உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:காஷ்மீர் பிரச்சினை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காஷ்மீர் பிரச்சினை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பிறழ்ச்சனை - பிரச்சனை

[தொகு]

பயனர் இன்பம்குமார், பிரச்சனை என்பதை பிரழ்ச்சனை என மாற்றியுள்ளார். இதுவரை அந்த வார்த்தையை எங்கும் கேட்டறியாத என்னைப் போன்றவர்கள் இந்த கட்டுரைக்கு பார்க்கும் போது குழம்பக்கூடும். பிரச்சனை என்ற வார்த்தை விக்கிபீடியாவில் பயன்படுத்தப்படும் வார்த்தைதானே?. அதை திருத்த வேண்டியது அவசியம் தானா?. --எஸ்ஸார் (பேச்சு) 13:48, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

எஸ்ஸார்... இங்கு காண்க:[[1]] --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 14:04, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
சிவகுரு, நான் அதை பார்வையிட்டேன் நன்றி. இருந்தும் எனக்கான விடைகிடைக்கவில்லையே. --எஸ்ஸார் (பேச்சு) 14:14, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

"காஷ்மீர் முரண்பாடு" என்று இருக்கலாமே? ஆங்கில விக்கியும் அதே பொருளில்தான் உள்ளது (en:Kashmir conflict). --Anton (பேச்சு) 14:18, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]

காஷ்மீர் பிரச்சினை என்று நீங்கள் தேடினாலும், நிச்சயம் இப்பக்கத்தை வந்தடையலாம். முன்பு இலரத்திரன் (electron) என்று ஒரு பக்கத்தை உருவாக்கி பிறகு எதிர்மின்னி என்ற பக்கத்திற்கு நாம் வழிமாற்றவில்லையா ? அதைப் போன்றுதான். வழிமாற்றுவது தவறில்லை. இது தமிழ்ச்சொல்லாக இருந்தால் எந்த ஒரு ஐயமும் இல்லை. தமிழில்லை என்பதாலேயே இதனை மாற்ற முயன்றேன். பிறழ்ச்சனை, பிறழ்ச்சி, பிறழ்வு, பிறழ்வினை, சிக்கல், சர்ச்சை, புதிரு, புதிரி, புதிர்வு, புரியாதீர்வு என்று நல்ல தமிழ்ச் சொற்கள் ஏராளமாக இருக்கும் பொழுது அதனையும் பயன்படுத்துவதில் தவறில்லையே. --இராச்குமார் (பேச்சு) 14:43, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
மேலும் பிரச்சினை, பிரச்சனை என்ற இரண்டிற்கு உள்ள வேறுபாட்டைக் காணவும். --இராச்குமார் (பேச்சு) 14:55, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]
சிக்கல், பிரச்சினை என்ற வழக்கத்தில் இருக்கும் சொற்களுக்குப் பதிலாக நாம் புதியாக சொற்களைப் பயன்படுத்துவது இங்கு பொருந்தவில்லை. --Natkeeran (பேச்சு) 18:21, 27 சூன் 2012 (UTC)[பதிலளி]