தருண் குமார் கோகய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தருண் குமார் கோகய்
তৰুণ কুমাৰ গগৈ
அசாம் முதலமைச்சர்
பின்வந்தவர் நடப்பு ஆட்சியாளர்
தொகுதி டைடாபார்
தனிநபர் தகவல்
பிறப்பு ஏப்ரல் 1, 1936 (1936-04-01) (அகவை 84)
ரங்காஜன், ஜோர்ஃகாட்
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) டோல்லி கோகய்
பிள்ளைகள் ஓர் மகனும் ஓர் மகளும்
இருப்பிடம் ஜோர்ஃகாட், அசாம்
As of சூன் 18, 2006
Source: அசாம் அரசு தளத்தில்

தருண் குமார் கோகய் ( Tarun Kumar Gogoi, அசாமி: তৰুণ কুমাৰ গগৈ) (பிறப்பு ஏப்ரல் 1, 1936) இந்திய மாநிலம் அசாமின் முதலமைச்சரும் இந்திய தேசிய காங்கிரசுத் தலைவரும் ஆவார்.

கோகய் அசாமின் ஜோர்ஃகாட் மாவட்டத்தில் ரங்காஜன் தேயிலைத் தோட்டத்தில் பிறந்தவர்.ஜோர்ஃகாட் அரசுப் பள்ளியில் படித்து ஜே பி கல்லூரியிலிருந்து இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் குவகாத்தி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படித்தார்.

அரசியல் வாழ்வு[தொகு]

1971ஆம் ஆண்டு ஜோர்ஃகாட் தொகுதியில் இருந்து ஐந்தாவது மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று தில்லி சென்றார். இதே தொகுதியிலிருந்து 1977 (ஆறாவது மக்களவை), மற்றும் 1983 (ஏழாவது மக்களவை) ஆண்டுகளிலும் வென்று மக்களவை உறுப்பினராகத் தொடர்ந்தார். 1991ஆம் ஆண்டு நடந்த பத்தாவது மக்களவைத் தேர்தல்களில் காளிபாரி தொகுதியில் போட்டியிட்டு நான்காம் முறையாக வென்றார்.1991-93 காலத்தில் நடுவண் அமைச்சில் உணவுத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1993 முதல் 1995 வரை உணவு பதனப்படுத்தல் துறையில் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சராகப் பணியாற்றினார்.

1996-98 காலத்தில் மார்கெரிட்டா சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு பேரவையில் பணியாற்றினார்.ஆனால் 1998ஆம் ஆண்டு மீண்டும் பனிரெண்டாவது மக்களவைத் தேர்தலில் காளிபாரித் தொகுதியிலிருந்து இரண்டாம் முறையாகவும் மக்களவைக்கு ஐந்தாம் முறையாகவும் வெற்றி கண்டார். இதே தொகுதியிலிருந்து 1999ஆம் ஆண்டு பதின்மூன்றாவது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17 மே, 2001 அன்று அசாமின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். 2006ஆம் ஆண்டு மீண்டும் தேர்தல்களில் வென்று இரண்டாம் முறையாக முதலமைச்சராகப் பணியாற்றினார். 2011 ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தல்களில் வெற்றிபெற்று மீண்டும் மூன்றாம் முறையாக முதலமைச்சராக மே, 2011 முதல் பணியாற்றி வருகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தருண்_குமார்_கோகய்&oldid=2339458" இருந்து மீள்விக்கப்பட்டது