உள்ளடக்கத்துக்குச் செல்

ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978
ஜம்மு காஷ்மீர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978
சான்று[1]
நிலப்பரப்பு எல்லைஜம்மு காஷ்மீர்
இயற்றியதுஜம்மு காஷ்மீர் சட்டமன்றம்

ஜம்மு காஷ்மிர் பொதுப் பாதுகாப்புச் சட்டம், 1978 (Jammu and Kashmir Public Safety Act, 1978 (PSA) இந்தியாவின் வடக்கில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கை பராமரிப்பதற்கு எதிராக தீங்கு விளைவிப்பதைத் தடுப்பதற்கு ஒரு நபரை காவலில் வைக்கப்படும் ஒரு தடுப்புக் காவல் சட்டமாகும்.[2][3] இது இந்திய அரசு இயற்றிய 1980 தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்றதே. [4]சேக் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வராக இருந்தபோது இச்சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தின் மையக் கருத்துக்கள்[தொகு]

  • மாவட்ட நீதிபதி தகுதியில் உள்ள காவல்துறை ஆணையாளர் அல்லது மாவட்ட ஆட்சியர்களே இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கலாம்.
  • 2012-அம் ஆண்டில் இந்தச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்டவர்களைக் கைது செய்யக் கூடாது என்று மாற்றம் செய்யப்பட்டது. பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்ட 4 வாரங்களுக்குள் ஆலோசனை குழு ஒன்று அமைக்கப்படும். 8 வாரங்களுக்குள் கைதானவர்கள், சரியான காரணத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து இந்தக் குழு ஆராயும். சரியான காரணம் இருப்பின் 12 மாதங்கள் முதல் 2 வருடங்கள் தடுப்புக் காவலிலிருந்து வெளியே வர முடியாது.
  • இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒரு நபரை 2 ஆண்டுகள் வரை எவ்வித விசாரணையின்றி தடுப்புக் காவலில் வைக்க முடியும். மேலும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டியதில்லை. தடுப்புக்காவல் என்பது பாதுகாப்பானது, தண்டனைக்குரியது அல்ல.

2019 - 2020 ஆண்டுகளில் பொதுப் பாதுகாப்புச் சட்டம்[தொகு]

இந்திய நாடாளுமன்றம் ஆகஸ்டு, 2019-இல் 2019-இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரைமைப்புச் சட்டத்தை இயற்றிய போது, ஜம்மு காஷ்மீரின் பொது அமைதிக்காக, காஷ்மீர அரசியல் தலைவர்கள் மற்றும் பிரிவினைவாதிகளை, ஜம்மு காஷ்மீர் ஆளுநர் இந்தப் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி முதலியவர்கள் 6 மாதங்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். பின்னர் பொதுப் பாதுகாப்புச் சட்ட்டத்தின் கீழ் அவரவர் வீடுகளில் மார்ச் 2020 வரை தடுத்து வைக்கப்பட்டனர்.[5][6]

மேற்கோள்கள்[தொகு]

ஆதராங்கள்[தொகு]

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]