இந்திய வெளியுறவுக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியா (அதிகாரப்பூர்வமாக இந்தியக் குடியரசு) பாலத்தீனம், திரு ஆட்சிப்பீடம் நியுவே உட்பட 201 நாடுகளுடன் முழுமையான தூதர்-வழித் தொடர்புகளைக் கொண்டுள்ளது.[note 1][1] வெளியுறவு அமைச்சு இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்குப் (foreign relations of India) பொறுப்பான அரசு நிறுவனம் ஆகும். உலகின் மூன்றாவது பெரிய இராணுவச் செலவு, இரண்டாவது பெரிய ஆயுதப் படை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் ஆகியவற்றுடன் இந்தியா ஒரு முக்கிய பிராந்திய சக்தியும், வளர்ந்து வரும் வல்லரசுமாகும்.[2][3]

வெளியுறவு அமைச்சின் கூற்றுப்படி, இந்தியப் பண்ணுறவாண்மையின் முக்கிய நோக்கங்களில் இந்தியாவின் தேசிய நலன்களைப் பாதுகாப்பது, பிற மாநிலங்களுடனான நட்புறவை மேம்படுத்துதல், "வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு" தூதரக சேவைகளை வழங்குதல் ஆகியவை அடங்கும்.[4] அண்மைய தசாப்தங்களில், இந்தியா ஒரு விரிவான வெளியுறவுக் கொள்கையைத் தொடர்ந்தது. ஏனைய கிழக்காசிய நாடுகளுடன் மிகவும் விரிவான பொருளாதார, மூலோபாய உறவுகளை உருவாக்குவதற்கு சார்க், கீழ்த்திசை கவனக் குவிப்புக் கொள்கை ஆகியவை மூலம் அண்டை நாடுகளுடனான உறவுக்கு முன்னுரிமையைக் கொண்டுள்ளது. இந்தியா மூலோபாய தெளிவின்மைக் கொள்கையையும் பராமரித்து வருகிறது, அதில் அதன் "முதலில் பயன்படுத்தக்கூடாது" என்ற அணுசக்திக் கொள்கை, உருசிய-உக்ரைனியப் போரில் அதன் நடுநிலை நிலைப்பாடு ஆகியவை அடங்கும்.

ஐக்கிய நாடுகள் அவை, ஆசிய வளர்ச்சி வங்கி, பிரிக்ஸ், ஜி-20 போன்ற பல பன்னாட்டு அரசு அமைப்புகளில் இந்தியா உறுப்பினராக உள்ளது. இவ்வமைப்புகள் வளர்ந்துவரும் மற்றும் வளர்ந்த நாடுகளின் முக்கிய பொருளாதார இடமாகப் பரவலாகக் கருதப்படுகிறது.[5] அணிசேரா இயக்கத்தின் நிறுவன உறுப்பினராக இந்தியா ஒரு முக்கிய செல்வாக்கை செலுத்துகிறது.[6] கிழக்காசிய உச்சிமாநாடு,[7] உலக வணிக அமைப்பு,[8] அனைத்துலக நாணய நிதியம்,[9] ஜி8+5[10] போன்ற பிற பன்னாட்டு அமைப்புகளிலும் இந்தியா முக்கிய மற்றும் செல்வாக்குமிக்க பங்கைக் கொண்டுள்ளது.[11] ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி,e சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஆகியவற்றிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது. முன்னாள் பிரித்தானியக் குடியேற்ற நாடாக, இந்தியா பொதுநலவாய அமைப்பிலும் உறுப்பினராக பிற பொதுநலவாய நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. அனைத்து 193 ஐநா உறுப்பு நாடுகள், 8 சார்பு மண்டலங்கள் உட்பட.

மேற்கோள்கள்[தொகு]

  1. "MEA | Briefs on Foreign Relations". www.mea.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 November 2021.
  2. "World Bank, International Comparison Program database: GDP, PPP (current international $)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  3. Schaffer, Terisita C (2008). "Partnering with India: Regional Power, Global Hopes". Strategic Asia 2008–09. NBR. https://www.nbr.org/publication/partnering-with-india-regional-power-global-hopes/. பார்த்த நாள்: 15 August 2020. 
  4. "Mission & Vision | About Us | Ministry of External Affairs, Government of India". www.mea.gov.in (in english). பார்க்கப்பட்ட நாள் 2023-04-21.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. "Asia to play bigger role on world stage: report - People's Daily Online". en.people.cn. Archived from the original on 7 August 2020. பார்க்கப்பட்ட நாள் 28 September 2020.
  6. "G8 SUMMIT: Developing Countries Stand Firm by Kyoto Protocol". Inter Press Service. 5 July 2005. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  7. "Analysts Say India'S Power Aided Entry Into East Asia Summit. | Goliath Business News". Goliath.ecnext.com. 29 July 2005. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  8. Guebert, Alan (5 August 2008). "Guebert: WTO talks show declining U.S. clout". Journal Star. பார்க்கப்பட்ட நாள் 15 August 2020.
  9. "Emerging economies eye IMF power". MmegiOnline. 26 October 2007. பார்க்கப்பட்ட நாள் 16 August 2020.
  10. Alford, Peter (7 July 2008). "G8 plus 5 equals power shift". The Australian இம் மூலத்தில் இருந்து 16 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081216135056/http://www.theaustralian.news.com.au/story/0,25197,23978188-2703,00.html. 
  11. "India, Brazil, South Africa – the power of three". Inter Press Service. 14 October 2007. https://www.bilaterals.org/?india-brazil-south-africa-the-9969. 

வெளி இணைப்புகள்[தொகு]