உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தொல்காப்பியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தவறான ஆதாரமற்ற பதிவுகள் தொடர்பாக

[தொகு]

வணக்கம்.

  1. தொல்காப்பியர் பெயர் திரணதூமாக்கினி என்பதற்குச் சான்று தேவை.

தொல்காப்பியரை ஆரிய மயமாக்கும் எழுத்தாளர்களின் ஆதாரமற்ற கூற்றுகள் சான்றாகாது.

2. தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரும் அல்லர். தன் ஆசிரியர் பெயரைக் குறிப்பிடாமல் தமிழ்ச் சங்கத்தில் எந்த நூலும் அரங்கேற்றம் ஆகாது. அதனால் தொல்காப்பியரின் ஆசிரியர் பெயரை மரியாதை நிமித்தம் கூறாமல் ஆசிரியரின் ஊர் பெயர் கூறி அதங்கோட்டு ஆசான் எனவும் பனம்பாரனார் கூறியுள்ளார். இதனால் அகத்தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் அல்லர் எனத் தெரிகிறது.


தொல்காப்பியர் என்பதே இயற்பெயர் தான் - சான்று இதோ:

தொல்காப்பியர் என்பதே தொல்காப்பியரின் இயற்பெயர் தான் என்பதைத் தொல்காப்பியருடன் பயின்ற ஒருசாலை மாணாக்கரான பனம்பாரனாரே தொல்காப்பியப் பாயிரத்தில் கூறியுள்ளார்.

//புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்

நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கறை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி

மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த

தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்

பல்புகழ் நிறுத்த படிமை யோனே//


எனக் கூறியும் தொல்காப்பியர் என்பது இயற்பெயர் அல்ல என நம்புவது ஆராய்ச்சி அறிவில் ஏற்படும் தடைக்கற்களாகும். மூலத்தை மட்டும் ஆராய்ந்தால் தான் முழு உண்மை தெரியும். உரையாசிரியர்கள் முதல் இக்கால அறிவுஜீவிகள் எனத் தங்களை நம்புவோர் வரை எழுதப்பட்டுள்ள உரைகளில் உரைபேதங்கள் ஏராளம் உள்ளன. நடுநிலையற்ற எழுத்துக்களைத் திட்டமிட்டுப் பரப்பும் பொய் செய்திகளுக்கு ஏமாற வேண்டாம்.


எனவே திரண தூமாக்கினி என்பவர் தொல்காப்பியர் அல்லர். அதை நிறுவ சான்று தேவை. கார்தமிழ் (பேச்சு) 10:29, 12 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம்.
கார்த்தி. தமிழ் இலக்கியங்களில் இடைச்செருகல் என்பது பன்னெடுங்காலமாக இருந்தே வருகிறது.[சான்று தேவை] (இப்படி குறிப்பிடலாம். அதனை நீக்க, வேண்டுகோள். அக்கட்டுரையின் பக்கத்திலேயே தரலாம். பலர் தந்தால், இங்குள்ள கட்டக அணுக்கம் உள்ளவர்(sysop) நீக்குவர்.) விக்கியில் உள்ள அனைத்தும் இறுதியான, சான்றுகளுள்ள தரவு அல்ல. தரமான தரவுகளை எழுதுபவர்கள் இங்கு செயற்பட எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. அதே நேரத்தில் நமது கடப்பாடுகளை நாம் உணர வேண்டும். ஒன்றில் பிழை தவறு என்று கூறுவதால் என்ன பலன்? மூல நூல்கள் இருந்தால் தான், தவறை உணர்த்த முடியும். முதலில் அதைச் செய்வோம். மேலும், பன்னாட்டினர் பல ஆண்டுகள் ஆய்ந்து, விக்கிமீடிய உத்திகள் 2030 என்பதனை இதனை உருவாக்கியுள்ளனர். அதில் முதன்மையானது சான்றிடல். இது குறித்து இந்த பக்கத்தில் பிறரின் முயற்சிகளை அறிய இயலும். இதற்கு எந்த மாதிரி நுட்பங்கள் தேவை என்பதைக் குறித்து, இங்கு நீங்களோ, பிறரோ நேரடியாக விக்கிமீடிய நுட்ப குழுவுடன், உங்களின் தீர்வுகளைக் கூறலாம். பிறரின் நேரத்தினை காக்க முதலில், இந்த பக்கங்களில், ஏதாவது ஒரு சான்றாவது தருக. தரவுகளை மதிப்பிடுவதை விட, தரவுகளின் மதிப்பைக் கூட்டுவதே இன்றைய தேவை. என்னுடைய தனிப்பட்ட முன்மொழிவு யாதெனில், கட்டற்ற மூலத் தரவுகளை விக்கிமூலத்தில் தான் காக்க முடியும். ஒளி வந்தால் இருள் விலகும், தோழர். அதற்கு தான் பங்களிப்பாளர்கள் இல்லை. எனவே, கற்போம்! கற்பிப்போம். உழவன் (உரை) 02:14, 13 சனவரி 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தொல்காப்பியர்&oldid=3866967" இலிருந்து மீள்விக்கப்பட்டது