பஜாலி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஜாலி மாவட்டம்
மாவட்டம் (இந்தியா)
Location of பஜாலி மாவட்டம்
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
வருவாய் கோட்டம்மேல் அசாம் கோட்டம்
நிறுவப்பட்ட நாள்12 சனவரி 2021
தலைமையிடம்பாடசாலா
அரசு
 • மக்களவைத் தொகுதிகோக்ரஜார் & பர்பேட்டா
பரப்பளவு
 • Total418 km2 (161 sq mi)
மக்கள்தொகை (2011)
 • Total253,816
 • அடர்த்தி610/km2 (1,600/sq mi)

பஜாலி மாவட்டம் (Bajali district) அசாம் மாநிலத்தின் 34-வது மாவட்டமாக 12 சனவரி 2021 அன்று நிறுவப்பட்டது.[1] இது பார்பேட்டா மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாக நிறுவப்பட்டது.[2] [3] இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் பாடசாலா நகரம் ஆகும்.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]
பஜாலி மாவட்ட மொழிகள் (2011)[4]

  அசாமிய மொழி (74.48%)
  வங்காள மொழி (20.90%)
  போரோ மொழி (4.28%)
  பிற மொழிகள் (0.34%)

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பஜாலி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 2,53,876 ஆகும். 418 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 19,192 (7.56%) மற்றும் 11,486 (4.52%) ஆகவுள்ளனர். இம்மாவட்ட மக்கள் தொகையில் அசாமிய மொழியை 1,89,075 பேரும், வங்காள மொழியை 53,052 பேரும், போரோ மொழியை 10,877 பேரும் பேசுகின்றனர். இம்மாவட்டத்தில் இந்துக்கள் 67.90%, இசுலாமியர் 31.91%, பிறர் 0.19% ஆகவுள்ளனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Desk, Sentinel Digital (2021-01-13). "'Bajali' Becomes the 34th Full-Fledged District of Assam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-16.
  2. "Bajali becomes Assam's 34th district". thenewsmill.com (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-02-10. பார்க்கப்பட்ட நாள் 2021-07-10.
  3. Desk, Sentinel Digital (2020-08-10). "'Bajali' to become the 34th full-fledged district of Assam - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-11-26.
  4. 2011 census of India - Population by Mother Tongue

"https://ta.wikipedia.org/w/index.php?title=பஜாலி_மாவட்டம்&oldid=3413181" இலிருந்து மீள்விக்கப்பட்டது