உள்ளடக்கத்துக்குச் செல்

எச். ஜே. கனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எச். ஜே. கனியா
1951-ல் நீதிபதி கனியா
முதல் இந்தியத் தலைமை நீதிபதி
பதவியில்
சனவரி 26, 1950 – நவம்பர் 6, 1951
நியமிப்புஇராசேந்திர பிரசாத்
பின்னவர்பதஞ்சலி சாஸ்திரி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புநவம்பர் 3, 1890
சூரத்து, பிரித்தானிய இந்தியா
இறப்பு6 நவம்பர் 1951(1951-11-06) (அகவை 61)
தேசியம்இந்தியர்
முன்னாள் கல்லூரிஅரசு சட்டக் கல்லூரி, மும்பை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை

எச். ஜே. கனியா (Sir Harilal Jekisundas Kania)( நவம்பர் 3, 1890—நவம்பர் 6, 1951) என்பவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதன் முதலாக அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

குசராத்து மாநிலத்தில் சூரத்தில் பிறந்த இவருடைய தாத்தா ஆங்கில அரசில் வருவாய்த் துறை அதிகாரியாகவும், தந்தையார் சமசுக்கிருத பேராசிரியராகவும் இருந்தார்கள். கனியா பாவ் நகரில் உள்ள சமல்தாசு கல்லூரியில் இளங்கலைப் பட்டமும் மும்பை அரசு சட்டக் கல்லூரியில் எல். எல். பி. மற்றும் எல். எல். எம். ஆகிய சட்டக் கல்வியை முடித்தார்.

நீதிமன்ற பணி

[தொகு]

1915-ல் மும்பை உயர்நீதி மன்றத்தில் பாரிஸ்டராகத் தொழில் தொடங்கினார். 1930-ல் மும்பை உயர்நீதி மன்றத்தில் தற்காலிக நீதிபதியாகவும் பின்னர் கூடுதல் நீதிபதியாகவும் ஆனார். 1947-ல் மும்பை உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதியாக ஆனார்.

இந்திய நாடு 1950 சனவரி 26ஆம் நாள் குடியரசு ஆனதும் இந்திய அரசு கனியாவை இந்திய உச்சநீதி மன்ற முதன்மை நீதிபதியாக பதவியில் அமர்த்தியது. குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத் கனியாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியில் இருக்கும்போதே மாரடைப்பால் கனியா காலமானார்.[2].

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
  1. "Former Hon'ble Chief Justices' of India: Hon'ble Mr. Justice Harilal Jekisundas Kania". Supreme Court of India. பார்க்கப்பட்ட நாள் 20 January 2016.
  2. Gardbois Jr., George H. (2011). Judges of the Supreme Court of India 1950-1989. Oxford University Press. pp. 13–20. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-807061-0. பார்க்கப்பட்ட நாள் 2016-01-20.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எச்._ஜே._கனியா&oldid=3926539" இலிருந்து மீள்விக்கப்பட்டது