பதார்பூர், அசாம்
பதார்பூர் Badarpur | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
மாவட்டம் | கரீம்கஞ்சு |
அரசு | |
• நிர்வாகம் | பதார்பூர் நகர மையம் |
ஏற்றம் | 16 m (52 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 11,291 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | வங்காளி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
ஐஎசுஓ 3166 குறியீடு | IN-AS |
வாகனப் பதிவு | ஏஎசு-10 |
பதார்பூர் (Badarpur) என்பது இந்தியாவின் அசாம் மாநிலம் கரீம்கஞ்சு மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் மற்றும் வர்த்தக நகரம் ஆகும்.
புவியியல்
[தொகு]24.9°வடக்கு 92.6°கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் பாதார்பூர் நகரம் அமைந்துள்ளது[1] . கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[2] பதார்பூர் நகரத்தின் மக்கள்தொகை 11,291 நபர்கள் ஆகும். இம்மக்கள் தொகையில் 52.% நபர்கள் ஆண்கள் மற்றும் 48% நபர்கள் பெண்களாவர். பதார்பூர் நகரத்தின் எழுத்தறிவு சதவீதம் 84% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 79.5% என்பதைவிட இது அதிகமாகும். 10% நபர்கள் 6 வயதுக்கு குறைவானவர்களாக உள்ளனர். மார்ச்சு 2016 நிலவரப்படி இந்நகரின் மக்கள் தொகை 1,50,000 நபர்களாக இருந்தது.
அரசியல்
[தொகு]கரீம்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நகரமாக பதார்புர் உள்ளது[3]. யமால் உத்தின் அகமது தற்பொழுது பதார்புர் நகரின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Badarpur
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
- ↑ "List of Parliamentary & Assembly Constituencies" (PDF). Assam. Election Commission of India. Archived from the original (PDF) on 2006-05-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-05.
- ↑ "Badarpur Constituency". goassam.com. Archived from the original on 28 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 27 October 2016.