வேத மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதம் எழுத்து வடிவம் பெறாத ஒரு மொழியாகச் சங்ககாலம் வரையில் நிலவிவந்தது.[1] இதனைத் தமிழ் இலக்கண உரையாசிரியர்கள் ஆரியம் என்றும், வடமொழி என்றும் குறிப்பிடுகின்றனர். இந்த வேத-மொழி வேதம் எழுதப்பட்ட கி.மு. 1500 ஆண்டைச் சார்ந்தது. இதன் காலம் பலராலும் ஒப்புக்கொண்டுள்ளபடி கி.மு. மூன்றாம் நூற்றாண்டு. தொல்காப்பியம் நூலுக்குச் சிறப்புப் பாயிரம் எழுதிய தொல்காப்பியரின் ஒருசாலை மாணாக்கர் பனம்பாரனார். இவர் தொல்காப்பியரை ஐந்திரம் நிறைந்தவன் எனக் குறிப்பிடுகிறார். ஐந்திரம் பாணினியின் இலக்கணத்துக்கு முன்னோடியாக இருந்த பல இலக்கண நூல்களில் ஒன்று.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. பார்ப்பன மகனே!
    எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
    பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
    மருந்தும் உண்டோ? (குறுந்தொகை 156)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேத_மொழி&oldid=3600193" இருந்து மீள்விக்கப்பட்டது