்பொழுது 119 நாடுகளில் 631 உயிர்க்கோள காப்பகங்கள் உள்ளன.[4]

இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பக கூட்டமைப்பு[தொகு]

இந்திய அரசாங்கத்தால் 1979ஆம் ஆண்டு யுனெஸ்கோவின் வழிமுறைகளின்படி இந்தியாவில் உள்ள உயிர்க்கோளக் காப்பகங்களை கண்டறிவதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டது. 14 பகுதிகளை உயிர்க்கோள காப்பகங்களாக அறிவிக்க நிபுணர்கள் குழு பரிந்துரைத்ததில் இதுவரை 13 பகுதிகள் உயிர்க்கோளக் காப்பகங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசாங்கம் 18 இடங்களை இந்திய உயிர்க்கோளக் காப்பகங்களாக அறிவித்துள்ளது இப்பதினெட்டில் 9 உலக உயிர்க்கோளக் காப்பகங்களில் அடங்கும்.[5][6][7]

இந்தியாவிலுள்ள உலக உயிர்க்கோளக் காப்பகங்கள்[தொகு]

பெயர் மாநிலங்கள் ஆண்டு
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா 2000
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் தமிழ்நாடு 2001
சுந்தரவனம் உயிர்க்கோளக் காப்பகம் மேற்கு வங்காளம் 2001
நந்தாதேவி உயிர்க்கோளக் காப்பகம் உத்தரகண்ட் 2004
நோக்ரெக் உயிர்க்கோளக் காப்பகம் மேகாலயா 2009
பச்மரி உயிர்க்கோளக் காப்பகம் மத்தியப் பிரதேசம் 2009
சிமிலிபால் உயிர்க்கோளக் காப்பகம் ஒடிசா 2008
அச்சனக்மர்- அமர்கண்டக் உயிர்க்கோளக் காப்பகம் சட்டிஸ்கர், மத்தியப் பிரதேசம் 2012[6]
மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் அந்தமான் நிக்கோபர் தீவுகள் 2013[8]

2009 இல் இந்தியா இமயமலையின் குளிர்ப்பாலைப் பகுதியை இமய மலையை உயிர்க்கோளக் காப்பகமாக அறிவிப்பு செய்தது. செப்டம்பர் 20, 2010 இல் இந்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சேசாச்சலம் மலையை 17 ஆவது உயிர்க்கோளக் காப்பகமா அறிவித்தது. மத்தியப் பிரதேசத்திலுள்ள பன்னா உயிர்க்கோளக் காப்பகம் பதினெட்டாவது உயிர்க்கோளக் காப்பகமாக ஆகஸ்ட் 25, 2011 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.][5]

இந்திய உயிர்க்கோளக் காப்பகங்களின் பட்டியல்[தொகு]

Biosphere reserves of India (area wise)
Year Name Location State Type Key Fauna Area (km²)
1 1986 நீலகிரி பல்லுயிர் வலயம் Part of வயநாடு மாவட்டம், Nagarhole, Bandipur and முதுமலை, நிலம்பூர், Silent Valley and ஆனை மலை தமிழ்நாடு, கேரளம் and கருநாடகம் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி வரையாடு, சோலைமந்தி 5520
2 1988 நந்தா தேவி தேசியப் பூங்கா & Biosphere Reserve Parts of Chamoli District, Pithoragarh District & Bageshwar District உத்தராகண்டம் மேற்குern இமயமலை 5860
3 1989 மன்னார் வளைகுடா Indian part of Gulf of Mannar extending from Rameswaram island in the North to Kanyakumari in the South of Tamil Nadu and இலங்கை தமிழ்நாடு கடற்கரை ஆவுளியா or Sea Cow 10500
4 1988 Nokrek Part of காரோ மலை மேகாலயா East Himalayas சிவப்பு பாண்டா 820
5 1989 சுந்தரவனக்காடுகள் Part of delta of கங்கை ஆறு and பிரம்மபுத்திரா ஆறு river system மேற்கு வங்காளம் கங்கைச் சமவெளி வங்காளப் புலி 9630
6 1989 மானசு Part of Kokrajhar, Bongaigaon, Barpeta, Nalbari, Kamrup and தர்ரங் மாவட்டம்s அசாம் கிழக்கு இமயமலை Golden Langur, சிவப்பு பாண்டா 2837
7 1994 Simlipal Part of மயூர்பஞ்சு மாவட்டம் ஒடிசா தக்காணப் பீடபூமி கடமா, வங்காளப் புலி, Wild elephant 4374
8 1998 Dihang-Dibang Part of Siang and மேல் டிபாங் பள்ளத்தாக்கு மாவட்டம் அருணாசலப் பிரதேசம் கிழக்கு இமயமலை 5112
9 1999 Pachmarhi Biosphere Reserve Parts of பேதுல் மாவட்டம், Hoshangabad District and சிந்த்வாரா மாவட்டம் மத்தியப் பிரதேசம் Semi-Arid Giant Squirrel, Flying Squirrel 4981.72
10 2005 Achanakamar - அமர்கந்தாக் Part of Annupur, Dindori and Bilaspur districts மத்தியப் பிரதேசம், சத்தீசுகர் மைகலா மலை 3835
11 2008 Great Rann of Kutch Part of Kutch, Rajkot, சுரேந்திரநகர் and Patan Districts குசராத்து பாலைவனம் இந்திய காட்டுக் கழுதை 12454
12 2009 குளிர் பாலை Pin Valley National Park and surroundings;Chandratal and Sarchu & Kibber Wildlife Sancturary இமாச்சலப் பிரதேசம் Western இமயமலை பனிச்சிறுத்தை 7770
13 2000 கஞ்சன்சங்கா மலை Parts of Kanchanjunga Hills சிக்கிம் கிழக்கு இமயமலை பனிச்சிறுத்தை, சிவப்பு பாண்டா 2620
14 2001 அகத்தியமலை உயிரிக்கோளம் Neyyar, Peppara and Shenduruny Wildlife Sanctuary and their adjoining areas கேரளம், தமிழ்நாடு மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் நீலகிரி வரையாடு, யானை 1828
15 1989 மகா நிக்கோபார் உயிர்க்கோளக் காப்பகம் Southern most islands of அந்தமான் நிக்கோபார் தீவுகள் அந்தமான் நிக்கோபார் தீவுகள் தீவு உவர்நீர் முதலை 885
16 1997 Dibru-Saikhowa Part of Dibrugarh and தின்சுகியா மாவட்டம்s அசாம் கிழக்கு இமயமலை Golden Langur 765
17 2010 சேசாசலம் மலைகள் Seshachalam Hill Ranges covering parts of Chittoor and Kadapa districts ஆந்திரப் பிரதேசம் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் 4755
18 2011 பண்ணா Part of Panna and Chattarpur Districts மத்தியப் பிரதேசம் கென் ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி புலி, புள்ளிமான், இந்தியச் சிறுமான், Sambhar and Sloth bear 543

மேற்கோள்கள்[தொகு]

  1. Wildlife Protected Area Network in India: A Review, Wildlife Institute of India, 2000
  2. http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/
  3. http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/about-mab/
  4. http://www.unesco.org/new/en/natural-sciences/environment/ecological-sciences/man-and-biosphere-programme/
  5. 5.0 5.1 "Ministry of Environment and Forests: "Annual Report 2010-2011"" (PDF). Archived from the original (PDF) on 2017-01-12. பார்க்கப்பட்ட நாள் 2015-04-05.
  6. 6.0 6.1 UNESCO "20 new Biosphere Reserves added to UNESCO’s Man and the Biosphere (MAB) Programme", 11 July 2012
  7. UNESCO, Man and the Biosphere (MAB) Programme list
  8. "Nicobar Islands declared as world biosphere reserve" பரணிடப்பட்டது 2014-01-16 at the வந்தவழி இயந்திரம், 31 May 2013

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,

Biosphere reserves of India

என்பதில் ஊடகங்கள் உள்ளன.