2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2024 சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தல்

← 2014
 
கட்சி சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி பாரதிய ஜனதா கட்சி இந்திய தேசிய காங்கிரசு
கூட்டணி குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி[1] தேசிய ஜனநாயகக் கூட்டணி -

 
கட்சி ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி
கூட்டணி குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி -

நடப்பு முதலமைச்சர்

குடியரசுத் தலைவர் ஆட்சிஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும். 2023 இந்திய சட்டமன்றத் தேர்தல்களின் போது ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியத்தின் மொத்தமுள்ள 114 சட்டமன்றத் தொகுதிகளில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறும். பாக்கிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 24 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நிறுத்தி வைக்கப்படுகிறது.[2][3]நவம்பர் 2018ம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டு[4], 20 டிசம்பர் 2018 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி நிறுவப்பட்டது.[5]

2014ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இறுதியாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு உரிமைகளைத் திரும்ப பெற்று[6]2019ல் மாநிலத் தகுதி இழந்த[7] பின்னர் ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதிக்கு 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத் தேர்தல் ஆகும்.

பின்னணி[தொகு]

நவம்பர் 2014ல் நடைபெற்ற ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவில் முப்தி முகமது சயீத் தலைமையில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சிகள் இணைந்து அரசு அமைத்தது. முப்தி முகமது சயீத் முதலமைச்சரானர்.[8][9]

7 சனவரி 2016 முப்தி முகமது சயீத் காலமானார்.[10] பின் மெகபூபா முப்தி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.[11]

அரசியல் மாற்றங்கள்[தொகு]

சூன் 2018ல் முதலமைச்சர் மெகபூபா முப்தி அரசுக்கு வழங்கியிருந்த ஆதரவை பாரதிய ஜனதா கட்சி விலக்கிக் கொண்டது.[12]அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[13]நவம்பர் 2018ல் ஜம்மு காஷ்மீர் சட்டமன்றம் கலைக்கப்பட்டது.[4]20 டிசம்பர் 2018 அன்று மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைக்கு வந்தது. [14] இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய குலாம் நபி ஆசாத் 2022ம் ஆண்டில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியை நிறுவினார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மற்றும் தொகுதிகளை மறுசீரமைத்தல்[தொகு]

2019ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்புச் சலுகைகள் இந்திய நாடாளுமன்றத்தால் நீக்கப்பட்டது. மேலும்2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின்படி 31 அக்டோபர் 2019 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதி என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 2020ம் ஆண்டில் ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கையின்படி, ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியில் 114 சட்டமன்றத் தொகுதிகள் ஏற்படுத்தப்பட்டது. அதில் 24 சட்டமன்றத் தொகுதிகள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில் உள்ளது.[15]20 மே 2022 அன்று ஜம்மு காஷ்மீர் தொகுதிகள் மறுவரையறை அறிக்கை நடைமுறைக்கு வந்தது.[16]

 • ஜம்மு கோட்டம் - 43 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 6 தொகுதிகள்)
 • காஷ்மீர் கோட்டம் - 47 தொகுதிகள் (புதிதாக சேர்க்கப்பட்டது 1 தொகுதி)
 • ஜம்மு காஷ்மீர் பகுதியில் மொத்தம் - 90 தொகுதிகள்
 • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள ஆசாத் காஷ்மீர் மற்றும் கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதிகளில்- 24 தொகுதிகள்
 • மொத்தச் சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை - 114

கட்சிகளும், கூட்டணிகளும்[தொகு]

இதனையும் காண்க[தொகு]

அடிக்குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. People's Alliance for Gupkar Declaration
 2. "J&K Assembly polls unlikely this year" (in en-IN). The Hindu. 2022-08-11. https://www.thehindu.com/news/national/other-states/jk-assembly-polls-unlikely-this-year/article65754592.ece. 
 3. "EC pushes back publication of J&K rolls; may delay elections". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-09-05.
 4. 4.0 4.1 "J&K assembly dissolved after Mehbooba stakes claim to form govt". mint (in ஆங்கிலம்). 2018-11-21. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 5. "President's rule imposed in Jammu and Kashmir". The Indian Express (in ஆங்கிலம்). 2018-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 6. "President declares abrogation of provisions of Article 370" (in en-IN). The Hindu. 2019-08-07. https://www.thehindu.com/news/national/president-declares-abrogation-of-provisions-of-article-370/article28842850.ece. 
 7. "President Kovind gives assent to J&K Reorganisation Bill, two new UTs to come into effect from Oct 31". The Indian Express (in ஆங்கிலம்). 2019-08-09. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 8. Varma, Gyan (2015-03-01). "Mufti sworn in as J&K CM as PDP, BJP find common ground". mint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-06-26.
 9. "Mufti Mohammad Sayeed sworn in as chief minister of Jammu and Kashmir". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mufti-mohammad-sayeed-sworn-in-as-chief-minister-of-jammu-and-kashmir/articleshow/46418167.cms. 
 10. "J&K chief minister Mufti Mohammad Sayeed dies at 79". mint (in ஆங்கிலம்). 2016-01-07. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 11. "Mehbooba takes oath as CM of J&K". Deccan Herald (in ஆங்கிலம்). 2016-04-05. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 12. "BJP ends alliance with PDP in J&K; Mehbooba Mufti resigns as chief minister". Firstpost (in ஆங்கிலம்). 2018-06-19. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 13. "Governor's rule imposed in Jammu and Kashmir" (in en-IN). The Hindu. 2018-06-20. https://www.thehindu.com/news/national/other-states/governors-rule-imposed-in-jk/article61824395.ece. 
 14. "President's rule imposed in Jammu and Kashmir". The Indian Express (in ஆங்கிலம்). 2018-12-20. பார்க்கப்பட்ட நாள் 2022-06-27.
 15. "The Jammu and Kashmir Delimitation report" (in en-IN). The Hindu. 2022-05-09. https://www.thehindu.com/news/national/other-states/the-jammu-and-kashmir-delimitation-report/article65394233.ece. 
 16. "Orders of J&K Delimitation Commission take effect". Hindustan Times (in ஆங்கிலம்). 2022-05-21. பார்க்கப்பட்ட நாள் 2022-05-21.