அசாமிய இலக்கிய மன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

அசாம் சாகித்திய சபா என்பது அசாமிய மொழியையும், இலக்கியத்தையும் வளர்க்க உருவாக்கப்பட்ட மன்றம். இதற்கு இந்திய மானிலமாகிய அசாமின் பல்வேறு பகுதிகளில் கிளைகள் உள்ளன.

வரலாறு[தொகு]

முற்காலத்தில் அசாமிய மொழி வளர்ச்சியடையாமல் பின்தங்கி இருந்தன. பிரித்தானியர்களின் ஆட்சிக்கு பிறகே, இவர்களின் மொழி குறித்து சிந்திக்கத் தொடங்கினர். அதன் விளைவாக, அசாமிய சாகித்திய சபை உருவானது. ஆண்டுதோறும் கூட்டங்கள் நடத்தப்பட்டு, இலக்கியம் குறித்தான விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர், ஆண்டுக்கு இரண்டு முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. அசாம் சாகித்திய சபா பத்திரிகா என்ற இதழையும் வெளியிடுகிறது.

இலக்குகள்[தொகு]

  • அசாமிய மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கு உதவுதல்
  • அகராதி, ஆய்வேடுகள், நூல்கள் உள்ளிட்டவற்றைப் பதிப்பித்தல்
  • எழுத்தாளர்களுக்கான நிதி உதவி செய்தல்
  • கலை, இசை, சிற்பக் கலைகளை ஊக்குவித்தல்
  • மக்களிடையே அசாமிய மொழியை பரப்ப, துண்டுச் சீட்டுகள் அடித்து வழங்குதல்

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_இலக்கிய_மன்றம்&oldid=2266637" இருந்து மீள்விக்கப்பட்டது