மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
நிஜாங் கர்பி அங்லோங் | |
---|---|
அசாம் மாநிலத்தில் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள் (ஹம்ரென்): 17°21′N 75°10′E / 17.35°N 75.16°E - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | அசாம் |
பிரதேசம் | மத்திய அசாம் |
நிறுவப்பட்டது. | 15 ஆகஸ்டு 2015 |
தலைமையிடம் | ஹம்ரென் |
அரசு | |
• சட்டமன்றத் தொகுதி | பைஅலாசோ (தனித்தொகுதி) |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,035 km2 (1,172 sq mi) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 3,00,320 |
• அடர்த்தி | 99/km2 (260/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் | அசாமிய மொழி, வங்காள மொழி |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் (West Karbi Anglong district) அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு புதிய மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் தருண் கோகாய் அறிவித்தார்.[2] இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹம்ரென் நகரம் ஆகும்.[4][5] இம்மாவட்டம் மலைவாழ் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில நகாமோ மாவட்டம், கிழக்கில் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம் மற்றும் ரி-போய் மாவட்டம் உள்ளது.
வரலாறு
[தொகு]இந்திய விடுதலைக்குப் பின்னர் சைமன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திற்கு, மாவட்டத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2016-இல் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
புவியியல்
[தொகு]மத்திய அசாமில் அமைந்த கர்பி அங்லோங் பீடபூமியில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பருவமழைக் காலம் காலம் ஆகும்.[6] கர்பி அங்லோங் பீடபூமியின் மேற்குப் பகுதி மலைகள் சூழ்ந்தும், கிழக்குப் பகுதி சமவெளியாகும். இம்மாவட்டத்தில் மைடிரியங் ஆறு, கர்பி லாபி ஆறு கோப்பிலி ஆறு மற்றும் அம்ரேங் ஆறுகள் பாய்கிறது.[7][8]
மக்கள்தொகை பரம்பல்
[தொகு]மொழிகள்
[தொகு]இம்மாவட்டத்தில் கர்பி மொழியுடன் காரோ மொழி, திவா மொழி, ஆங்கிலம், இந்தி மற்றும் அசாமிய மொழிகள் பேசப்படுகிறது. தொடர்பு மொழியாக வங்காள மொழி பேசப்படுகிற்து.
இதனையும் காணக்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "West Karbi Anglong District | Hill Areas | Government Of Assam, India". had.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
- ↑ CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day
- ↑ "West Karbi Anglong district inaugurated" பரணிடப்பட்டது 2016-04-03 at the வந்தவழி இயந்திரம், The Assam Tribune, 11 February 2016
- ↑ "Assam get new districts". Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "West Karbi Anglong district inaugurated" பரணிடப்பட்டது 3 ஏப்பிரல் 2016 at the வந்தவழி இயந்திரம், The Assam Tribune, 11 February 2016
- ↑ Vasudevan, Hari; et al. (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. p. 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7450-538-5.
- ↑ "Running Projects of APGCL | Power | Government Of Assam, India". power.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
- ↑ "Karbi Langpi Hydroelectric Power Project India - GEO". globalenergyobservatory.org. Archived from the original on 20 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)