கோகராஜார் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோகராஜார் மாவட்டம்
কোকৰাঝাৰ জিলা
மாவட்டம்
அசாம் வரைபடத்தில் கோகராஜார் மாவட்டத்தின் அமைவிடம்
அசாம் வரைபடத்தில் கோகராஜார் மாவட்டத்தின் அமைவிடம்
நாடுஇந்தியா
மாநிலம்அசாம்


கோகராஜார் மாவட்டம் (Kokrajhar district, அசாமிய மொழி: কোকৰাঝাৰ জিলা) வட கிழக்கு இந்தியாவின் அசாம் மாநிலத்தின் ஓர் மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் இதே பெயரிலுள்ள கோகராஜார் நகரமாகும். இந்த மாவட்டத்தின் பரப்பளவு 3,169.22 ச.கிமீ ஆக உள்ளது. 2001 கணக்கெடுப்பின்படி, இந்த மாவட்டத்தின் மக்கள்தொகை 905,764 ஆகும். இதில் இந்துக்கள் 594,168, இசுலாமியர் 184,441(20.36%) ஆகும்.

வரலாறு[தொகு]

கோகராஜார் முன்னதாக கோல்பரா மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1957ஆம் ஆண்டில் கோகராஜார் வட்டம் உருவானது. சூலை 1, 1983 அன்று இது மாவட்டமாக உயர்ந்தது.[1]

1989ஆம் ஆண்டில் செப்டம்பர் 29இல் கோகராஜார் மாவட்டத்தின் சில பகுதிகளையும் கோல்பரா மாவட்டத்தின் சில பகுதிகளையும் இணைத்து புதிய பொங்கைகாவ்ன் மாவட்டம் உருவானது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகராஜார்_மாவட்டம்&oldid=1685714" இருந்து மீள்விக்கப்பட்டது