ரி-போய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரி-போய் மாவட்டம் மாவட்டம்
ரிபோய்
MeghalayaRiBhoi.png
ரி-போய் மாவட்டம்மாவட்டத்தின் இடஅமைவு மேகாலயா
மாநிலம் மேகாலயா, இந்தியா
தலைமையகம் நாங்போ
பரப்பு 2,378 km2 (918 sq mi)
மக்கட்தொகை 192,795 (2001)
மக்கள் அடர்த்தி 79/km2 (200/sq mi)
படிப்பறிவு 51%
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 7
முதன்மை நெடுஞ்சாலைகள் தேசிய நெடுஞ்சாலை 40
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ரி போய் மாவட்டம், மேகாலயாவில் உள்ளது. இதன் தலைமையகம் நாங்போ நகரில் உள்ளது. இதன் பரப்பளவு 2378 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த மாவட்டத்தில் 192,795 மக்கள் வாழ்கின்றனர். [1] இது கிழக்கு காசி மலை மாவட்டத்தைப் பிரித்து உருவாக்கினர்.

பொருளாதாரம்[தொகு]

இந்த மாவட்டம் வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது. மத்திய அரசு வழக்கும் வளர்ச்சி நிதியைப் பெறுகிறது. [2]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

ரி போய் மாவட்டத்தைப் பிரித்து மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். [3] மண்டலங்களும் அவற்றின் தலைமையகங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

  • ஜிராங் - வாசினோன்
  • உம்லிங் - நாங்போ
  • உமானிங் - உமானிங்

போக்குவரத்து[தொகு]

இங்கு போக்குவரத்து வசதிகள் இல்லை. தேசிய நெடுஞ்சாலை 37 வழியாக பிற நகரங்களை அடையலாம்.

மக்கள்[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 258,380 மக்கள் வாழ்ந்தனர். [1] சராசரியாக, சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 109 பேர் குடியிருக்கின்றனர். [1] பால் விகிதக் கணக்கெடுப்பில், ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் இருப்பதாக தெரிய வந்தது. [1] இங்கு வாழ்வோரில் 77.22% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [1]

மொழி[தொகு]

இங்குள்ள மக்கள் போய் என்ற மொழியைப் பேசுகின்றனர். அம்ரி, கர்பி ஆகிய மொழிகளையும் சிலர் பேசுகின்றனர். [4]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "District Census 2011". Census2011.co.in (2011). பார்த்த நாள் 2011-09-30.
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme". National Institute of Rural Development. பார்த்த நாள் September 27, 2011.
  3. The Registrar General & Census Commissioner, India, New Delhi, Ministry of Home Affairs, Government of India. Meghalaya Administrative Divisions [map](PDF). (2011) Retrieved 2011-09-29.
  4. "Amri Karbi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°54′N 91°53′E / 25.900°N 91.883°E / 25.900; 91.883

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரி-போய்_மாவட்டம்&oldid=1686772" இருந்து மீள்விக்கப்பட்டது