தேமாஜி
தேமாஜி என்பது இந்தியாவின் அசாமில் உள்ள தேமாஜி மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.
புவியியல்[தொகு]
தேமாஜி 27.48 ° வடக்கு 94.58 ° கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் அமைந்துள்ளது.[1] இது சராசரியாக 91 மீட்டர் (298 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. தேமாஜி பிரம்மபுத்ரா நதியின் வடக்கே அமைந்துள்ளது. அதன் வடக்கே அருணாச்சல இமயமலை அமைந்துள்ளது. அதன் கிழக்கில், அருணாச்சல பிரதேசமும், மேற்கில் அசாமின் மாநில மாவட்டமான லக்கிம்பூரும் காணப்படுகின்றது. இந்த நகரின் வழியாக பல பெரிய மற்றும் சிறிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் சில ஜியாதல், கைனோடி, டிகாரி, திஹாங், டிமோ மற்றும் சிமென் என்பனவாகும். சுபன்சிரி நதி அதன் மேற்கு எல்லையால் பாய்கிறது.
வரலாறு[தொகு]
இப்பகுதி சுதியா மன்னர்களின் கட்டுப்பாட்டில் நானூறு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது. அகோம் மன்னர்களால் கட்டப்பட்ட குகுஹா டோல், மா மணிபுரி தான், பதுமணி தான் போன்ற பல நினைவுச்சின்னங்கள் பார்வையிடத்தக்கவை.
1989 ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று லக்கிம்பூர் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தேமாஜி ஒரு முழுமையான மாவட்டமாக மாறியது.[2]
புள்ளிவிபரங்கள்[தொகு]
2011 ஆம் ஆண்டின் இந்திய மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி தேமாஜியின் மக்கட் தொகை 12816 ஆகும்.[3] மொத்த சனத்தொகையில் ஆண்கள் 51% வீதமும், பெண்கள் 49% வீதமும் உள்ளனர். தேமாஜியின் சராசரி கல்வியறிவு விகிதம் 92% ஆகும், இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாகும். ஆண் கல்வியறிவு 94% வீதமும் பெண் கல்வியறிவு 89% வீதமும் ஆகும் .தேமாஜியில் மக்கட் தொகையில் 11% வீதமானோர் ஆறு வயதுக்குட்பட்டவர்கள்.
பொருளாதாரம்[தொகு]
2006 ஆம் ஆண்டில் இந்திய அரசாங்கம் நாட்டின் 250 மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக தேமாஜி மாவட்டத்தை பெயரிட்டது.[4] தற்போது பின்தங்கிய பிராந்திய மானிய நிதி திட்டத்திலிருந்து (பி.ஆர்.ஜி.எஃப்) நிதி பெறும் அசாமில் உள்ள பதினொரு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.[4] கடந்த 10 ஆண்டுகளில் வணிக மற்றும் கல்வி அடிப்படையில் தேமாஜி விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளது. தேமாஜியின் பொருளாதாரம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. சமீபத்திய தசாப்தத்தில் நூறுக்கும் மேற்பட்ட வகையான மல்லிகைகளை சேகரித்த திரு.தங்கேஸ்வர் டோலோய் மற்றும் அசோக் பண்ணையின் திரு. அஜித் தத்தா ஆகியோரின் தலைமையில் இப்பகுதியில் பண்ணை வணிகம் வளர்ச்சி அடைந்து வருகின்றது.[5] விவசாயத்தைத் தவிர முக்கிய வேலைவாய்ப்பு சேவைத் துறை (அரசு வேலைகள், பள்ளி ஆசிரியர்கள்) ஆகும்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களிடையே பொருளாதாரத்தை பரவலாக வலுப்படுத்தியதன் மூலம் புதிய வங்கிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி, பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள் என்பவற்றின் கிளைகள் மாவட்டத்தின் பல்வேறு கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் திறக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து[தொகு]
தேசிய நெடுஞ்சாலை என்எச்15 தேமாஜி வழியாக சென்று போகிபீல் பாலம் வழியாக லாகோலை நோக்கி செல்கிறது. தேமாஜிக்கு அருகிலுள்ள விமான நிலையமானது 66 கி.மீ தூரத்தில் வடக்கு லக்கிம்பூருக்கு அருகிலுள்ள லிலாபரி விமான நிலையம் ஆகும் .
பிரம்மபுத்திராவின் மேல் ஒரு போகிபீல் பாலம் கட்டுமானத்தில் உள்ளது. இது தேமாஜியை திப்ருகருடன் சாலை மற்றும் ரயில் வழியாக இணைக்கும். இங்குள்ள மாநில-நெடுஞ்சாலைகள் அதன் அண்டை மாவட்டத்துடன் ஒப்பிடும்போது நன்றாக காணப்படுகின்றன.
சான்றுகள்[தொகு]
- ↑ "redirect to /world/IN/03/Dhemaji.html". www.fallingrain.com. 2019-11-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "India Districts". www.statoids.com. 2019-11-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Census of India 2001: Data from the 2011 Census, including cities, villages and towns (Provisional)".
- ↑ 4.0 4.1 "Wayback Machine" (PDF). web.archive.org. 2012-04-05. 2019-11-21 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Sentinel assam".[தொடர்பிழந்த இணைப்பு]