திருமங்கலம் ஃபார்முலா கட்டுரை ஒரு சிறந்த ஆய்வின் மூலம் உருவானது. இதுபோன்ற ஆய்வின் அடிப்படையிலான கட்டுரைகள் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு அவசியம் தேவை. கட்டுரையை அளித்ததற்கு நன்றி எஸ்ஸார். (பயனரது பேச்சுப் பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போது கையெழுத்தினைப் பயன்படுத்தவும். யாரென்றறிய உதவியாக இருக்கும்.) :)
தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 04:08, 21 சூலை 2011 (UTC)Reply
ரவி அவர்களே இங்கு உள்குத்து..... அவ்வளவாக இல்லை. இருந்தாலும் எனக்கு ஏனோ தோன்றுகிறது உங்களுக்கு ஏதாவது பட்டமளித்தால் இந்த தருணத்தில் அது சிறப்பாக அமையுமே என்று !! (புகழ் போதை தமிழனின் சிறந்த போதை அல்லவா :-) ). --எஸ்ஸார் 15:31, 14 மார்ச் 2012 (UTC)
வேண்டாங்க வேண்டாம். பட்டமும் வேண்டாம் புகழும் வேண்டாம் போதையும் வேண்டாம் :) தமிழ் விக்கிப்பீடியா ஐயா, sir என்று அழைக்கும் வழக்கங்களைக் கூட தவிர்க்கிறோம்.--இரவி (பேச்சு) 12:52, 15 மார்ச் 2012 (UTC)Reply
அறிமுகத்துக்கு நன்றி, எஸ்ஸார். அடுத்த இரு வாரங்களுக்குத் தங்களைப் பற்றிய அறிமுகம் முதற்பக்கத்தில் இடம்பெறும். தொடர்ந்து சிறப்புடன் பங்களிக்க உளமார்ந்த வாழ்த்துகள்--இரவி (பேச்சு) 18:11, 20 மே 2012 (UTC)Reply
முதற்பக்க அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களது சிறப்பான பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 23:19, 20 மே 2012 (UTC)
உங்கள் முதற்பக்க அறிமுகம் கண்டு மிக்க மகிழ்ச்சி. உங்களது பங்களிப்புகள் தொடர வாழ்த்துகள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 23:22, 20 மே 2012 (UTC)Reply
முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் பெயர் சசிகுமார் என்று இப்பொழுதுதான் அறிந்து கொண்டேன்! காலம் தாழ்ந்துபோன வாழ்த்தெனினும், நீங்கள் ஊடகப் போட்டியில் முதல் பரிசு வென்றதற்கு என் வாழ்த்துகள். போட்டி என்று தெரிந்து, எளிய போட்டி ஊர்தி ஒன்றை இட்டே போட்டியில் வெற்றி பெற்றுவிட்டீர்கள் :)--செல்வா (பேச்சு) 15:11, 3 சூன் 2012 (UTC)Reply
:)நன்றி செல்வா!. போட்டியில் கலந்து கொள்வது ஒன்றுதான் எனது நோக்கமாக இருந்தது. அதில் வெற்றிபெறுவது பற்றி நான் யோசிக்கவில்லை. வேலை பளு காரணமாக என்னால் அதில் அதிகம் பங்களிக்க முடியாமல் போனது :-(. முதல் பரிசு பெற்றமை என்னை வியப்பில் ஆழ்த்தியது. 'மேலும் பல தேவையான ஊடகங்களை த.வி.க்கு பங்களிக்க வேண்டும்' என்று உள்ளுணர்வை எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறது அந்த பரிசு. தாங்கள் வாழ்த்திற்கு நன்றிகள் செல்வா. --எஸ்ஸார் (பேச்சு) 13:32, 4 சூன் 2012 (UTC)Reply
நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:29, 14 சனவரி 2013 (UTC)
+1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:57, 15 சனவரி 2013 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 11:52, 24 சூன் 2013 (UTC)Reply
தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ--02:11, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
திரு. எஸ்ஸார் சசிகுமார், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி! தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --ஜெயரத்தின மாதரசன்\உரையாடுக03:52, 16 அக்டோபர் 2013 (UTC)Reply
ஒரு மதுரைக்காரராக, 2015 மதுரை புத்தகத் திருவிழாவில் தமிழ் விக்கிப்பீடியா சாவடி அமைய பேருதவி புரிந்து ஒவ்வொரு நாளும் கலந்து கொண்டு சிறப்பாகப் பங்காற்றிய உங்கள் செயல்நயம் கண்டு மகிழ்ந்து இப்பதக்கத்தை வழங்குகிறேன். தொடர்ந்து சிறப்பாகப் பங்களிக்க வாழ்த்துகள். இரவி (பேச்சு) 17:51, 17 செப்டம்பர் 2015 (UTC)
வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:10, 8 திசம்பர் 2016 (UTC)Reply
வணக்கம்!
எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.
இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.
போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..
வணக்கம். இது பலருக்கும் பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
சென்ற மாதம், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய விக்கிப்பீடியா பயிற்சிகள் நடைபெற்றன. இந்த மாதமும் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பெருமளவில் வரும் புதுப்பயனர்களினால் புதிய கட்டுரைகளின் எண்ணிக்கையும் அண்மைய மாற்றங்களில் தொகுப்புகளும் கூடி வருகின்றன. இவர்களுக்கு வழிகாட்ட கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி.--இரவி (பேச்சு) 12:28, 7 சூன் 2017 (UTC)Reply
ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை
வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை இங்கு உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--இரவி (பேச்சு) 08:16, 20 சூன் 2017 (UTC)Reply
வணக்கம். திண்டுக்கல் மாவட்டத்தில் நீங்கள் பயிற்சி அளித்து வருவதாக அறிகிறேன். ஆசிரியர்கள் எழுதும் கட்டுரைகளை என்னால் இயன்றளவு முன்னேற்றி வருகிறேன். தலைப்பினை நகர்த்தினால், கீழ்காணும் செயலைச் செய்வேன். இந்தத் தகவலை பயிற்சி பெறுவோரிடம் தெரிவிக்கவும்; நன்றி!
ஸ்ரீவில்லிப்புத்துர் இரயில் நிலையம் என எழுதப்பட்டிருந்ததை ஸ்ரீவில்லிப்புத்தூர் தொடருந்து நிலையம் என நகர்த்தினேன். அதன்பிறகு இந்த அறிவிப்பினை பயனர் பேச்சுப் பக்கத்தில் தெரிவித்தேன். இப்படித் தெரிவித்தால் அவர், தான் எழுதிய கட்டுரையைத் தேடவேண்டிய அவசியமிருக்காது என்பது எனது எண்ணம். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 01:57, 30 சூன் 2017 (UTC)Reply
நன்றி சிவகுருநாதன். இங்கு ஆசிரியர்கள் பதிவேற்றும் பல கட்டுரைகள் துப்புரவு செய்யவேண்டிய அவசியமுள்ளவை. இருப்பினும் ஆசிரியர்களின் ஆர்வத்தை குறைக்க வேண்டாமென எண்ணி பல கட்டுரைகளை (:p) அவர்கள் மணல்தொட்டியிலிருந்து கட்டுரையாக மாற்றி இருக்கிறேன். தாங்கள் அதை கூடுமானவரை துப்புரவு செய்து உதவுங்கள்.--எஸ்ஸார் (பேச்சு) 08:58, 30 சூன் 2017 (UTC)Reply
மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளில் கலந்து கொண்டு வழிகாட்டியமைக்கு மிக்க நன்றி. ஒவ்வொரு ஊரிலும் இது போல் நமக்கு விக்கிப்பீடியர்கள் இருக்கிறார்கள் என்பது பெரும் வளம். நன்றி. --இரவி (பேச்சு) 06:12, 8 சூலை 2017 (UTC)Reply
The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.