அசாமிய இலக்கியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அசாமிய இலக்கியம், அசாமிய மொழியில் உருவாகிய கதை, கவிதை, சிறுகதை, ஆவணம் உள்ளிட்டவற்றை சேர்த்தே குறிக்கிறது.

தற்கால அசாமிய இலக்கியம் ஜோனாகி என்ற இதழில் இருந்து தொடங்குகிறது. இந்த இதழ் 1889ஆம் ஆண்டு முதல் வெளியாகிறது. இந்த இதழில் வெளியான சிறுகதையை எழுதிய பலர் பிற்காலத்தில் பெரிய எழுத்தாளர்களாக உருவாகினர்.

தற்கால இலக்கியத்தை வளப்படுத்தியோரில் இந்திரா கோஸ்வாமி, பபேந்திர நாத் சய்கியா ஆகியோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். அசாமிய சமூகத்தின் விருப்பத்தை பிரதிபலிக்கும் அமைப்பாக அசாமிய இலக்கிய மன்றம் 1917ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பு அசாமிய மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கியத்தை ஊக்குவிக்கவும் தோற்றுவிக்கப்பட்டது.

மேலும் பார்க்க[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசாமிய_இலக்கியம்&oldid=2266638" இருந்து மீள்விக்கப்பட்டது