கரம்பாணி வனவிலங்கு சரணாலயம்
Jump to navigation
Jump to search
கரம்பாணி வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
கரம்பாணிசரணாலயம் தொங்கும் பாலம் | |
அசாம் வரைபடம் | |
அமைவிடம் | கர்பி ஆங்லாங் மாவட்டம், அஸ்ஸாம், இந்தியா |
கிட்டிய நகரம் | கோலாகாட் |
பரப்பளவு | 6.05 km2 (2.34 sq mi) |
கரம்பாணி வனவிலங்கு சரணாலயம் (Garampani Wildlife Sanctuary) அசாமிலுள்ள, கர்பி ஆங்லோங் மாவட்டத்தில் 6.05 சதுர கிலோமீட்டர் (2.34 சதுர மைல்) அமைந்துள்ளது. இது கோலாகாட்டிலிருந்து 25 கிமீ (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது பழமையான சரணாலயங்களில் ஒன்றாகும். இச்சரணாலயத்தில் வெந்நீர் ஊற்று மற்றும் நீர்வீழ்ச்சிகள் இருக்கிறது. மேலும் 51 அரிய வகை இனங்களை கொண்ட நாம்போர் சரணாலயத்தால் சூழப்பட்டுள்ளது.
திமாபூர் விமான நிலையத்திலிருந்து 55 கி.மீ. தொலைவிலும், ஜோர்கட் விமான நிலையத்திலிருந்து 85 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சரணாலயத்தின் அருகிலுள்ள நகரங்களின் சாலை தூரங்கள்: கோலாக்கட்டில் இருந்து 35 கி.மீ, திப்புவிலிருந்து 92 கி.மீ ,குவஹாத்தி இருந்து 330 கிமீ, மற்றும் காசிரங்கா 45 கிமீ தொலைவிலும் உள்ளது.