திப்ருகார் மாவட்டம்
திப்ருகார் மாவட்டம் ডিব্ৰুগড় জিলা | |
---|---|
திப்ருகார்மாவட்டத்தின் இடஅமைவு அசாம் | |
மாநிலம் | அசாம், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | திப்ருகார் கோட்டம் |
தலைமையகம் | திப்ருகார் |
பரப்பு | 3,381 km2 (1,305 sq mi) |
மக்கட்தொகை | 1,326,335 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 390/km2 (1,000/sq mi) |
படிப்பறிவு | 76.22 % |
பாலின விகிதம் | 952 per 1000 male |
வட்டங்கள் | 1. திப்ருகார் நகரம் 2. மடார்கட் 3. லாகோவால் 4. ரோமாரியா 5. லருவா 6. ஜமீரா 7. மன்கோட்டா-கனிக்கர் 8. மரான் 9. சேப்பன் 10. லெங்கேரி 11. கோவாங் 12. தெங்காகட் 13. திப்லிங் 14. கேரேமியா 15. சபுவா புலுங்கா 16. போக்துங் 17. கர்பந்தி 18. சசோனி 19. ஜாய்பூர் 20. பகியால் 21. திங்கோங் |
மக்களவைத்தொகுதிகள் | 1. திப்ருகார் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | மராண் திப்ருகார் லாஹோவால் துலியாஜான் டிங்கம் சாபுவா நாகர்கட்டியா |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை 37 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
திப்ருகார் மாவட்டம் அசாமில் உள்ளது. இதை டிப்ருகட் என அசாமிய மொழியினர் அழைக்கின்றனர். இதன் தலைமையகம் திப்ருகார் நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 3381 சதுர கிலோமீட்டர் ஆகும்.
[1]
பொருளாதாரம்
[தொகு]தேயிலையின் மூலம் கணிசமான அளவில் வருமானம் கிடைக்கிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்பில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. பல தேயிலைத் தொழிற்சாலைகளும் உள்ளன. சில எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும் உள்ளன. ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமையகம் துலியாஜன் நகரில் உள்ளது. [2]துலியாஜன் ஆயில் நகரம் திப்ருகர் நகரத்திலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
அரிசி, கரும்பு, மீன் ஆகியவற்றை விளைவிக்கின்றனர்.
போக்குவரத்து
[தொகு]திப்ருகாரில் சீரான சாலைப் போக்குவரத்து வசதி உள்ளது. நீர்வழியிலும், வான்வழியிலும் பயணிக்க வசதிகள் உள்ளன. திப்ருகர் ரயில் நிலையத்தின் மூலம் நாட்டின் ஏனையப் பகுதிகளுக்குச் செல்லலாம்.
சான்றுகள்
[தொகு]- ↑ Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11.
{{cite book}}
:|last1=
has generic name (help) - ↑ "Oil India Limited :: A Navratna Company". Oil-india.com. பார்க்கப்பட்ட நாள் 2011-05-20.