மானசு ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மானசு ஆறு (The Manas River) (Pron: ˈmʌnəs; பூடானிய மொழியில் ட்ராங்மே ச்சு; சீன மொழியில் நியாம்ஜங்[1]) என்பது இமயமலையின் அடிவாரத்தில், இந்திய பூடான் எல்லைப்புறத்தில் பாய்கின்ற ஒரு ஆறு ஆகும். இந்து தொன்மவியலில் ஒரு பாம்பு தெய்வமான மானசா தேவி என்ற பெயரில் இந்த ஆறு அழைக்கப்படுகிறது. பூடானில் காணப்படும் நான்கு மிகப்பெரிய ஆறுகளின் அமைப்பில் முக்கியமான ஆற்றமைப்பு இதுவேயாகும்.[2] மற்ற மூன்று ஆற்றுச் சமவெளிகளாவன ஆமோ சு அல்லது டோர்சா ஆறு, வோங் சு அல்லது ராய்டாக் ஆறு, மோ சு அல்லது சங்கோசு ஆறு ஆகியவை அடங்கும். இந்தியாவில் மேற்கு அசாமில் இது மீண்டும் வழிமாறுவதற்கு முன்பாக மற்ற மூன்று முக்கிய நீரோட்ட அமைப்புகளுடன் சந்திக்கிறது.  இந்த ஆற்றின் மொத்த நீளமானது 376 கிலோமீட்டர் (234 மைல்கள்) ஆகும். இந்த ஆறு பூட்டானில் 272 கிலோமீட்டர்கள் (169 மைல்கள்) மற்றும் ஜோகிகோபா எனுமிடத்தில், பிரம்மபுத்திரா ஆற்றினை சந்திப்பதற்கு முன்பாக அசாமில் 104 கிலோ மீட்டர்கள் (65 மைல்கள்) தொலைவும் பயணிக்கிறது.  மானசு ஆற்றின் மற்றுமொரு முக்கிய துணை நதியான ஆய் ஆறு அசாமில், பாங்பாரி எனுமிடத்தில் சந்திக்கிறது..[3][4]

இந்த ஆற்றுப்பள்ளத்தாக்கானது, இரண்டு முக்கிய சேமக் காடுகளான இராயல் மானசு தேசியப் பூங்கா (43,854 ஹெக்டேர்கள் அல்லது 108,370 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டதாகும். இந்த வனப்பகுதி 1966 ஆம் ஆண்டில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்துள்ள மானசு தேசியப் பூங்கா(391,000 ஹெக்டேர்கள் அல்லது 9,70,000 ஏக்கர்கள்) கொண்டது 1955 ஆம் ஆண்டில் இன்னும் ஒரு 95,000 ஹெக்டேர்கள் அல்லது 230,000 ஏக்கர்கள் அளவிற்கு புலிகள் பாதுகாப்புத் திட்டப் பகுதி, யானைகள் காப்பகம், உயிரியக் காப்பகம் ஆகியவற்றை உள்ளடக்கிய வனப்பகுதியாக விரிவாக்கம் செய்யப்பட்டது.  இந்த தேசியப் பூங்கா ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலக பாரம்பரியக் களமாக 1985 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.[5][6]

புவியியல்[தொகு]

மானசு ஆறு கிழக்கு பூட்டானிலும், வடகிழக்கு இந்தியாவிலும் மொத்தமாக 41,350 சதுர கிலோமீட்டர் (15,970 சதுர மைல்கள்) அளவிற்கு வடிநிலப் பரப்பைக் கொண்டுள்ளது. இதன் முக்கிய மூன்று கிளை நதிகளாவன: டிராங்க்மே சு, மாங்டே சு, மற்றும் பும்தாங் சு ஆகியவையாகும். டோங்சா பள்ளத்தாக்கு மற்றும் பும்தாங் பள்ளத்தாக்கு ஆகியவையும் இதன் வடிநிலப்பகுதிகளில் உள்ளடங்குகின்றன. பூட்டான் நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ளடங்குகிற 18,300 சதுர கிலோமீட்டர் பகுதியானது கீழ்க்கண்ட புவியியல் ஆயங்களுக்குள்ளாக 26°13′01″N 90°37′59″E / 26.217°N 90.633°E / 26.217; 90.633 அமைந்துள்ளன.[7][8] இந்த ஆற்றின் முக்கியப் பகுதியானது, இந்தியாவில், அருணாச்சலப் பிரதேசத்தின் வடமேற்கு மூலையில் உள்ள பம்லா கனவாய் அருகிலே நுழைவதற்கு முன்னதாக தெற்கு திபெத் பகுதியில் உயர்ந்து காணப்படுகிறது.[9]

இந்த ஆறானது, பூட்டானில் உட்புற அல்லது தாழ்வான இமயமலைப் பகுதி மற்றும் V-வடிவ மலையிடுக்கு ஆகியவற்றின் ஊடாக தென் மேற்கு திசையில் பாய்ந்து பிறகு இந்தியாவில் அசாம் பகுதியில் இமயமலையின் தெற்கு மத்திய அடிவாரப் பகுதியில் பாய்கிறது. பள்ளத்தாக்குப் பகுதியானது மலையடிவாரத்தில் தொடங்குகிறது; பள்ளத்தாக்கின் தொடக்கமானது சதுப்பு நிலப்பகுதியால் குறிக்கப்படுகுிறது. உயரத்தில் உள்ள வடிநிலப்பகுதியானது பனிகளால் சூழப்பட்டவையாகவும், மத்திய மற்றும் தாழ் வடிநிலப்பகுதியானது அடர்ந்த வனப்பகுதியாகவும் உள்ளது.[9]


மேற்கோள்கள்[தொகு]

  1. Topomap பரணிடப்பட்டது 2013-05-01 at the வந்தவழி இயந்திரம்
  2. "Physiological survey". Food and Agriculture Organization. பார்க்கப்பட்ட நாள் 2010-04-02.
  3. "Physiological Survey". FAO Corporate Document Repository. பார்க்கப்பட்ட நாள் 2010-03-07.
  4. Report Volume I: Rashtriya Barh Ayog (National Commission On Floods). Government of India. 1973. 
  5. "Royal Manas National Park, Bhutan". WWF Global. Archived from the original on 2009-11-07.
  6. "Bhutan" (PDF). Ramsar. Wetlands.org. Archived from the original (PDF) on 2011-07-28. பார்க்கப்பட்ட நாள் 2010-03-07.
  7. "Manas river". பார்க்கப்பட்ட நாள் 2010-03-06.
  8. "River Systems". US Liba raray of Congress. பார்க்கப்பட்ட நாள் 2010-03-06.
  9. 9.0 9.1 Negi, Sharad Singh (1991). Himalayan rivers, lakes, and glaciers. Indus Publishing. பக். 97–99. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-85182-61-2. https://books.google.com/books?id=5YtUShKY8zcC&pg=PA99&dq=Manas++River+in+Bhutan&cd=1#v=onepage&q=Manas%20%20River%20in%20Bhutan&f=false. பார்த்த நாள்: 2010-04-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மானசு_ஆறு&oldid=3587890" இலிருந்து மீள்விக்கப்பட்டது