அஸ்ஸாம் தடுப்புக் காவல் முகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அஸ்ஸாம் தடுப்புக் காவல் முகாம் (ஆங்கில மொழி: Illegal immigrant detention center Assam) என்பது சட்டத்திற்குப்புறம்பாகக் குடியேறியவர்களுக்காக அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள தடுப்புக் காவல் நிலையங்களாகும்.[1][2][3] முதல் தடுப்புக் காவல் முகாம் 2008 ஆம் ஆண்டு குவஹாத்தி உயர் நீதிமன்ற வழிகாட்டுதலில் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.[4] தற்போதைக்குக் குடியேறியவர்களுக்கான தடுப்புக்காவல் முகாம்கள் ஆறு செயல்பாட்டில் உள்ளன. மொத்தம் பத்து முகாம்கள் அஸ்ஸாமில் கட்டத் திட்டமிடப்பட்டுள்ளன.[1][5] அஸ்ஸாமில் செயல்படுத்தப்பட்டுள்ள தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி விடுபட்டு, அஸ்ஸாம் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திலும் இறுதி செய்யப்பட்டவர்களைச் சட்டத்திற்குப் புறம்பான குடியேறிகள் என அறிவிக்கப்பட்டு இம்முகாம்களில் தங்கவைக்கின்றனர்.[6][7][8][9][10] 19 லட்சம் மக்கள் தேசிய குடியுரிமைப் பதிவேட்டில் விடுபட்டுள்ளனர் என்றும் தீர்ப்பாயத்திடம் தங்கள் குடியுரிமை ஆதாரத்தை நிரூபிக்கவேண்டிய நிலையில் உள்ளனர்.[1]

வரலாறு[தொகு]

1980களில் சட்டத்திற்குப் புறம்பான வெளிநாட்டுக் குடிமக்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேற்றச் சொல்லிப் போராட்டங்கள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக 1985 இல் அஸ்ஸாம் உடன்பாடு போடப்பட்டு, அமைதி திரும்பின. படிப்படியாக, ஆவணங்களின்றி சட்டத்திற்குப்புறம்பாகக் குடியேறியுள்ள வெளிநாட்டினர் பற்றிய கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. அவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறியவர்கள் என அடையாளம் காணப்பட்டவர்களைத் தங்கவைக்க 2008 இல் முதல் தடுப்புக் காவல் நிலையம் அமைக்கப்பட்டது. குவஹாத்தி உயர் நீதிமன்ற வழிகாட்டுதலில் தருண் கோகய் ஆட்சியில் மாவட்டச் சிறை வளாகத்தில் தடுப்புக்காவல் முகாம் அமைக்கப்பட்டது. முறையற்ற வழியில் இந்திய குடியுரிமை ஆவணங்கள் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்ட ஐம்பது வங்கதேசத்தவர்கள் முகாமிற்கு அனுப்பப்பட்டனர்.[11][12] பின்னர் 2011 இல் கோல்பாரா, கோகராஜார் மற்றும் சில்சர் மாவட்டங்களில் மேலும் தடுப்புக்காவல் முகாம்கள் சிறை வளாகத்திற்குள் அமைக்கப்பட்டன.[13] 2018 இல் இந்திய அரசு 46 கோடி செலவில் தடுப்புக் காவல் முகாமைத் தனி வளாகமாகக் கட்டிவருகிறது.[11]

தடுப்புக் காவலிலுள்ளோர்[தொகு]

2019 நவம்பர் 27 ஆம் நாள்வரை 1043 நபர்கள் ஆறு தடுப்புக் காவல் முகாம்களில் உள்ளதாக அரசுத்தரப்பு கூறுகிறது.[4][14] திப்ருகார், சில்சார், தேஜ்பூர், ஜோர்ஹாட் மாவட்டம், கோகராஜார் மற்றும் கோல்பாரா ஆகிய மாவட்டங்களில் மாவட்ட சிறை வளாகத்திற்குள் இந்தத் தடுப்புக் காவல் முகாம்கள் உள்ளன.[15][16] வெளிநாட்டினர் என்று சந்தேகம் ஏற்படும் பல நூறு நபர்களை அரசு கைது செய்ததாக நவம்பர் 17 இல், த நியூயார்க் டைம்ஸ் கூறியது. மேலும் இந்தியத் தரைப்படை முன்னாள் அதிகாரி ஒருவரும் சந்தேகத்தின் பேரில் கைதானார் என்கிறது.[17][18]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 Choudhury, Ratnadip (12 September 2019). "India's 1st Illegal Immigrant Detention Camp Size Of 7 Football Fields".
 2. "Final NRC status: 15 buildings, schools, hospital in India’s first detention centre for those not in Assam NRC" (en) (2019-09-14).
 3. "Assam NRC: Workers at India's first detention camp for illegal migrants may end up there" (8 September 2019).
 4. 4.0 4.1 Dutta, Prabhash K. (27 December 2019). "NRC and story of how Assam got detention centres for foreigners".
 5. Samuel, Sigal (September 17, 2019). "India’s massive, scary new detention camps, explained".
 6. "938 persons detained in 6 detention centres in Assam, 823 declared as foreigners: Centre to SC". The Economic Times. 2019-02-19. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/938-persons-detained-in-6-detention-centres-in-assam-823-declared-as-foreigners-centre-tells-supreme-court/articleshow/68062067.cms. 
 7. "Assam seeks 10 more detention centres to hold ‘illegal foreigners’" (en) (2019-06-15).
 8. Choudhury, Ratnadip (12 September 2019). "India's 1st Illegal Immigrant Detention Camp Size Of 7 Football Fields".
 9. Perper, Rosie (12 September 2019). "India is building a mass detention center for illegal immigrants, less than a month after it effectively stripped 1.9 million people of their citizenship".
 10. "Assam gets central nod for new detention camp for ‘declared foreigners’" (July 25, 2018).
 11. 11.0 11.1 "PM Modi lying about detention camps, sanctioned Rs 46 crore for one in Assam in 2018: Tarun Gogoi" (27 December 2019).
 12. Laskar, Tahmina (7 February 2019). "Detention Centres in Assam Are Synonymous With Endless Captivity".
 13. "Rahul Gandhi says PM Narendra Modi lying about detention centres, tweets video from Assam" (26 December 2019).
 14. "28 deaths in Assam's detention camps, minister tells Rajya Sabha" (in en). telegraphindia.com. 27 November 2019. https://www.telegraphindia.com/india/28-deaths-in-assam-s-detention-camps-minister-tells-rajya-sabha/cid/1722471. பார்த்த நாள்: 22 December 2019. 
 15. "Review committee visits detention center" (November 19, 2019).
 16. "PM Modi’s Claim That India Has No Detention Centres is Misleading" (in en). The Quint. 22 December 2019. https://www.thequint.com/news/webqoof/pm-modi-ramlila-maidan-rally-fact-check-detention-centres-caa. பார்த்த நாள்: 22 December 2019. 
 17. Gettleman, Jeffrey; Kumar, Hari (17 August 2019). "India Plans Big Detention Camps for Migrants. Muslims Are Afraid.". The New York Times. https://www.nytimes.com/2019/08/17/world/asia/india-muslims-narendra-modi.html. பார்த்த நாள்: 22 December 2019. 
 18. "India plans big detention camps for migrants and Muslims are afraid" (in en). SBS News. NYT. https://www.sbs.com.au/news/india-plans-big-detention-camps-for-migrants-and-muslims-are-afraid.