உள்ளடக்கத்துக்குச் செல்

தொல்காப்பியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொல்காப்பியர்
(திரண தூமாக் கினி)[1]
பிறப்புகன்னியாகுமரி
தொழில்நூலாசிரியர்
குறிப்பிடத்தக்க படைப்புகள்தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல்

தொல்காப்பியர் என்பவர் தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் ஆவார். இவர் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.[2] இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.

தொல்காப்பியரின் காலம்

[தொகு]
  • தொல்காப்பியத்தினை எழுதியவராகக் கருதப்படுபவர் தொல்காப்பியர் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
  • தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர்[3] என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது[4]' என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
  • தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர்[5] என தமிழ் சிடடீசு என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
  • வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
  • "தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது[6]" என வித்வான் க. வெள்ளைவாரணனார் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
  • இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
  • மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர் ஆய்வின் படி கி.மு.700 என்று முன்மொழியப்படு தமிழறிஞர் தமிழண்ணல் தலைமையில் நடைபெற்ற புலவர் கூட்டத்தில் கி.மு.711 ஆம் ஆண்டு என தொல்காப்பியர் காலம் வரையரை செய்யப்பட்டுள்ளது. இதனையே தமிழ்நாடு அரசும் கடைப்பிடித்து வருகிறது.

தொல்காப்பியர் விருது

[தொகு]

ஆண்டுதோறும் குடியரசுத் தலைவர் செம்மொழித் தமிழ் விருதின் ஒரு பகுதியாகத் தொல்காப்பியர் விருது வழங்கப்படுகிறது. மதிப்புச் சான்றிதழ், நினைவுப் பரிசு, ஐந்து இலட்சம் உரூபாய்ப் பரிசுத் தொகை ஆகியவை இவ்விருதினுள் அடங்கும்; ஒவ்வோர் ஆண்டும் ஒர் இந்திய அறிஞருக்குரியது.

தொல்காப்பியர் விருது பெற்றோர்.

முதலான தமிழறிஞர்கள் தொல்காப்பியர் விருதினைப் பெற்றுள்ளனர். [7]


மேற்கோள்கள்

[தொகு]
  1. ":: TVU ::". www.tamilvu.org. Retrieved 2023-09-12.
  2. https://www.vikatan.com/anandavikatan/2011-aug-17/en-vikatan---madurai-edition/9246.html
  3. தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை, பக்கம் - 26
  4. சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் - டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
  5. தமிழ் ஸ்டடீஸ் - எம்.சீனிவாச ஐயங்கார்.
  6. தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
  7. "விருது". Retrieved 21-10-2021. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொல்காப்பியர்&oldid=4417069" இலிருந்து மீள்விக்கப்பட்டது