தேவக இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவக இராச்சியம்
??–கி பி 5ஆம் நூற்றாண்டு
தலைநகரம்அறியப்படவில்லை
அரசாங்கம்முடியாட்சி
வரலாற்று சகாப்தம்மத்தியகால இராச்சியங்கள்
• தொடக்கம்
??
• முடிவு
கி பி 5ஆம் நூற்றாண்டு
தற்போதைய பகுதிகள் இந்தியா

தேவக இராச்சியம் (Davaka kingdom) இந்தியத் துணைக்கண்டத்தின் தற்கால மத்திய அசாம் பகுதியில் விளங்கியது.[1] சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் மூலம், குப்தப் பேரரசின் ஐந்து எல்லை நாடுகளில் ஒன்றாக, பரத கண்டத்தின் கிழக்குப் பகுதியில் பிராமணர்கள் ஆண்ட தேவக இராச்சியம் இருந்தது என அறியப்படுகிறது. தற்கால இந்திய மாநிலமான அசாமின் நகாமோ மாவட்டம், தேவக இராச்சியத்துடன் தொடர்புறுத்தி வரலாற்று ஆய்வாளரான என். கே பட்டாசாலி குறிப்பிடுகிறார். [2]

வரலாறு[தொகு]

கி பி நான்காம் நூற்றாண்டில் காமரூப பேரரசின் மேற்கு எல்லை நாடாக தேவக இராச்சியம் இருந்ததாக, சமுத்திரகுப்தரின் அலகாபாத் தூண்களில் பொறிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

கி பி ஆறாம் அல்லது ஏழாம் நூற்றாண்டில் தேவக இராச்சியம் காமரூபப் பேரரசில் இணைக்கப்பட்டதாக கணக் லால் பருவா (1933) போன்ற வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்.[3] பி. என். புரி (1968) மற்றும் பி. சி. சௌத்திரி (1959) போன்ற வரலாற்றாளர்கள் ஐந்தாம் நூற்றாண்டின் முதற்பகுதியில், தேவக இராச்சியத்தின் மன்னர் கல்யாண வர்மன் (422-446) காலத்தில் காமரூபப் பேரரசில் உள்வாங்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Suresh Kant Sharma, Usha Sharma (2005), Discovery of North-East India: Geography, History, Cutlure, ..., Davaka (Nowgong) and Kamarupa as separate and submissive friendly kingdoms
  2. (Mookerji 1973, p. 24)
  3. Kanak Lal Barua (1933), Early history of Kāmarupa], Page 47 "in the sixth or the seventh century this kingdom of Davaka was absorbed by Kamarupa."
  4. "As regards the eastern limits of the kingdom, Davaka was absorbed within Kamarupa under Kalyanavarman and the outlying regions were brought under subjugation by Mahendravarman." (Choudhury 1959, p. 47)

ஆதார நூற்பட்டியல்[தொகு]

  • Choudhury, P. C. (1959). The History of Civilization of the People of Assam to the Twelfth Century AD. Department of History and Antiquarian Studies, Gauhati, Assam. 
  • Puri, Brij Nath (1968). Studies in Early History and Administration in Assam. Gauhati University. 
  • Mookerji, Radhakumud (1973). The Gupta Empire. Motilal Banarasidass. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேவக_இராச்சியம்&oldid=2308202" இலிருந்து மீள்விக்கப்பட்டது