அசாமின் சுற்றுலா மையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
காசிரங்கா தேசியப்பூங்காவின் காண்டாமிருகம்
யானை சவாரி , காசிரங்கா தேசியப்பூங்கா

அசாம் இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. அவற்றில் நடுவில் அமைந்திருக்கும் மாநிலம் ஆகும். இது செந்நிற ஆறுகளையும், நீல நிற மலைகளையும் கொண்டது. காசிரங்கா தேசியப் பூங்கா, மானசு தேசியப் பூங்கா, கரம்பாணி வனவிலங்கு சரணாலயம், காமாக்யா கோவில், போபிதோரா காட்டுயிர்ப் பகுதி, நாமெரி தேசியப் பூங்கா மற்றும் திப்ரு-ஷேய்க்ஹோவா தேசியப்பூங்கா ஆகியவை முக்கியமானவை ஆகும். இந்தியாவில் மிக அடத்தியான காடுகள் அசாமில் உள்ளன.

முக்கிய சுற்றுலா இடங்கள்[தொகு]

 • பிரம்மபுத்திரா ஆறு - இந்திய நதிகளில் ஆண் பெயரைக் கொண்ட ஆறு இதுவே
 • கவுகாத்தி - அசாமின் தலைநகர், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெரிய நகரம்.
 • மாஜூலி -நன்நீர்த் தீவு.
 • காசிரங்கா தேசியப் பூங்கா
 • ஜேடிங்கா - பறவைகள் சரணாலயம்.
 • சோனிட்பூர் - தேசியப் பூங்காங்கள் நிறைந்த பகுதி.
 • ஜோர்ஹாட் - நகரம்.
 • சிவசாகர் - தேயிலைத் தோட்டங்கள், அருங்காட்சியகங்கள் உள்ளன.
 • ஹஜோ - புனிதத்தலம்
 • ஹாப்லாங் - மலைவாழிடம்
 • டின்சுகியா - அசாமிம் இரண்டாவது பெரிய நகரம்
 • திப்ருகார் - தேயிலை நகரம் என அழைக்கப்படுகிறது.

புகைப்படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

அசாம் சுற்றுலா இணையதளம் அசாம் சுற்றுலா தளம்