நகோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நகோன் என்பது இந்திய மாநிலமான அசாமில் உள்ள நகாமோ மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் மற்றும் நகராட்சி வாரியம் ஆகும். இது குவஹாத்தியில் இருந்து கிழக்கே 121 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதன் மக்கட் தொகை 147,231 ஆகும். நகோன் நகரம் நகராட்சி வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது நாகோன் நகர்ப்புற ஒருங்கிணைப்பின் கீழ் வருகிறது. இது தற்போது அசாமின் 4 வது பெரிய நகரம் ஆகும். இது குவாஹாட்டி, சில்சார் மற்றும் திப்ருகருக்குப் பிறகு மக்கட் தொகை மற்றும் பரப்பளவு ஆகியவற்றின் அடிப்படையில் நான்காவதாக உள்ளது.

புவியியல்[தொகு]

பிரம்மபுத்ரா நதியின் துணை நதியான கோலாங் நதி நகோன் வழியாக பாய்கிறது. இது நகரத்தை நகோன் மற்றும் ஹைபர்கான் என இரண்டு வெவ்வேறு பகுதிகளாக பிரிக்கிறது.[1]

நாகோன் வடக்கே சோனித்பூர் மாவட்டம் மற்றும் பிரம்மபுத்ரா நதியால் சூழப்பட்டுள்ளது. தெற்கு எல்லையாக மேற்கு கர்பி அங்லாங் மாவட்டமும் , டிமா ஹசாவ் மற்றும் ஹோஜாய் மாவட்டமும் அமைந்துள்ளது. கிழக்கில் இது கிழக்கு கர்பி அங்லாங் மற்றும் கோலாகாட் மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. மேற்கில் மரிகான் மாவட்டம் அமைந்துள்ளது.

மரிக்கலோங், பொட்டகலாங், ஹரிபங்கா, ஜொங்கல்பலாஹு, சமகுரி, கட்டங்கா உரிகடங் மற்றும் நவ்பங்கா உள்ளிட்ட பல நீர் நிலைகள் இந்த மாவட்டத்தில் உள்ளன.

புள்ளிவிபரங்கள்[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி[2] நகோன் நகரத்தின் மக்கட் தொகை 147,231 ஆக இருந்தது. இது அசாமின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாகும். மக்கட் தொகை பெரும்பாலும் பன்முகத்தன்மை கொண்டதாகும். இந்த நகரம் கர்பி , திவா (லாலுங்) போன்ற பழங்குடி அசாமிய சமூகங்களின் பூர்வீக நகரமாகும்.

நகோன் நகரின் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 98,068 ஆகும். இதில் 52,690 ஆண்களும், 45,378 பெண்களும் அடங்குவர். நகோன் நகரத்தின் சராசரி கல்வியறிவு விகிதம் 93.43 சதவீதமாகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 98.58 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு 88.08 சதவீதமாகவும் இருந்தது.

கல்வி[தொகு]

நவீன கல்வி முதன்முதலில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் மைல்ஸ் ப்ரொன்சன் மற்றும் நாதன் பிரவுன் போன்ற கிறிஸ்தவ மிஷனரிகளால் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அசாமி இலக்கியத்தில் ஒரு முக்கிய நபரான ஆனந்தரம் டெக்கியல் புக்கான் தனது வாழ்க்கையின் சிறந்த பகுதியை நாகானில் கழித்தார். அசாமிய அறிவுஜீவி குணபிராம் பருவா நகோனில் சுமார் இரண்டு தசாப்தங்களாக பணியாற்றினார்.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

அசாமில் முக்கியமான இடங்களை எளிதில் அணுகக் கூடியவாறு நகோன் என்ஹெச் 36 மற்றும் 37 உடன் இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் அசாமின் அனைத்து பகுதிகளுடன் நகரத்தை இணைக்கின்றன.

ரயில்[தொகு]

நகோன் நகரில் இரண்டு ரயில் நிலையங்கள் உள்ளன. ஒன்று ஹைபோர்கானிலும் (டிங் கேட்) மற்றொன்று நகோனிலும் அமைந்துள்ளன. அருகிலுள்ள ரயில் சந்தி சென்சுவா ஆகும். மற்றுமொன்று நகோனில் இருந்து 28 கி.மீ தூரத்தில் உள்ள சப்பர்முகில் உள்ளது.

விமானம்[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் தேஜ்பூர் விமான நிலையம் ஆகும். அருகிலுள்ள சர்வதேச விமான நிலையம் குவஹாத்தியில் உள்ள லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நகோன்&oldid=2870319" இருந்து மீள்விக்கப்பட்டது