கோலாகாட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 26°00′N 93°00′E / 26.0°N 93.0°E / 26.0; 93.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கோலாகட் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கோலாகாட் மாவட்டம்
গোলাঘাট জিলা
மாவட்டம்
அடைபெயர்(கள்): Golaghat district
அசாமில் கோலாகாட் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் கோலாகாட் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்கோலாகாட்
பரப்பளவு
 • மொத்தம்3,502 km2 (1,352 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,46,279
நேர வலயம்IST (ஒசநே+05:30)
இணையதளம்golaghat.gov.in

கோலாகாட் மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமை அலுவலகத்தை கோலாகாட் நகரில் அமைத்துள்ளனர். இந்த மாவட்டம் 3502  சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. [1] ஆற்றிற்கு அருகில் சந்தையை அமைத்திருந்த காரணத்தினால் கோலாகாட் என்ற பெயர் ஏற்பட்டது. ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகள் தங்கள் மொழியில் இப்பெயரைச் சூட்டியுள்ளனர். கோலா என்றால் சந்தை என்று பொருள். கட் என்றால் ஆற்றங்கரை என்று பொருள். இந்த மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது. இந்த மாவட்டத்தில் கசிரங்கா தேசியப் பூங்காவின் பகுதிகள் அமைந்துள்ளன.

பொருளாதாரம்[தொகு]

இந்த மாவட்டத்தின் பொருளாதார நிலை பயிர்களைச் சார்ந்து உள்ளது. தேயிலை, அரிசி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிடுகின்றனர். இங்கு பல டீ தோட்டங்கள் இருக்கின்றன. அதிக வருமானத்தைத் தரும் பயிராக தேயிலை விளங்குகிறது.

மக்கள் தொகை[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் போது, 1,058,674 மக்கள் வசித்தனர். [2] சராசரியாக, சதுர கிலோமீட்டருக்குள் 302 பேர் வாழ்கின்றனர். [2] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் உள்ளது. [2] இங்கு வாழ்வோரில் 78.31% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர். [2] இங்கு பழங்குடியின இனத்தைச் சேர்ந்த பூர்விக மக்கள் வாழ்கின்றனர். ராஜஸ்தானைச் சேர்ந்த மார்வாரிகளும், வங்காளிகளும் நகர்ப் பகுதிகளில் வாழ்கின்றனர்.

அரசியல்[தொகு]

இந்த மாவட்டத்தின் பகுதிகள் கலியாபர் மக்களவைத் தொகுதியில் உள்ளன.[3]

சான்றுகள்[தொகு]

  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting , Government of India. பக். 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-230-1617-7. https://archive.org/details/nlsiu.01.2.ind.24174. பார்த்த நாள்: 2011-10-11. 
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.

இணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாகாட்_மாவட்டம்&oldid=3849365" இலிருந்து மீள்விக்கப்பட்டது