ஹாபலாங்

ஆள்கூறுகள்: 25°10′08″N 93°00′58″E / 25.169°N 93.016°E / 25.169; 93.016
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாபலாங்
வெள்ளை எறும்பு மலைகள் நகரம்
நகரம்
ஹாபலாங் is located in அசாம்
ஹாபலாங்
ஹாபலாங்
அசாம் மாநிலத்தில் ஹாபலாங் நகரத்தின் அமைவிடம்
ஹாபலாங் is located in இந்தியா
ஹாபலாங்
ஹாபலாங்
ஹாபலாங் (இந்தியா)
ஹாபலாங் is located in ஆசியா
ஹாபலாங்
ஹாபலாங்
ஹாபலாங் (ஆசியா)
ஆள்கூறுகள்: 25°10′08″N 93°00′58″E / 25.169°N 93.016°E / 25.169; 93.016
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
கோட்டம்பராக் பள்ளத்தாக்கு
மாவட்டம்திமா ஹசாவ் மாவட்டம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஹாபலாங் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்12.79 km2 (4.94 sq mi)
ஏற்றம்966.216 m (3,170.000 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்43,756
 • அடர்த்தி3,400/km2 (8,900/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஅசாமிய மொழி
 • பிற மொழிகள்வங்காள மொழி, ஆங்கிலம், இந்தி
 • வட்டார மொழிதிமசா மொழி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்788819 & 788820
தொலைபேசி குறியீடு எண்03673
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS 08-X XXXX

ஹாபலாங் (Haflong), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் பராக் பள்ளத்தாக்கில் அமைந்த திமா ஹசாவ் மாவட்ட்த்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும்.[2]இதுவே அசாம் மாநிலத்தின் ஒரே மலை மாவட்டம் ஆகும். அசாமிய மொழியில் திமா ஹசாவ் என்பதற்கு எறும்புகளின் மலை எனப்பொருள்[3] இது கவுகாத்திக்கு தென்கிழக்கில் 325.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேஜ்பூருக்கு தெற்கில் 261.6 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 14 வார்டுகளும், 8,739 வீடுகளும் கொண்ட ஹாபலாங் நகரத்தின் மக்கள் தொகை 43,756 ஆகும். அதில் ஆண்கள் 22,838 மற்றும் பெண்கள் 20,918 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 93.1% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 1,070 மற்றும் 23,348 ஆகவுள்ளனர். திமாசா மக்கள், சீமீ நாகா, ஹிமார், குக்கீ, பியாத், ஹிராங்கவல், வைபேய், கர்பி ஆகிய இனங்களைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் வாழ்கின்றனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 61.93%, இசுலாமியர் 4.54%, கிறித்தவர்கள் 32.48 மற்றும் பிறர் 1.18% ஆகவுள்ளனர்.[4]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், ஹாபலாங்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 28.8
(83.8)
25.2
(77.4)
28.4
(83.1)
29.0
(84.2)
20.0
(68)
28.3
(82.9)
26.5
(79.7)
28.2
(82.8)
25.8
(78.4)
24.3
(75.7)
26.0
(78.8)
18.1
(64.6)
29
(84.2)
உயர் சராசரி °C (°F) 19.6
(67.3)
20.2
(68.4)
21.0
(69.8)
22.2
(72)
22.2
(72)
25.7
(78.3)
24.9
(76.8)
23.2
(73.8)
22.7
(72.9)
22.3
(72.1)
21.6
(70.9)
20.7
(69.3)
22.19
(71.95)
தாழ் சராசரி °C (°F) 8.3
(46.9)
12.0
(53.6)
15.9
(60.6)
20.0
(68)
22.7
(72.9)
20.9
(69.6)
20.6
(69.1)
20.6
(69.1)
21.7
(71.1)
21.9
(71.4)
16.7
(62.1)
11.8
(53.2)
17.76
(63.97)
பதியப்பட்ட தாழ் °C (°F) 3.7
(38.7)
4.1
(39.4)
6.3
(43.3)
12.0
(53.6)
13.2
(55.8)
15.4
(59.7)
18.4
(65.1)
18.1
(64.6)
15.7
(60.3)
10.6
(51.1)
8.3
(46.9)
5.0
(41)
3.7
(38.7)
மழைப்பொழிவுmm (inches) 11.9
(0.469)
18.3
(0.72)
55.8
(2.197)
147.9
(5.823)
244.2
(9.614)
316.4
(12.457)
345.4
(13.598)
264.3
(10.406)
185.9
(7.319)
91.2
(3.591)
18.7
(0.736)
7.1
(0.28)
1,707.1
(67.209)
ஈரப்பதம் 69 55 47 48 55 51 53 52 53 52 52 52 53.3
சராசரி மழை நாட்கள் 1.8 2.9 5.8 13.1 17.0 19.6 22.3 18.5 15.2 7.4 2.8 1.3 127.7
சூரியஒளி நேரம் 106.3 174.7 180.1 181.0 152.2 102.0 104.0 121.2 98.0 104.6 131.0 132.5 1,587.6
Source #1: World Meteorological Organization.[5] NOAA (extremes & humidity, 1971–1990)[6]
Source #2: Hong Kong Observatory.[7]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாபலாங்&oldid=3607088" இருந்து மீள்விக்கப்பட்டது