கிரீஷ் சந்திர முர்மு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரீஷ் சந்திர முர்மு
The Lieutenant Governor of Jammu and Kashmir, Shri G.C. Murmu.jpg
துணைநிலை ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
31 அக்டோபர் 2019
முன்னவர் புதிய பணியிடம் (முந்தைய ஆளுநர், சத்யபால் மாலிக்)
இந்திய நிதித் துறையின் செலவினச் செயலாளர்
பதவியில்
1 மார்ச் 2019 – 31 அக்டோபர் 2019
முன்னவர் அஜய் நாராயணன் ஜா
தனிநபர் தகவல்
பிறப்பு 21 நவம்பர் 1959 (1959-11-21) (அகவை 60)
மயூர்பஞ்ச், ஒடிசா, இந்தியா
தேசியம் இந்தியர்
வாழ்க்கை துணைவர்(கள்) சுமிதா
பிள்ளைகள் 2
இருப்பிடம் * இராஜ் பவன் காஷ்மீர் (கோடைக் காலம்), மற்றும் இராஜ் பவன் ஜம்மு (குளிர் காலம்)
படித்த கல்வி நிறுவனங்கள் *உத்கல் பல்கலைக்கழகம்
  • பர்மிங்காம் பல்கலைக்கழகம்
பணி இந்தியக் குடிமைப் பணி

கிரீஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu) (பிறப்பு:21 நவம்பர் 1959), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.[1] ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

1985-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாராக பணிபுரிந்தவர்.[2]

கல்வி[தொகு]

கிரிஷ் சந்திர முர்மு ஒடிசாவின் உத்கல் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய துணைநிலை ஆளுநராக[தொகு]

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி 31 அக்டோபர் 2019 அன்று முதல் ஒன்றியப் பகுதியானது.[3] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 நள்ளிரவு அன்று கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[4] [5][6][7] [8]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீஷ்_சந்திர_முர்மு&oldid=2937357" இருந்து மீள்விக்கப்பட்டது