மாஜுலி
![]() Interactive map of மாஜுலி | |
| புவியியல் | |
|---|---|
| அமைவிடம் | பிரம்மபுத்திரா ஆறு |
| ஆள்கூறுகள் | 26°57′0″N 94°10′0″E / 26.95000°N 94.16667°E |
| பரப்பளவு | 1,250 km2 (480 sq mi) |
| உயர்ந்த ஏற்றம் | 84.5 m (277.2 ft) |
| மேலாண்மை | |
இந்தியா | |
| மக்கள்தொகையியல் | |
| மக்கள்தொகை | 167,304 தோராயமாக |
| மக்கள் அடர்த்தி | 300 /km2 (800 /sq mi) |
| மேலதிக தகவல் | |
| நேர வலயம் | |
| அஞ்சல் குறியீட்டு எண் | 785102, 785104, 785105, 785110 |
| தொலைபேசி குறியீடு | 03775 |
| வாகனப் பதிவு | AS-03 |
| அதிகாரபூர்வ இணையதளம் | majulimap.com |
மாஜுலி (ஒலிப்பு: ˈmʌʤʊlɪ) (அசாமியம்:মাজুলী}}, ஆங்கிலம்:Majuli) [1] என்பது உலகின் மிகப்பெரிய ஆற்றுத் தீவாகும்[2]. இந்தத் தீவு இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றினால் நாலாபுறமும் சூழப்பட்ட இந்த நிலப்பகுதி 352 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. அசாம் அரசு மாஜுலி பகுதியை மாவட்டமாக தரமுயர்த்தியுள்ளது. இதனையடுத்து இந்தியாவின் முதல் தீவு மாவட்டமாக மாஜுலி உதயமானது.[3] அசம் தலைநகரான குவாஹாட்டியில் இருந்து சுமார் 350 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த தீவில் சுமார் 144 கிராமங்கள் உள்ளன. இங்கு கிட்டத்தட்ட 1,50,000 மக்கள் வாழ்கின்றனர்.
சுற்றுலா
[தொகு]ஜோர்ஹாட்டில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள பறவைகளைக் காணவும், பழங்குடியினரின் கைவினைப் பொருட்களை வாங்கவும், தீவினை சுற்றிப்பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டம் மாஜுலி சட்டமன்றத் தொகுதிக்கும் லக்கிம்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
