இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ
இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ (Article 35A) ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வாழ்பவர்களில் நிரந்தர குடியிருப்பாளர்கள யார் என்பதை வரையறுக்கவும், நிரந்தர குடியிருப்பாளர்களுக்கு அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு, அரசு உதவித் தொகைகள் வழங்குதல் மற்றும் அசையாச் சொத்துகள் வாங்குவது மற்றும் விற்பது போன்ற இனங்களில் தீர்மானம் செய்ய, இந்திய அரசிலமைப்பு சட்டப் பிரிவு 35ஏ ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கு உரிமை வழங்கியுள்ளது.[1][2] இச்சட்டப்பிரிவு, ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், 14 மே 1954 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் படி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35ஏ, இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370, இணைப்பு (1)ல் சேர்க்கப்பட்டது.
பின்னணி
[தொகு]15 ஆகஸ்டு 1947 அன்று இந்திய விடுதலைக்கு முன்னர், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சி கொண்ட சுதேச சமஸ்தானமாக விளங்கியது.
26 அக்டோபர் 1947 அன்று ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீரை, 1947இந்திய விடுதலை சட்டத்தின் படி, இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும் ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்தியக் குடிமக்களாயினர்.[3][4]
ஜம்மு & காஷ்மீர் மாநில மக்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க வழிவகை செய்ய, 1949-இல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்தலின் கீழ் இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 இயற்றப்பட்டது.[5]
ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் ஒப்புதலுடன், 14 மே 1954 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஆணையின் படி, அரசியலமைப்பு சட்டப்பிரிவு 35ஏ, இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370, இணைப்பு (1)ல் சேர்க்கப்பட்டது.
இந்த சட்டத்தின் படி காஷ்மீர் மக்கள் மட்டுமே அங்கு நிலம் வாங்க முடியும். வெளி மாநிலத்தவர் எவருக்கும் இந்த உரிமை கிடையாது. மாநில அரசுப்பணிகளுக்கு அம்மாநிலத்தைச் சேராதவர்கள் யாரும் விண்ணப்பிக்க முடியாது. மேலும் இந்திய பாராளுமன்றம் இயற்றும் சட்டங்களை மறுக்கும் உரிமை காஷ்மீர் சட்ட மன்றத்திற்கு உண்டு. இப்படியான சலுகைகளை அரசியலமைப்புப் பிரிவு 35A அம்மாநிலத்திற்கு வழங்குகிறது. 1947ஆம் ஆண்டு காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்த பிறகு இந்தச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
நிரந்தர குடியிருப்பாளர்கள் தொடர்பான வழக்குகளும், பிணக்குகளும்
[தொகு]ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு தகுதி வழங்கும் இந்திய அரசிலமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தில் தீர்மானம் ஏதும் நிறைவேற்றப்படவில்லை என்பதால், இந்திய அரசிலமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ-வை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்து நீக்கம் செய்யக் கோரி சிலர் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.[6][7] மேலும் ஜம்மு காஷ்மீர் மக்கள் அரசியல் சட்டப்பிரிவு 35ஏ ஐ நீக்கக் கூடாது என ஆர்பாட்டங்கள் செய்துவருகின்றனர்.[8]
சட்டப் பிரிவு 35ஏ நீக்கம்
[தொகு]2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 35ஏ நீக்கப்பட்டது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் நிரந்தரக் குடியிரிமைப் பெற்றவர்களுக்கான சிறப்புச் சலுகைகள் நீக்கப்படுகிறது. மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு நடுவண் அரசின் ஒன்றியப் பகுதிகளாக 31 அக்டோபர் 2019 அன்று நிறுவப்படுகிறது.[9][10][11] இந்திய அரசு ஏற்கனவே இயற்றிய மற்றும் இயற்றப் போகும் அனைத்து சட்டங்களும் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கும் பொருந்தும்.
ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக கிரீஷ் சந்திர முர்மு என்பவர் 31 அக்டோபர் 2019 அன்று நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டார்.[12][13][14][15]
இதனையும் காண்க
[தொகு]- ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
- ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்
- இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370
- ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்ட முன்வடிவம் 2019
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Origin of Jammu and Kashmir: Analysis of Article 370 in Present Scenario" (in en-US). LexHindustan இம் மூலத்தில் இருந்து 2017-10-12 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171012042000/http://lexhindustan.com/%E2%80%8Borigin-of-jammu-nd-kashmir-analysis-of-article-370-in-present-scenario/.
- ↑ Rashid, D. A. "'If Article 35A goes, all Presidential Orders from 1950–75 will go'". Greater Kashmir. Archived from the original on 23 மார்ச்சு 2017. பார்க்கப்பட்ட நாள் 22 மார்ச்சு 2017.
- ↑ Patricia Gossman, Vincent Iacopino, Physicians for Human Rights,”The crackdown in Kashmir” (1993),page 10
- ↑ Bruce B. Campbell, Arthur David Brenner,” Death squads in global perspective: murder with deniability”(2002),page 271
- ↑ http://timesofindia.indiatimes.com/india/What-is-Article-370/articleshow/26780057.cms
- ↑ Supreme Court adjourns hearing on Article 35A in J&K
- ↑ Article 35A Highlights: Top Court Adjourns Hearing For Two Weeks
- ↑ ஜம்மூ-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து குறித்தான வழக்கு
- ↑ காஷ்மீர் சர்ச்சை: காஷ்மீரை பிரிக்கும் மசோதா மாநிலங்களவை நிறைவேறியது
- ↑ காஷ்மீர் சர்ச்சை: ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரிக்க மசோதா, சிறப்புரிமைகளை ரத்து செய்ய குடியரசுத் தலைவர் ஆணை
- ↑ மாநில அந்தஸ்தை இழந்து இரண்டாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர்: அமித் ஷா அறிவிப்பின் சாராம்சம்
- ↑ ஜம்மு - காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்: பதவியேற்றனர் துணை நிலை கவர்னர்கள்
- ↑ President's rule revoked in J&K, 2 Union Territories created
- ↑ Union Territories of Jammu and Kashmir, Ladakh come into existence
- ↑ ஜம்மு காஷ்மீர் 31 அக்டோபர் 2019 நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது
ஆதார நூற்பட்டி
[தொகு]- Constantin, Sergiu; Kössler, Karl (2014), "Jammu and Kashmir: A case of eroded autonomy", in Levente Salat; Sergiu Constantin; Alexander Osipov; István Gergo Székely (eds.), Autonomy Arrangements around the World: A Collection of Well and Lesser Known Cases, Romanian Institute for Research on National Minorities, pp. 113–156, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-606-8377-30-8
- Cottrell, Jill (2013), "Kashmir: The vanishing autonomy", in Yash Ghai; Sophia Woodman (eds.), Practising Self-Government: A Comparative Study of Autonomous Regions, Cambridge University Press, pp. 163–199, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1017/CBO9781139088206.006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-107-29235-2
- Das Gupta, Jyoti Bhusan (2012) [first published 1968], Jammu and Kashmir, Springer, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-011-9231-6
- Noorani, A. G. (2011), Article 370: A Constitutional History of Jammu and Kashmir, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-807408-3
{{citation}}
: Unknown parameter|subscription=
ignored (help) - Robinson, Cabeiri deBergh (2013), Body of Victim, Body of Warrior: Refugee Families and the Making of Kashmiri Jihadists, University of California Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-27421-1