இந்திய இலக்கியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இந்திய இலக்கியங்கள் எனப்படுபவை இந்திய துணைக்கண்டத்தில் வெளிவந்த இலக்கியங்கள் ஆகும். குடியரசு இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் உள்ளன.

ஆரம்ப காலங்களில் இந்திய இலக்கியங்கள் வாய்மொழியாகவே கடந்துவந்துள்ளன. 1500-1200 காலகட்டத்தில் ரிக் வேதம் வாயிலாக சமஸ்கிருதம் வாய்மொழி இலக்கியமாகத் துவங்கியது. முதலில் பண்டைய சமஸ்கிருதம், சங்க இலக்கியம் போன்றவை முதலில் தோன்றின. அதைத் தொடர்ந்து 9 மற்றும் 11 ஆம் நுற்றாண்டுகளில் கன்னடம் மற்றும் தெலுகு வளரத் தொடங்கின. பின மராத்தி, ஒடியா, பெங்காளி, ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருது போன்ற மொழிகளின் வளர்ச்சி உண்டாகத் தொடங்கின. 20 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் பெங்காலி மொழிக்கவிஞரான இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசைப் பெற்றார். இந்திய இலக்கிய உலகில் இரண்டு பெரும் இலக்கிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அவை, சாகித்ய அகாடமி மற்றும் ஞானபீட விருது.

தொன்மையான இந்திய மொழிகளின் இலக்கியங்கள்[தொகு]

வேத இலக்கியம்[தொகு]

இந்துக்களின் புனிதங்களை உள்ளடக்கிய சமஸ்கிருத தொகுப்புகளை வேதம் என்கிறோம்.

சமஸ்கிருத வீர காவியம்[தொகு]

வேத வியாசர் எழுதிய மகாபாரதமும் வால்மீகி எழுதிய இராமாயணமும் வீர காவியங்களாகக் கருதப்படுகின்றன.

தொன்மையான சமஸ்கிருத இலக்கியம்[தொகு]

தொன்மையான இலக்கியமாக காளிதாசர் எழுதிய ரகுவம்சம் போற்றப்படுகிறது. பாணினியின் அஷ்டத்யாயி சமஸ்கிருத மொழியின் இலக்கணத்தையும் ஒலியியலையும் விளக்குகிறது. மனுதர்மம் இந்துத்துவத்தின் முக்கியமாக இருக்கிறது. காளிதாசரின் மேகதுதம் மற்றும் சாகுந்தலா சமஸ்கிருதத்தின் முக்கியமான இலக்கியங்கள் ஆகும். மேலும் சூத்ரகரின் மிருச்சகடிகா, பாஷாவின் ஸ்வப்ன வாசவதத்தம் மற்றும் ஹர்ஷரின் ரத்னாவளி மிக முக்கிய இலக்கியங்களாகும். அதற்கு பின் ஜெயதேவரின் கீதகோவிந்தம் , சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் மற்றும் வாத்ஸ்யாயனாரின் காமசூத்திரம் சிறப்பு வாய்ந்தவை.

தமிழ் இலக்கியம்[தொகு]

 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான இலக்கிய வளத்தைக் கொண்டது தமிழ் இலக்கியம். தற்போது நமக்கு கிடைத்துள்ள தமிழின் மிகத் தொன்மையான நுல் தொல்காப்பியம். மனித நடைத்தை மற்றும் அரசியல் ஒழுக்கநெறிகளை விளக்கும் விதமாக திருக்குறள் உள்ளது. சைவம், வைணவம், சமணம், பௌத்தம், இஸ்லாமியம் மற்றும் ஐரோப்பிய எழுத்தாளர்கள் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு பெரும்பங்கு ஆற்றியுள்ளனர்.

Footnotes[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_இலக்கியங்கள்&oldid=2724458" இருந்து மீள்விக்கப்பட்டது