உள்ளடக்கத்துக்குச் செல்

காஷ்மீர் பிரச்சினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காஷ்மீர் பிரச்சனை என்பது காஷ்மீர் மாநிலம் மீது இந்தியாவிற்கும், இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானிற்கும் இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறழ்ச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.[1]

ஆக்கிரமிப்புகள்

[தொகு]

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மேற்கு பகுதிகளையும், வடக்குப் பகுதிகளையும் சூலை 1947-இல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு செய்ததது. இப்பகுதிகளை ஆசாத் காஷ்மீர் மற்றும் வடக்கு நிலங்கள் என்ற பெயரில் பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. மற்றொரு அண்டை நாடான சீனா ஜம்மு கஷ்மீரின் கிழக்குப் பகுதியில் உள்ள அக்சய் சின் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பின்னர் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைய ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார்.

வரலாறு

[தொகு]

காஷ்மீர் மாநிலத்தின் ஆக்கிரமிப்பு தொடர்பாக 1947, 1965 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் இரண்டு நாடுகளுக்கு இடையே மூன்று முறை போர்கள் நிகழ்ந்துள்ளன. இந்த போர்கள் தவிர்த்து அவ்வப்போது ராணுவ மோதல்களும் நிகழ்ந்துள்ளன. இரு நாடுகளின் சார்பாகவும் பல ஆண்டுகளாக எல்லைப்புறத்தில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது.

முக்கிய நிகழ்வுகள்

[தொகு]

இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே உயர்மட்ட அளவில் பேச்சுவார்த்தைகள் பல நடைபெற்றுள்ளன. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள், வெளியுறவுத் துறை செயலாளர்கள், பிரதமர், அதிபர் போன்ற இருநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு மட்டங்களிளும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. இவ்வாறான பேச்சுகளின் முடிவில் சில முடிவுகள் எட்டப்பட்டாலும் கூட பிரச்சினை முற்றிலும் தீர்க்கப்படவில்லை.

இதுவரை நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்:

  • பாகிஸ்தான் மற்றும் சீனா தவிர பிற உலக நாடுகள் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை எனக் கூறி விட்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையும் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளும் தமக்குள் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் கூறிவிட்டது.[4]

இதனையும் காண்க

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]
  1. காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை
  2. http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/south/05/24/kashmir.timeline/index.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-11-07. பார்க்கப்பட்ட நாள் 2012-06-27.
  4. UN Security Council has its first meeting on Kashmir in decades
"https://ta.wikipedia.org/w/index.php?title=காஷ்மீர்_பிரச்சினை&oldid=3754159" இலிருந்து மீள்விக்கப்பட்டது