ஐந்திரம் (இலக்கண நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஐந்திரம் என்பது சங்கத்தமிழ் காலத்து இலக்கணநூல். இந்த நூல் பற்றிய மேற்கோள் குறிப்புகள் எதுவும் சமஸ்கிருத நூல்களில் இல்லை.. தமிழில் அகத்தியம் பற்றிய குறிப்புகள் தமிழ்நூல்களில் உள்ளது.

ஐந்திரம் என்னும் நூல் இந்திரனால் செய்யப்பட்டது என்பர். தமிழ் இலக்கண நூலாகத் தொல்காப்பியம் கிடைத்துள்ளது போல வடமொழி இலக்கண நூலாக இப்போது கிடைத்துள்ள நூல் பாணினியம்.

பாணினியத்துக்கு முந்துநூலாகக் கண்டறியப்பட்டுள்ள வடமொழி இலக்கண நூல்கள் 13. அவற்றில் ஐந்திரம் பற்றிய குறிப்புகள் வடமொழி நூல்களில் இல்லை . தொல்காப்பிய நூலுக்குத் தரப்பட்டுள்ள பனம்பாரனாரின் பாயிரம் ஆகும். இதில் 'ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்'[1] என்று பனம்பாரனார் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்திரம் பற்றிய பர்னல் ஆய்வு தொல்காப்பியம் பாணினியின் காலத்துக்கு முந்தியது என்பதைக் காட்டுகிறது.

பாணினியின் காலம் கி.மு. எட்டாம் நூற்றாண்டு என்று கணிக்கப்பட்டாலும், கி.மு. நான்காம் நூற்றாண்டு என்று பலரும் கூறிவருகின்றனர். இந்தப் பாணினிக்கு முந்துநூலாக இருந்த 13 நூல்களில் முதலாவதாகக் கருதப்படும் ஐந்திரம் மிகப் பழமையானது என்பது தெளிவு. தொல்காப்பியர் காலத்தில் பாணினியம் இல்லை. ஐந்திரம் என்னும் நூல்தான் இருந்தது. பனம்பாரனாரின் பாயிரத்தில் உள்ளபடி தொல்காப்பியர் 'முந்துநூல்' கண்டவர். அதாவது அகத்தியத்தில் ஆழங்கால் பட்டவர். அத்துடன் ஐந்திர இலக்கண அறிவும் நிரம்பியவர். எனவே ஐந்திரம் என்னும் நூலும், தொல்காப்பியமும் சற்றேறக் குறைய சமகாலத்தவை எனக் கொள்ளத் தக்கவை. (கி.மு. எட்டாம் நூற்றாண்டு)

மாற்றுக்கருத்துகள் :

வடமொழி எழுத்தாளர்கள் எனக் கூறப்படும் வியாசரோ ,பாணினியோ பதஞ்சலியோ ஐந்திரம் என்ற நூலை கூறாததும் கேள்விக்குறியானதே.இந்திரன் பெயரை கூறிய திருவள்ளுவரும் ஐந்திரம் இந்திரனால் எழுதப்பட்டது எனக் கூறவில்லை.ஆனால் சிலப்பதிகாரம் (கி.பி முதல் நூற்றாண்டு) "விண்ணவர் கோமான் விழுநூல்"எனக்கூறுகிறது. [2] இதனை இந்திரனால் எழுதப்பட்டது என்றும்,இந்திரன் வழிவந்தவர்களால் எழுதப்பட்டது எனவும் கூறலாம். ஐந்திரம் எனக்கூறி சில காலக்கணக்குகளைக் கூறுபவர் கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆரியபட்டரே.அதாவது வடமொழி எழுத்தாளர்களில் இவரே முதன்முதலில் ஐந்திரம் என்ற பெயரைக் கூறுகிறார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த
    தொல்காப்பியன்எனத் தன்பெயர் தோற்றி
    ::::::::: - தொல்காப்பியப்பாயிரம்
  2. சிலப்பதிகாலம், காடுகாண் காதை, அடி 99
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்திரம்_(இலக்கண_நூல்)&oldid=2505649" இருந்து மீள்விக்கப்பட்டது