உதல்குரி மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°44′42.72″N 92°05′46.32″E / 26.7452000°N 92.0962000°E / 26.7452000; 92.0962000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உதல்குரி மாவட்டம்
Udalguri district
மாவட்டம்
Map of Udalguri District
Map of Udalguri District
நாடுஇந்தியா
Stateஅசாம்
தலைமையகம்உதல்குரி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)
இணையதளம்udalguri.gov.in

உதல்குரி மாவட்டம் இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் உதல்குரி நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1852.16  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.[1] மானஸ் வனவிலங்கு காப்பகத்தின் பகுதி இந்த மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 832 769 மக்கள் வாழ்ந்தனர்.[2] இங்கு வாழும் மக்களில் 66.6% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். ஆயிரம் ஆண்களுக்கு ஈடாக 966 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] சதுர கிலோமீட்டருக்குள் 497 பேர் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] இங்கு அசாமிய மக்கள், போடோ மக்கள், கோச் மக்கள், ரபா மக்கள், சந்தாலி மக்கள், மார்வாரிகள், வங்காளிகள் ஆகியோர் வாழ்கின்றனர்.

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தை இரண்டு வட்டங்களாகப் பிரித்துள்ளனர். உதல்குரி, பேர்காவ் ஆகியன. இதை மேலும் 9 வருவாய் வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.

சான்றுகள்[தொகு]

  1. "Assam state website – Udalguri district". Archived from the original on 2009-04-09. பார்க்கப்பட்ட நாள் 2014-07-13.
  2. 2.0 2.1 2.2 "மாவட்டக் கணக்கெடுப்பு - 2011". Census2011.co.in.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=உதல்குரி_மாவட்டம்&oldid=3578907" இலிருந்து மீள்விக்கப்பட்டது