உள்ளடக்கத்துக்குச் செல்

கரீம்கஞ்சு மாவட்டம்

ஆள்கூறுகள்: 24°52′00″N 92°21′00″E / 24.8667°N 92.3500°E / 24.8667; 92.3500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரீம்கஞ்சு மாவட்டம்
வங்காள மொழி: করিমগঞ্জ জেলা
மாவட்டம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
அசாமில் மாவட்டத்தின் அமைவிடம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
தலைமையகம்கரீம்கஞ்ச்
பரப்பளவு
 • மொத்தம்1,809 km2 (698 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்12,17,002
 • அடர்த்தி673/km2 (1,740/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
மொழிகள்வங்காளம்
இணையதளம்http://www.karimganj.nic.in

கரீம்கஞ்சு மாவட்டம் அசாமில் உள்ளது. இதன் தலைமையகம் கரீம்கஞ்ச் நகரில் உள்ளது. இந்த மாவட்டம் 1809 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. [1]

பொருளாதாரம்

[தொகு]
உழவு நிலங்கள்

இந்த மாவட்டத்தில் உழவுத் தொழிலே பொருளாதார வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

[தொகு]

இந்த மாவட்டத்தை ஐந்து வட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: கரீம்கஞ்சு, பதர்பூர், நிலம்பசார், பாதேர்கண்டி, ராமகிருஷ்ண நகர்

போக்குவரத்து

[தொகு]

இந்த மாவட்டத்தில் ரயில், சாலைவழிப் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கரீம்கஞ்சு நகரில் ரயில் நிலையம் உள்ளது. கரீம்கஞ்சு நகரில் இருந்து குவகாத்திக்கு பேருந்துகள் செல்கின்றன. ஏனைய வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்போது, 1,217,002 மக்கள் வசித்தனர். [2]

சதுர கிலோமீட்டருக்குள் 673 மக்கள் என்ற அளவில் மக்கள் அடர்த்தி உள்ளது. [2] ஆயிரம் ஆண்களுக்கு இணையாக 961 பெண்கள் என்ற அளவில் பால் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. [2] இங்கு வசிப்பவர்களில் 79.72% பேர் கல்வியறிவு பெற்றுள்ளனர்.[2] முஸ்லீம்களும் இந்துக்களும் பெரும்பான்மையினராக உள்ளனர். பெரும்பான்மையானோர் வங்காள மொழியைப் பேசுகின்றனர். சிலர் மணிப்புரி மொழியிலும் பேசுகின்றனர். மெய்தெய், குக்கி, திரிப்புரி, காசி ஆகிய பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர்.

சான்றுகள்

[தொகு]
  1. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Assam: Government". India 2010: A Reference Annual (54th ed.). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting, Government of India. pp. 1116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-230-1617-7. பார்க்கப்பட்ட நாள் 2011-10-11. {{cite book}}: |last1= has generic name (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.

இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கரீம்கஞ்சு_மாவட்டம்&oldid=3849786" இலிருந்து மீள்விக்கப்பட்டது