இந்திரா கோஸ்வாமி
இந்திரா கோஸ்வாமி | |
---|---|
பிறப்பு | 14 நவம்பர் 1942 குவஹாட்டி, இந்தியா |
இறப்பு | 29 நவம்பர் 2011[1] குமகம, குவஹாட்டி, அசோம், இந்தியா[2] | (அகவை 69)
தொழில் | செயல்திறனாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர், பேராசிரியர் மற்றும் எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
காலம் | 1956 முதல் (ஏறத்தாழ) |
வகை | [அசாமிய இலக்கியம் |
கருப்பொருள் | குடியிழந்தவர் நலன் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | -அந்துப்பூச்சி கடித்தழிந்த களிற்று அம்பாரி ([The Moth Eaten Howdah of a Tusker) -சின்னமஸ்தாவிடமிருந்து வந்த மனிதன் (The Man from Chinnamasta) -குருதி தோய்ந்த பக்கங்கள் (Pages Stained With Blood) |
துணைவர் | மாதவன் ராய்சோம் அய்யங்கார் (மறைவு) |
இந்திரா கோஸ்வாமி என்ற இயற்பெயரால் அறியப்படும் மாமோனி ராய்சோம் கோஸ்வாமி (Mamoni Raisom Goswami, நவம்பர் 14, 1942– 29 நவம்பர் 2011) அசாமியர்களிடையே பரவலாக மாமோனி பாய்தியோ,[3] ஓர் அசாமிய எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், கவிஞர் மற்றும் அறிவுஜீவி ஆவார்.
1982ஆம் ஆண்டின் சாகித்திய அகாதமி விருதையும் [4] 2000ஆம் ஆண்டின் ஞானபீட விருதையும் [5] வென்றவர். 2008ஆம் ஆண்டு இவர் பெற்ற பிரின்ஸ் கிளாஸ் விருது இந்தியர் ஒருவருக்கான முதல் பரிசாக அமைந்தது.[6]
இந்திய இலக்கிய உலகில் ஓர் சமகால எழுத்தாளராக மிகவும் பாராட்டப்படும் இந்திரா கோஸ்வாமியின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக அந்துப்பூச்சி கடித்தழிந்த களிற்று அம்பாரி ([The Moth Eaten Howdah of a Tusker), சின்னமஸ்தாவிடமிருந்து வந்த மனிதன் (The Man from Chinnamasta),குருதி தோய்ந்த பக்கங்கள் (Pages Stained With Blood) ஆகியன உள்ளன.
இந்திரா கோஸ்வாமி சமூக மாற்றத்திற்காக தமது எழுத்துக்கள் மூலமாகப் பாடுபட்டவர். தடைசெய்யப்பட்டுள்ள பிரிவினைவாத குழுவான உல்ஃபா எனப்படும் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணிக்கும் நடுவண் அரசிற்குமிடையே இவர் மத்தியஸ்தராக ஆற்றியப் பணிக்காக பெரிதும் அறியப்படுகிறார். இவரது முயற்சிகளால் மக்கள் கலந்தாய்வு குழு என்ற அமைதிக்குழு உருவானது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Jnanpith award winning Assamese litterateur Indira Goswami dies". Times of India. http://timesofindia.indiatimes.com/india/Jnanpith-award-winning-Assamese-litterateur-Indira-Goswami-dies/articleshow/10914222.cms. பார்த்த நாள்: November 29, 2011.
- ↑ "Mamoni Raisom Goswami passes away". Times of Assam. http://www.timesofassam.com/headlines/mamoni-roisom-goswami-passes-away/. பார்த்த நாள்: November 29, 2011.
- ↑ "Intimate Mornings with Mamoni Baideo". http://indiragoswami.blogspot.com/2006/11/intimate-mornings-with-mamoni-baideo.html.
- ↑ A History of Indian Literature
- ↑ Jnanpith Award Presented, The Hindu, 25 February 2002 பரணிடப்பட்டது 2012-11-07 at the வந்தவழி இயந்திரம்.
- ↑ "Principal Prince Claus Award for Indira Goswami, [[Assam Times]] 1 December 2008". http://www.assamtimes.org/hot-news/2432.html.
வெளியிணைப்புகள்[தொகு]
|
|