புள்ளிமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புள்ளிமான்
Axdeer.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: இரட்டைப்படைக் குளம்பி
குடும்பம்: மான் குடும்பம்
துணைக்குடும்பம்: Cervinae
பேரினம்: Axis
இனம்: A. axis
இருசொற்பெயர்
Axis axis
(Erxleben, 1777)
புள்ளிமான் இனத்தின் பரவல்
Subspecies

Axis axis axis
Axis axis ceylonensis

புள்ளி மான் இந்தியா, இலங்கை, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான் ஆகிய நாடுகளின் காட்டுப்பகுதிகளில் வாழும் ஒரு வகை மானினம். இது பாக்கித்தானிலும் சிறு அளவில் காணப்படுகிறது. இந்தியக் காடுகளில் அதிகம் காணப்படும் மானினம் இதுவேயாகும்.

இதன் தோல் பழுப்பு நிறத்திலும் வெள்ளைப் புள்ளிகளுடனும் காணப்படும். இதன் காரணமாகவே இது புள்ளிமான் என்றழைக்கப்படுகிறது. இதன் அடிப்பாகம் வெண்ணிறத்தில் இருக்கும். இது ஆண்டுக்கு ஒரு முறை கொம்பினை உதிர்க்கும். பொதுவாக மூன்று கிளைகளாகப் பிரிந்திருக்கும் இதன் கொம்பு இரண்டரை அடி நீளம் வரை வளரும். மூன்று அடி உயரம் வரையும் 85 கிலோ எடை வரையும் புள்ளிமான்கள் வளரும். ஆண் மான்கள் பெட்டைகளை விடப் உருவில் பெரிதாக இருக்கும். இது 8 முதல் 14 ஆண்டுகள் வரை வாழும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Duckworth, J.W., Kumar, N.S., Anwarul Islam, Md., Hem Sagar Baral & Timmins, R.J. (2008). Axis axis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 8 April 2009. Database entry includes a brief justification of why this species is of least concern.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளிமான்&oldid=1373366" இருந்து மீள்விக்கப்பட்டது