மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம்
நிஜாங் கர்பி அங்லோங்
மாவட்டம்
அசாம் மாநிலத்தில் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டத்தின் அமைவிடம்
அசாம் மாநிலத்தில் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள் (ஹம்ரென்): 17°21′N 75°10′E / 17.35°N 75.16°E / 17.35; 75.16 - 18°19′N 76°09′E / 18.32°N 76.15°E / 18.32; 76.15
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்
பிரதேசம்மத்திய அசாம்
நிறுவப்பட்டது.15 ஆகஸ்டு 2015
தலைமையிடம்ஹம்ரென்
அரசு
 • சட்டமன்றத் தொகுதிபைஅலாசோ (தனித்தொகுதி)
பரப்பளவு
 • மொத்தம்3,035 km2 (1,172 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்3,00,320
 • அடர்த்தி99/km2 (260/sq mi)
மொழிகள்
 • அலுவல்அசாமிய மொழி, வங்காள மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் (West Karbi Anglong district) அசாம் மாநிலத்தின் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு புதிய மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் நிறுவ 15 ஆகஸ்டு 2015-இல் மாநில முதல்வர் தருண் கோகாய் அறிவித்தார்.[2] இம்மாவட்டம் அதிகாரப்பூர்வமாக 10 பிப்ரவரி 2016-இல் துவக்கப்பட்டது.[3] இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஹம்ரென் நகரம் ஆகும்.[4][5] இம்மாவட்டம் மலைவாழ் பழங்குடி மக்கள் நிறைந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கில நகாமோ மாவட்டம், கிழக்கில் கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம், தெற்கிலும், தென்மேற்கிலும் மேகாலயா மாநிலத்தின் மேற்கு ஜைந்தியா மலை மாவட்டம் மற்றும் ரி-போய் மாவட்டம் உள்ளது.

வரலாறு[தொகு]

இந்திய விடுதலைக்குப் பின்னர் சைமன் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி, கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்திற்கு, மாவட்டத் தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. 2016-இல் கர்பி ஆங்கலாங்கு மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளைக் கொண்டு மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் கிழக்குப் பகுதிகளைக் கொண்டு கிழக்கு கர்பி அங்லோங் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

புவியியல்[தொகு]

மத்திய அசாமில் அமைந்த கர்பி அங்லோங் பீடபூமியில் செப்டம்பர் முதல் அக்டோபர் வரை பருவமழைக் காலம் காலம் ஆகும்.[6] கர்பி அங்லோங் பீடபூமியின் மேற்குப் பகுதி மலைகள் சூழ்ந்தும், கிழக்குப் பகுதி சமவெளியாகும். இம்மாவட்டத்தில் மைடிரியங் ஆறு, கர்பி லாபி ஆறு கோப்பிலி ஆறு மற்றும் அம்ரேங் ஆறுகள் பாய்கிறது.[7][8]

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

மொழிகள்[தொகு]

இம்மாவட்டத்தில் கர்பி மொழியுடன் காரோ மொழி, திவா மொழி, ஆங்கிலம், இந்தி மற்றும் அசாமிய மொழிகள் பேசப்படுகிறது. தொடர்பு மொழியாக வங்காள மொழி பேசப்படுகிற்து.

இதனையும் காணக்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "West Karbi Anglong District | Hill Areas | Government Of Assam, India". had.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  2. CM Tarun Gogoi announces 5 new districts in Assam on Independence Day
  3. "West Karbi Anglong district inaugurated" பரணிடப்பட்டது 2016-04-03 at the வந்தவழி இயந்திரம், The Assam Tribune, 11 February 2016
  4. "Assam get new districts". Archived from the original on 1 ஜூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 27 December 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "West Karbi Anglong district inaugurated" பரணிடப்பட்டது 3 ஏப்பிரல் 2016 at the வந்தவழி இயந்திரம், The Assam Tribune, 11 February 2016
  6. Vasudevan, Hari (2006). "Structure and Physiography". India:Physical Environment. New Delhi: NCERT. பக். 17. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7450-538-5. 
  7. "Running Projects of APGCL | Power | Government Of Assam, India". power.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019.
  8. "Karbi Langpi Hydroelectric Power Project India - GEO". globalenergyobservatory.org. Archived from the original on 20 ஆகஸ்ட் 2018. பார்க்கப்பட்ட நாள் 15 September 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]