சம்பா மாவட்டம், ஜம்மு காஷ்மீர்
சம்பா மாவட்டம் | |
---|---|
மாவட்டம் | |
ஜம்மு காஷ்மீரில் சம்பா மாவட்ட அமைவிடம், இந்தியா | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஜம்மு காஷ்மீர் |
தலைமையிடம் | சம்பா |
பரப்பளவு | |
• மொத்தம் | 904 km2 (349 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,18,898 |
• அடர்த்தி | 350/km2 (910/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | இந்தி & உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | www |
சம்பா மாவட்டம் (Samba District), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின், ஜம்மு மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு புதிதாக 2008ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மாவட்டமாகும். ஜம்மு மண்டலத்தில் உள்ள பத்து மாவட்டங்களில் சம்பா மாவட்டமும் ஒன்றாகும்.
மாவட்ட எல்லைகள்
[தொகு]வடகிழக்கில் உதம்பூர் மாவட்டம், தெற்கிலும் மேற்கிலும் பாகிஸ்தான், தென்கிழக்கில் கதுவா மாவட்டம், வடமேற்கில் ஜம்மு மாவட்டம் எல்லைகளாக கொண்டுள்ளது சம்பா மாவட்டம்.
நிர்வாகம்
[தொகு]904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சம்பா மாவட்டம் சம்பா, விஜய்பூர், புர்மண்டல், காக்வால் என நான்கு வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. மேலும் ஊரக வளர்ச்சிக்காக சம்பா, விஜய்பூர், புர்மண்டல், காக்வால் என நான்கு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது. [1]ஊராட்சி ஒன்றியங்கள் பல கிராமப் பஞ்சாயத்துகளை கொண்டுள்ளது. சம்பா மாவட்டத்தின் பெரிய கிராமம் ராஜ்புரா கிராமம் ஆகும்.
அரசியல்
[தொகு]இந்த மாவட்டத்தில் சம்பா, விஜய்பூர் என இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்டுள்ளது. அதில் சம்பா சட்டமன்ற தொகுதி பட்டியல் சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.[2]சம்பா மாவட்டத்தின் இந்த இரண்டு சட்டமன்ற தொகுதிகளும் ஜம்மு நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டவை.[3]
மக்கள் வகைப்பாடு
[தொகு]2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சம்பா மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 318,898 ஆக உள்ளது. மொத்த மக்கள் தொகையில் ஆண்கள் 169,124 ஆகவும் மற்றும் பெண்கள் 149,774 ஆகவும் உள்ளனர். ஆண் - பெண் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 886 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 353 நபர்கள் வீதம் உள்ளனர். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் 2,28,139 ஆக உள்ளனர். எழுத்தறிவு 81.41% ஆக உள்ளது. ஆண்கள் எழுத்தறிவு 88.41% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 73.64% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்கு உட்பட்டவர்கள் 38,669 ஆக உள்ளனர். [4]
சமயம்
[தொகு]சம்பா மாவட்டத்தில் இந்துக்களின் எண்ணிக்கை 2,75,311 (86.33 %) ஆகவும், இசுலாமியர்களின் தொகை 22,950 ஆகவும், சீக்கியர்களின் தொகை 17,961 ஆகவும் உள்ளனர். [5]
போக்குவரத்து வசதிகள்
[தொகு]சாலைப் போக்குவரத்து
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 1எ சம்பா மாவட்டத்தை மாநிலத்தின் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கிறது.
தொடருந்து சேவை
[தொகு]இந்திய இரயில்வேயின் தொடருந்துகள் ஜம்மு, உதம்பூர், சண்டிகர் மற்றும் புதுதில்லியுடன் இணைக்கிறது. [6]
விமான சேவைகள்
[தொகு]அருகில் உள்ள விமான நிலையம், சம்பாவிலிருந்து 31 கிலோ மீட்டர் தொலைவில், ஜம்முவில் உள்ள சத்வாரி விமான நிலையம் ஆகும்.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Statement showing the number of blocks in respect of 22 Districts of Jammu and Kashmir State including newly Created Districts பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம் dated 2008-03-13, accessed 2008-08-30
- ↑ "ERO's and AERO's". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-10-22. பார்க்கப்பட்ட நாள் 2008-08-28.
- ↑ "Assembly Constituencies - Corresponding Districts and Parliamentary Constituencies of Jammu and Kashmir". Chief Electoral Officer, Jammu and Kashmir. Archived from the original on 2008-12-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-30.
- ↑ http://www.census2011.co.in/census/district/640-samba.html
- ↑ http://www.census2011.co.in/census/district/640-samba.html
- ↑ http://indiarailinfo.com/search/jammu-tawi-jat-to-samba-smbx/81/0/84
- ↑ http://www.expedia.co.in/vc/cheap-flights/jammu-airport-ixj/