குவகாத்தி பல்கலைக்கழகம்
Appearance
(குவஹாத்தி பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
গুৱাহাটী বিশ্ববিদ্যালয় | |
குறிக்கோளுரை | வித்யானா சதயேதா |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | கல்வியின் மூலம் சாதிக்கலாம் |
வகை | பொதுத்துறை |
உருவாக்கம் | 1948 |
வேந்தர் | அசாமின் ஆளுநர் |
துணை வேந்தர் | பிரதாப் ஜோதி காண்டிகு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புற வளாகம் |
சுருக்கப் பெயர் | GU |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு, தேசிய மதிப்பீடு, தரச்சான்று அவை, இந்தியப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு |
இணையதளம் | www.gauhati.ac.in |
குவகாத்தி பல்கலைக்கழகம் (Gauhati University) வட கிழக்கு இந்திய மாநிலமான அசாமில் உள்ளது. இது வட கிழக்கு இந்தியாவில் முதன்முதலாக தொடங்கப்பட்ட பொதுத்துறைப் பல்கலைக்கழகம் ஆகும். இது 1948-ஆம் ஆண்டு, சனவரி 26ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இது குவஹாத்தி நகரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் 239 கல்லூரிகளை இணைத்துக் கொண்டுள்ளது. [2]
வளாகம்
[தொகு]இது குவஹாத்தி நகரில் அமைந்துள்ளது. இங்கு 3,000 மாணவர்கள் தங்கிப் படிக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் விடுதி வசதிகள் உள்ளன.
கல்வி
[தொகு]- கலைத் துறை
- அரபு மொழி
- அசாமிய மொழி
- வங்காள மொழி
- போடோ மொழி
- தொடர்பாடல், ஊடகவியல்
- குறைப்பாட்டியல்
- பொருளியல்
- கல்வி
- ஆங்கிலம்
- ஆங்கில மொழி பயிற்சி
- நாட்டுப்புறக் கலைகள்
- வெளிநாட்டு மொழிகள்
- இந்தி
- வரலாறு
- புவியியல்
- நூலகம் மற்றும் தகவல் அறிவியல்
- மொழியியல்
- நவீன இந்திய மொழிகள் (தமிழ், ஒடியா, நேபாளி)[3][4]
- பாரசீக மொழி
- மெய்யியல்
- அரசறிவியல்
- மெய்யியல்
- சமசுகிருதம்
- சமூகவியல்
- பெண்ணியல்
- அறிவியல் துறை
- தொழில் நுட்பத் துறை
- உயிரியல்
- உயிரித் தொழில்நுட்பம்
- உயிரித் தொழில் நுட்பமும், உயிரிப் பொறியியலும்
- வேதியியல்
- கணினியியல்
- மின்னணுப் பொறியியல்
- மின்னணுவியல், தொடர்பாடல் தொழில்நுட்பம்
- தகவல் தொழில்நுட்பம்
- இன்ஸ்ட்ருமெண்டேசன் & யூ.எஸ்.ஐ.சி
- கணித அறிவியல்
- இயற்பியல்
- பொருளியல் துறை
- மேலாண்மைத் துறை
- வணிக நிர்வாகம்
- சட்டத் துறை
கல்லூரிகள்
[தொகு]இது தொடங்கப்பட்ட போது 17 கல்லூரிகள் இணைக்கப்பட்டன. தற்போது 239 கல்லூரிகளை இணைத்துள்ளனர்.
தரவரிசை
[தொகு]இந்தியப் பல்கலைக்கழகங்களை இந்தியா டுடே தரவரிசைப்படுத்தியது. அந்த பட்டியலில் குவகாத்தி பல்கலைக்கழகம் 32-ஆம் இடத்தைப் பெற்றது.[5]
சான்றுகள்
[தொகு]- ↑ "A d m i n i s t r a t i o n". Gauhati.ac.in. Archived from the original on 2012-02-15. பார்க்கப்பட்ட நாள் 2012-02-14.
- ↑ "Affiliated I n s t i t u t i o n s". Gauhati.ac.in. Archived from the original on 2011-11-04. பார்க்கப்பட்ட நாள் 2012-02-14.
- ↑ "MODERN INDIAN LANGUAGES AND LITERARY STUDIES- GAUHATI UNIVERSITY". Archived from the original on 2017-05-11. பார்க்கப்பட்ட நாள் 2017-04-21.
- ↑ Gauhati University to offer PG courses in 4 regional languages - Times of India
- ↑ India's best universities
இணைப்புகள்
[தொகு]- பல்கலைக்கழகத்தின் இணையதளம் பரணிடப்பட்டது 2015-08-10 at the வந்தவழி இயந்திரம்