மோரா தன்சிரி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மோரா தன்சிரி (Mora Dhansiri River) என்பது இந்தியாவின் அசாம் மாநிலத்தில் கோலாகாட் மாவட்டத்தின் முக்கிய நதியான தன்சிரி ஆற்றின் துணை ஆறாகும். இது நாகாலாந்தின் லைசாங் சிகரத்திலிருந்து தோன்றி காசிரங்கா தேசியப் பூங்கா வழியாகப் பாய்கிறது. சுமார் 352 கிலோமீட்டர்கள் (219 mi) தூரம் தெற்கிலிருந்து வடக்கே பாய்ந்து பிரம்மபுத்திரா ஆற்றுடன் இதன் தென் கரையில் சேருகிறது. இதன் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 1,220 சதுர கிலோமீட்டர்கள் (470 sq mi) ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மோரா_தன்சிரி_ஆறு&oldid=3126514" இலிருந்து மீள்விக்கப்பட்டது