டிக்பாய்

ஆள்கூறுகள்: 27°23′N 95°38′E / 27.38°N 95.63°E / 27.38; 95.63
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டிக்பாய்
நகரியம்
அடைபெயர்(கள்): எண்ணெய் நகரம்
டிக்பாய் is located in அசாம்
டிக்பாய்
டிக்பாய்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் திக்பை நகரியத்தின் அமைவிடம்
டிக்பாய் is located in இந்தியா
டிக்பாய்
டிக்பாய்
டிக்பாய் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°23′N 95°38′E / 27.38°N 95.63°E / 27.38; 95.63
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்தின்சுகியா
அரசு
 • நிர்வாகம்டிக்பாய் நகரியம்
ஏற்றம்165 m (541 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்20,405
மொழிகள்
 • அலுவல் மொழிகள்அசாமியம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்786171
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-23

டிக்பாய் (Digboi) இந்தியாவின் வடகிழக்கில் உள்ள அசாம் மாநிலத்தின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள நகரியம் ஆகும். இதனை எண்ணெய் நகரம் என்றும் அழைப்பர். ஆசியாவின் முதல் கச்சா எண்ணெய் கிணறு டிக்பாயில் 1889ல் நிறுவப்பட்டது. மேலும் ஆசியாவின் முதல் கச்சா எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் 1901ல் டிக்பாயில் நிறுவப்பட்டது.

பிரித்தானியர்களால், ஆசியாவின் முதல் எண்ணெய் கிணறு, டிக்பாயில் 1889ல் தோண்டப்பட்டது. முதல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 1901ல் நிறுவப்பட்டது. [1]

டிக்பாய் எண்ணெய் நகரம்[தொகு]

இங்குள்ள மலைக்காடுகளில் சுற்றித் திரியும் யாணைகளின் கால்களில் படிந்த எண்ணெயைக் கொண்டு, 1867ல் அசாம் இரயில்வே அலுவலர்கள் இப்பகுதியில் எண்ணெய் வளம் இருப்பதை உறுதி செய்தனர்.

ஆங்கிலேயர்கள், இங்கு எண்ணெய் கிணற்றை தோண்டுவதற்கு, தொழிலாளர்களுக்கு "dig-boy-dig" என்று கூறி உற்சாகம் அளித்தனர். இதற்கு ஆங்கிலத்தில் தோண்டு பையனே தோண்டு என்று பொருள்.

1889ல் அசாம் எண்ணெய் நிறுவனத்தை நிறுவி, ஆங்கிலேயர்கள் இப்பகுதியில் 178 அடி ஆழத்தில் ஒரு சிறு எண்ணெய்க் கிணற்றை தோண்டுகையில் கச்சா எண்ணெய் ஊற்றெடுத்தது. எனவே டிக்பாயில் ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையம் ஒன்றை 1901ல் நிறுவினர்.

டிக்பாய் எண்ணெய் வயல்கள், முதலாம் உலகப் போரின் போது 7,000 barrels per day (1,100 m3/d) கச்சா எண்ணெயை உற்பத்தி செய்தது.

டிக்பாயின் தற்போதைய கச்சா எண்ணெய் உற்பத்தி, நாளான்றுக்கு 240 barrels per day (38 m3/d) ஆகும். இங்கு ஆயிரத்திற்கும் மேலான எண்ணெய்க் கிணறுகள் தோண்டப்பட்டுள்ளது.

டிக்பாய் எண்ணெய் கிணறு தோண்டப்பட்டதன் நூற்றாண்டை சிறப்பிக்கும் விதமாம 1989ல் இந்திய அரசின் அஞ்சல் துறை, டிக்பாய் எண்ணெய் வயல்களில் படத்துடன் கூடிய அஞ்சல் தலை வெளியிட்டடது.

டிக்பாய் எண்ணெய் வயல்கள் இந்தியன் ஆயில் கார்பரேசன் நிறுவனத்தின் கீழ் உள்ளது. தற்போது டிக்பாய் எண்ணெய் வயல்களில் கச்சா எண்ணெய் உற்பத்தி, 2003ல் 0.65 MMTPA ஆக குறைந்துள்ளது.

புவியியல்[தொகு]

டிக்பாய் 27°22'48.0"N 95°37'48.0"E பாகையில் அமைந்துள்ளது. [2] கடல் மட்டத்திலிருந்து 165 மீட்டர் உயரத்தில் அமைந்த டிக்பாய் எண்ணெய் நகரம், அசாம் மாநிலத் தலைநகரம் கௌகாத்திற்கு வடகிழக்கே 541 கிமீ தொலைவில், அருணாச்சலப் பிரதேசம் மாநில எல்லையருகே உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, எட்டு வார்டுகள் கொண்ட டிக்பாய் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 21,736 ஆகும். அதில் ஆண்கள் 10,964, பெண்கள் 10,772 ஆக உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 1745 ஆகும். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 982 ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதம் 92.08 % ஆக உள்ளது. [3] இந்நகரத்தில் அசாமிய மொழி, வங்காள மொழி, நேபாளி மொழி, பிகாரி மொழி, மார்வாரி மொழிகள் அதிகம் பேசப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Assam Govt website". Archived from the original on 2014-08-28. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  2. "Falling Rain Genomics, Inc - Digboi". Archived from the original on 2007-03-16. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  3. Digboi Population Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிக்பாய்&oldid=3556633" இலிருந்து மீள்விக்கப்பட்டது